Latest Updates
-
3 கத்திரிக்காயும், 2 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது!
ஆச்சரியப்பட வைக்கும்.. உலகில் இதுவரை நடந்துள்ள சில விசித்திரமான குற்றங்கள்!
Bizarre Crimes From Around the World: உலகில் தினந்தோறும் பல்வேறு குற்றங்கள் நடந்தவாறு தான் உள்ளன. குற்றங்கள் என்றதும் பலரது மனதில் தோன்றுவது கொலைகள், கொள்ளைகள் போன்றவையாகவே இருக்கும். ஆனால் இந்த மாதிரியான குற்றங்களை கேட்கும் போதே நமக்கு மனதில் மிகுந்த அச்சம் எழும்.
ஆனால் உலகின் சில பகுதிகளில் நடந்து பதிவான சில குற்றங்களைக் கேட்டால், பயத்திற்கு பதிலாக சிரிப்பு தான் வரும். அந்த வகையில் பல விசித்திரமான குற்றங்கள் உலகின் பல பகுதிகளில் பதிவாகியுள்ளன. நீங்கள் இதுவரை உலகெங்கிலும் செய்யப்பட்டுள்ள சில வினோதமான குற்றங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே டாப் 10 வினோதமான குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. குடித்துவிட்டு வீட்டை அலங்கரித்த திருடன்
ஆம், நீங்கள் படித்தது சரி தான். வெளிநாட்டில் திருடன் ஒருவன் நன்கு குடித்துவிட்டு ஒரு வீட்டில் நுழைந்து, அந்த வீட்டில் எதையும் திருடவில்லை. ஆனால் அப்போது கிறிஸ்துமஸ் என்பதால் அந்த வீடு முழுவதையும் அழகாக அலங்கரித்துவிட்டு, பண்டிகை கொண்டாட்டத்தில் உற்சாகத்தில் இருந்தான். என்ன தான் திருடாமல் ஒரு வீட்டை அழகாக அலங்கரித்தாலும், தெரியாத ஒரு வீட்டில் நுழைந்து இப்படி செய்தது குற்றம் தானே!
2. திருடிய கடையிலேயே வேலைக்கு விண்ணப்பிக்கும் திருடன்
இதுவும் ஒரு விநோதமான ஒரு கதை. 36 வயதுடைய ஒருவர் ஒரு கடையில் நுழைந்து வெடிமருந்துகள் மற்றும் சன் கிளாஸ்களை வாங்கினார். இப்படி வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்காமல், அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால் அதற்கு பின் நடந்த சம்பவம் தான் அதிர்ச்சியடையச் செய்தது. அது என்னவென்றால், திருடிவிட்டு சென்ற அந்நபர் 2 மணிநேரம் கழித்து, மீண்டும் அந்த கடைக்கு வந்து வேலைக்கு விண்ணப்பித்தார்.
அங்கு ஏற்கனவே சிசிடிவி கேமரா இருந்ததால், அதை வைத்து போலீசார் அந்நபரை அழைத்துச் சென்று, திருடிய பொருட்கள் அனைத்தையும் மீட்டெடுத்தனர். எதுவும் திருடிய இடத்திற்கு மீண்டும் வந்து வேலை கேட்டு வருவது இன்னும் வித்தியாசமானது தானே!
3. திருடனே புகார் கொடுத்தது
திருடன் ஒருவன் வங்கி ஒன்றை கொள்ளையடிக்க முயன்று வங்கிக்குள் நுழைந்தான். ஆனால் அங்கு தான் அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவெனில் அந்த வங்கியில் பணம் இல்லை. பணம் இல்லை என்று அறிந்த திருடன், அந்த வங்கியின் மீது பணம் இல்லை என்று அந்த வங்கிக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்தான்.
அதற்காக போலீஸை அழைக்கக்கூட தயாராக இருந்தான். ஆனால் அதன் பின் அத்திருடன் ஓடிவிட்டான். சில மணிநேரம் கழித்து போலீசார் அத்திருடனை கைது செய்தனர். எப்படியெனில், அந்த திருடன் இந்த வங்கி கொள்ளை குறித்து டிக்டாக்கில் ஷாட் வீடியோவை உருவாக்கியுள்ளான். என்ன ஒரு புத்திசாலியான திருடன் பாருங்க...
4. தனது பெயரையும், முகவரியையும் கொடுத்துவிட்டு செல்லும் திருடன்
இதுவும் ஒரு வங்கி கொள்ளை தான். இதில் திருடன் ஒருவன் வங்கியை கொள்ளையடிக்க சென்றுள்ளான். அத்திருடனின் பெயர் மைக்கேல் ஹாரெல். இத்திருடன் வங்கிக்குள் ஒரு அணியுடன் நுழைந்து, அங்குள்ள டெல்லரிடம் ஒரு காகிதத்தை நீட்டினான். அந்த காகிதத்தில் அந்த திருடன் தனது பெயர், முகவரி மற்றும் தனக்கு என்ன வேண்டும் என்பது போன்ற தகவலை விரிவாக எழுதி கொடுத்துள்ளான்.
இந்த தகவல் உடனே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார் அவனை கைது செய்தனர். ஆனால் அப்போது மைக்கேல் தனது கொள்ளையை நினைத்து மிகவும் பெருமை அடைந்ததோடு, இது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று விரும்பியுள்ளானாம். இதுல என்ன சந்தோஷமும், பெருமையும் இருக்கு-ன்னு தெரியல...
5. நகைச்சுவை கேட்டு சிரித்து சிக்கிய திருடன்
ஓக் ஹில் சமூகத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்கள் வீட்டின் மாடியில் உள்ள திருடனை பிடித்துள்ளனர். அதுவும் எப்படி என்று கேட்டால், நீங்களே சிரிப்பீர்கள். அது எப்படியெனில் அந்த வீட்டு உறுப்பினர்கள் வீட்டின் கீழே ஜோக் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மாடியில் இருந்த திருடன் கீழே சொல்லப்பட்டுள்ள ஜோக்கைக் கேட்டு சப்தமாக சிரிக்கத் தொடங்கியுள்ளான். இதனால் அந்த தம்பதிகள் உடனே போலீஸை அழைத்து, இந்த திருடனை பிடித்துக் கொடுத்தனர். எப்படியெல்லாம் திருடனுங்க இருக்கானுங்க-ன்னு பாருங்க..
6. ஐன்ஸ்டீனின் மூளையைத் திருடிய மருத்துவர்
மூளையை திருடுவதைப் பற்றி அதிகம் கேள்விபட்டிருக்கமாட்டீர்கள். ஆனால் ஐன்ஸ்டீன் இறந்த போது, அவருக்கு பிடித்த இடத்தில் அவரை அடக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது மருத்துவர் அவரை அடக்கம் செய்வதற்கு முன், ஐன்ஸ்டீனின் மூளையை திருடியுள்ளார். ஐன்ஸ்டீனின் மூளையில் டாக்டர் ஆராய்ச்சி நடத்துகிறார் என்பதை ஒரு பத்திரிகையாளர் கண்டுபிடித்து அவர் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது வரலாற்றில் மிகவும் விசித்திரமான குற்றங்களில் ஒன்றாகும்.
7. பாலத்தைத் திருடும் திருடர்கள்
பென்சில்வேனியாவில் உள்ள ஒரு பாலத்தில் இருந்த எஃகுகளை கொள்ளையர்கள் மெதுவாக திருடிச் சென்றுள்ளனர். அதுவும் இந்த பாலத்தில் இருந்து சுமார் $100,000 மதிப்புள்ள எஃகுகளை திருடியுள்ளனர்.
8. கொட்டகையை திருடிய திருடர்கள்
பொதுவாக வீட்டில் உள்ள விலைமதிப்புமிக்க பொருட்களைத் தான் திருடுவார்கள். ஆனால் கொட்டகையை யாரேனும் திருடுவார்களா? ஆனால் ஒரு குடும்பம் விடுமுறைக்காக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டிற்கு வெளியே போடப்பட்டுள்ள கொட்டகை மட்டும் காணாமல் போனதை கண்டுள்ளனர். இப்படி கொட்டகையை திருடுவதும் வித்தியாசமான குற்றங்களில் ஒன்று தானே.
9. அபார்ட்மெண்ட்டில் புலி
2003 ஆம் ஆண்டு ஹார்லெட் சொசைட்டியில் வசிக்கும் ஒருவர் தனது அபார்ட்மெண்ட்டில் புலியை வளர்க்க விரும்பினார். இவர் புலியை வீட்டிற்கு கொண்டு வரும் போது மிகவும் குட்டியாக இருந்ததால், யாருக்கும் இது தெரியவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் புலி நன்கு பெரிய புலியாக வளர்ந்துவிட்டது. அதோடு, அந்நபர் முதலையையும் உடன் வைத்து வளர்த்து வந்துள்ளார். ஆனால் புலிக்கும், முதலைக்கும் ஒத்துவரவில்லை. ஒருகட்டத்தில் போலீசார் இதை கண்டுபிடித்து, அவற்றை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டனர்.
10. X-ரேவை திருடும் திருடர்கள்
இந்த திருடர்கள் சற்று வித்தியாசமானவர்கள் மற்றும் X-ரேவில் அதிக ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில், சில திருடர்கள் ஒரு மருத்துவமனையில் இருந்து X-ரே முழுவதையும் திருடி சென்றுள்ளனர். ஏனெனில் இந்த திருடர்கள் இந்த X-கதிர்களில் இருந்து வெள்ளியைப் பிரித்தெடுக்கிறார்கள் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எதுவாயினும், இது சற்று வினோதமான குற்றங்களுள் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications