Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
இந்தியாவின் புதிய டாப் 10 பணக்காரார்கள் யார் தெரியுமா? முதலிடத்தில் இருப்பது இவர்தான்...!
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தில் உள்ளது. உலகின் பல முக்கிய நிறுவனங்களுக்கு இந்தியா தாயகமாக உள்ளது. இந்தியாவின் வளமான வணிக நிலப்பரப்பும், பன்முகத்தன்மைக் கொண்ட தொழில்துறையும் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த பில்லினியர்களை உருவாகியுள்ளது.
உலகளவில் பொருளாதார பதட்டங்கள், பங்குச் சந்தை வீழ்ச்சி போன்ற பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதிலும், Forbes அறிக்கையின் படி, இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. இந்த இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு வியக்கத்தக்க வகையில் $941 பில்லியயாக அதிகரித்துள்ளது. மேலும் அவர்களில், முதல் 10 செல்வந்தர்கள் குறிப்பிடத்தக்க செல்வத்தின் அதிபதியாகி இருக்கிறார்கள். Forbes வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2025-ல் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களாக இருப்பவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முகேஷ் அம்பானி
முதலிடத்தில் எல்லோரும் எதிர்பார்த்தது போல முகேஷ் அம்பானி உள்ளார். முகேஷ் அம்பானி $105 பில்லியன் நிகர மதிப்புடன் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார். அவரது வியாபார சாம்ராஜ்ஜியம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய், எரிவாயு, சில்லறை விற்பனை மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. பங்குச் சந்தைகளில் கடுமையான வீழ்ச்சி இருந்தபோதிலும், அம்பானி 5G மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற புதிய தொழில்நுட்பங்களின் உதவியால் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
கௌதம் அதானி
உள்கட்டமைப்பு, எரிசக்தி, சரக்கு மற்றும் விளைபொருட்களில் கவனம் செலுத்தும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி $92 பில்லியனுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது நிறுவனம் அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது, இருப்பினும் அதானி குழுமத்திற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியப்பங்கு உள்ளது.
சாவித்ரி ஜிண்டால்
ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவராக எஃகு மற்றும் மின்சாரத் துறைகளில் இருந்து $40.2 பில்லியன் சொத்துக்களுடன் சாவித்ரி ஜிண்டால் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவரது நிர்வாகத்திறனும், புது தொழில்நுட்ப வளர்ச்சியும் குறிப்பாக மின்சார வாகனங்களில், இந்தியாவின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதோடு, அவரது நிறுவனத்தின் அடையாளத்தையும் வலுப்படுத்துகிறது.
சுனில் மிட்டல்
சுனில் மிட்டல் $34.2 பில்லியனுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். ஏர்டெல்லின் நிறுவனராக, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றை அவர் நிர்வகிக்கிறார். அவரது நிர்வாகத் திட்டங்கள் இணைப்பு மற்றும் தரவு சேவைகளை மேம்படுத்தி, கடுமையான போட்டி மற்றும் சவால்கள் இருந்தபோதிலும் அவரது நிறுவனத்தை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி தள்ளுகின்றன.
ஷிவ் நாடார்
HCL டெக்னலாஜிஸின் நிறுவனர் ஷிவ் நாடார், $33.2 பில்லியனுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ஐடி துறை வளர்ச்சியில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது. கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது அவரது சொத்து மதிப்பு சற்று குறைந்திருந்தாலும், இந்தியாவின் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் செல்வாக்கு மிக்க நபராக அவர் உள்ளார்.
ராதாகிஷன் தமானி
இந்தியாவின் சில்லறை வணிக மன்னன் என்று அழைக்கப்படும் ராதாகிஷன் தமானி, ஒரு சாதாரண தொடக்கத்திலிருந்து நாட்டின் பணக்கார தொழிலதிபராக மாறியுள்ளார். வெற்றிகரமான பங்குச் சந்தை முதலீட்டிற்குப் பிறகு அவர் 2002 இல் DMart-யை நிறுவினார், இன்று அவரது சில்லறை வணிகச் சங்கிலி இந்தியா முழுவதும் 430 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. VST Industries மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் அவர் மேற்கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட முதலீடுகள் அவரது செல்வத்தை அதிகரிக்கின்றன. அவரது சொத்து மதிப்பு 2025 இல் $28.2 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
திலீப் ஷாங்வி
$26.3 பில்லியன் சொத்துக்களுடன், Sun Pharmaceutical Industries நிறுவனர் திலீப் ஷாங்வி ஏழாவது இடத்தில் உள்ளார். அவரது நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றாகும், உள்நாட்டு மற்றும் சர்வதேச மருந்து சந்தைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது பொதுவான மருந்துகள் மற்றும் புதுமையான சிகிச்சைகளுக்கு பெயர் பெற்றது.
பஜாஜ் குடும்பம்
இந்தியாவின் பணக்கார வணிக வம்சங்களில் ஒன்றான பஜாஜ் குடும்பம், கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான பஜாஜ் குழுமத்தை நிர்வகிக்கிறது, இது மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர் பஜாஜ் ஆட்டோ மற்றும் நிதி சேவைகள் பிரிவான பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவற்றிற்கு மிகவும் பிரபலமானது. பஜாஜ் குடும்பத்தின் நிகர மதிப்பு 2025 இல் $21.8 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சைரஸ் பூனவல்லா
$21.4 பில்லியன் மதிப்புள்ள சைரஸ் பூனவல்லா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிறுவனராவார், அவர் தடுப்பூசி உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ளார். சுகாதாரப் பராமரிப்புக்கு, குறிப்பாக தடுப்பூசி உற்பத்தி மற்றும் உலகளவில் பொது சுகாதார முயற்சிகளில் அவரது பணி மிகவும் முக்கியமானது.
குமார் பிர்லா
$20.7 பில்லியன் சொத்து மதிப்புடன் குமார் பிர்லா, ஜவுளி, சிமென்ட், தொலைத்தொடர்பு மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு வியாபாரத்தைக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனமான ஆதித்யா பிர்லா குழுமத்திற்குத் தலைமை தாங்குகிறார். பிர்லா குழுமம் இந்திய வணிகத்தில் ஒரு தூணாக உள்ளது, இது இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பன்முகப்படுத்தப்பட்ட வாய்ப்புகளை உருவாக்குகிறது.



Click it and Unblock the Notifications

