Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
உலகின் டாப் 10 பணக்கார அரசர்கள் இவர்கள்தான்... முதலிடத்தில் எந்த நாட்டின் ராஜா இருக்கிறார் தெரியுமா?
உலகின் நம்பர் ஒன் செல்வந்தர் என்றால் அது எலோன் மஸ்க் என்று நாம் நன்கு அறிவோம். 430.9 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களுடன் எலோன் மஸ்க் 2024-ன் உலகின் மிகப்பெரிய செல்வந்தராக மாறியுள்ளார். அதைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி ஜெஃப் பெசோஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இவர்கள் தங்கள் வியாபாரத்தின் மூலம் பெரும் செல்வத்தை சம்பாதித்துள்ளனர், ஆனால் பிறக்கும் போதே பெரும் செல்வத்துடன் பிறந்த சிலர் உள்ளனர். இவர்கள் கற்பனை செய்ய முடியாத அதிர்ஷ்டத்தைக் கொண்டுள்ளனர், அவர்கள் உலகின் பல்வேறு அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் எலோன் மஸ்க்க்கை விட பணக்காரர்களாகவும் இருக்கலாம். உலகின் டாப் 10 பணக்கார அரசர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் (தாய்லாந்து மன்னர்) - $43 பில்லியன்
மஹா வஜிரலோங்கோர்ன்கிட்டதட்ட $43 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார அரசர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனம் மற்றும் வங்கியில் பங்கு உள்ளது, இது அவரது செல்வத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி பாங்காக்கில் உள்ள ரியல் எஸ்டேட் முதலீடுகளை மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் மேற்பார்வையிடுகிறார்.
முகமது பின் சயீத் அல் நஹ்யான் (UAE ஜனாதிபதி மற்றும் அபுதாபியின் ஆட்சியாளர்) - $30 பில்லியன்
UAE ஜனாதிபதி மற்றும் அபுதாபியின் ஆட்சியாளரான முகமது பின் சயீத் அல் நஹ்யான் உலகின் இரண்டாவது பணக்கார மன்னர் ஆவார், அவரது சொத்தின் மதிப்பு $30 பில்லியன் என்று கணிக்கப்பட்டுள்ளது. அல் நஹ்யான் குடும்பம் உலகின் எண்ணெய் இருப்புகளில் ஆறு சதவீதத்தை வைத்திருக்கிறது மற்றும் விளையாட்டு முதல் ஃபேஷன் வரையிலான வணிகங்களில் முதலீடுகளைக் கொண்டுள்ளது.
ஹசனல் போல்கியா (புருனே சுல்தான்) - $28 பில்லியன்
1967 முதல் புருனே நாட்டை ஆட்சி செய்து வரும் சுல்தான் ஹசனல் போல்கியாவின் மொத்த சொத்து மதிப்பு 28 பில்லியன் டாலர். அவரின் அசாதாரண செல்வம் புருனேயின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சுல்தான் ஹசனல் போல்கியா ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளார், அவர் தனது தனிப்பட்ட கார் சேகரிப்பில் கிட்டதட்ட 7000 கார்களை வைத்துள்ளார்.
சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் (சவுதி அரேபியாவின் மன்னர்) - $18 பில்லியன்
மன்னர் சல்மான் சவூதி அரேபியாவின் முதல் மன்னர் மற்றும் நிறுவனர் ஆவார், தோராயமாக $18 பில்லியன் நிகர சொத்துக்களுடன் அவர் நான்காம் இடத்தில் இருக்கிறார். 2015ஆம் ஆண்டு மன்னராக பதவியேற்பதற்கு முன்பு, அரசர் சல்மான் பல பதவிகளை வகித்துள்ளார். சவூதி அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்படும் வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் மற்றும் பரந்த எண்ணெய் தொழில் மற்றும் பல்வகைப்பட்ட முதலீடுகளில் இருந்து பெரும் செல்வம் வருகிறது.
முகமது பின் ரஷித் அல் மக்தூம்(UAE பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர்) - $14 பில்லியன்
ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவர் மற்றும் துபாயை உலகளாவிய நகரமாக மாற்றுவதில் முன்னோடியாக உள்ளார். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஜுமேரா குரூப் மற்றும் டிபி வேர்ல்ட் போன்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் உருவாக்கத்தின் பின்னணியிலும் அவர் இருந்துள்ளார். 2023 இல் எமிரேட்ஸ் குழுமத்தின் அறிக்கையின்படி, அவரது நிறுவனம் $119.8 பில்லியன் அசாதாரண வருவாயை ஈட்டியது.
ஹென்றி (லக்சம்பர்க் கிராண்ட் டியூக்) - $4 பில்லியன்
உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராக இருந்தாலும், லக்சம்பேர்க்கின் கிராண்ட் டியூக் சம்பளம் எதுவும் வாங்குவதில்லை. $4 பில்லியன் நிகர மதிப்பு கிராண்ட் டியூக்கின் செல்வம் அவரது சொத்துக்களில் இருந்து வருகிறது, இதில் ரியல் எஸ்டேட் பங்குகள் மற்றும் பல தொழில்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் இருந்து வருகின்றது.
ஹான்ஸ்-ஆடம் II (லிச்சென்ஸ்டைன் இளவரசர்) - $4 பில்லியன்
லிச்சென்ஸ்டைன் இளவரசரான ஹான்ஸ்-ஆடம் II, தற்போது ஐரோப்பாவின் செல்வந்த மன்னராக சுமார் $4 பில்லியன் நிகர மதிப்புடன் இருக்கிறார். இளவரசர் ஹான்ஸ்-ஆடமின் பெரும் செல்வம் அரச குடும்பத்தின் தனியார் வங்கி மற்றும் செல்வ மேலாண்மை நிறுவனமான எல்ஜிடி குழுமத்திலிருந்து வருகிறது.
தமீம் பின் ஹமத் அல் தானி (கத்தார் எமிர்) - $2 பில்லியன்
தமீம் பின் ஹமத் அல் தானியின் நிகர மதிப்பு $2 பில்லியன் ஆகும், இதன் பெரும்பகுதி QIA என அழைக்கப்படும் கத்தார் முதலீட்டு ஆணையத்தின் உரிமையிலிருந்து வருகிறது. கத்தாரின் தற்போதைய எமிரின் செல்வம் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறையில் பிரதிபலிக்கிறது. தமிம் பின் ஹமத் அல் தானி மற்றும் கத்தார் அரசாங்கம் நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களை மேற்பார்வையிடுகின்றன.
முகமது VI (மொராக்கோ மன்னர்) - $2 பில்லியன்
மொராக்கோவின் மன்னராக இருந்த போது ஆறாம் முகமது அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். சொசைட்டி நேஷனல் டி இன்வெஸ்டிஸ்மென்ட், ஓசிபி குரூப் மற்றும் ரியல் எஸ்டேட் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது.
ஆல்பர்ட் II (மொனாக்கோ இளவரசர்) - $1 பில்லியன்
மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் II, 1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் பணக்கார மன்னர்களின் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார். இளவரசரின் செல்வம், ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலாத்துறையில் நாட்டின் வெற்றியில் இருந்து பெருமளவில் உருவாக்கப்படுகிறது. பல வணிக முதலீடுகளால் அவரது செல்வம் மேலும் மேம்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications
