Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் டாப் 10 பிரபலங்கள்..ஒரு போஸ்ட்க்கு எவ்வளவு வாங்குறாங்க தெரியுமா?
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் உலகம் இண்டர்நெட்டாலும், சமூக வலைத்தளங்களாலும் மிகவும் சுருங்கி விட்டது. ஆன்லைன் சாம்ராஜ்யத்தில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணற்ற தளங்களில் இன்ஸ்டாகிராம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமான மற்றும் செல்வாக்குமிக்க தளமாக இன்ஸ்டாகிராம் உருவெடுத்துள்ளது, இது உலகளவில் பில்லியன் கணக்கான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்ட அளவிலான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தால் உங்கள் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமே நீங்கள் பெரும் தொகையை சம்பாதிக்கலாம்.

ஒரு பிரபலத்தின் சக்தி மற்றும் செல்வாக்கை யாராலும் முறியடிக்க முடியாது அல்லது அவர்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க இயலாது. சில பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் மூலமாகவே கோடிக்கணக்கான பணத்தை மிகவும் எளிதாக சம்பாதிக்கின்றனர். இந்த பதிவில் இன்ஸ்டாகிராம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிரபலங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவர் மற்றும் அவருக்கு உண்மையில் அறிமுகம் தேவையில்லை. இன்ஸ்டாகிராமில் அவரை 616 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். காலபந்து பற்றி தெரியாதவர்களுக்குக் கூட ரொனால்டோவை பற்றி தெரியும்.
ரொனால்டோ எந்தவொரு விளையாட்டு பிராண்டிற்கும் கனவுப் பிரபலமாக இருக்கிறார், அவரும் அதைச் சிறப்பாகச் செய்கிறார். மற்ற பிரபலங்களை போல அல்லாமல் அவர் தனது வேலையை மிகவும் பொறுப்புடன் செய்கிறார். அவரின் ஒரு பதிவுக்கு அவர் கிட்டதட்ட $ 3,234,000 சம்பாதிக்கிறார்.
லியோ மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி ஒரு அர்ஜென்டினா பிரபல கால்பந்து வீரர், அவருக்கு உண்மையில் எந்த அறிமுகமும் தேவையில்லை. இன்ஸ்டாரகிராமில் அவரை 496 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். அவர் அர்ஜென்டினாவின் தேசிய அணிக்காகவும், ஸ்பானிஷ் கிளப்பான பார்சிலோனாவுக்காகவும் ளையாடுகிறார். அவர் தன்னுடைய ஒரு பதிவின் மூலம் கிட்டதட்ட $2,597,000 சம்பாதிக்கிறார்.
செலினா கோம்ஸ்
செலினா கோம்ஸ் ஒரு ஸ்பானிஷ் பாடகி மற்றும் நடிகை, அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் இன்ஸ்டாகிராமில் 429 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் மற்றும் பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமான இன்ஸ்டாகிராமர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தனது ஒவ்வொரு பதிவுக்கும் $2,558,000 சம்பாதிக்கிறார்.
கைலி ஜென்னர்
கைலி அழகு சாதன பிராண்டின் உரிமையாளர், கைலி அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகு துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இருக்கிறார். கைலி ஒரு பிரபலமான இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர், அவரை 399 மில்லியன் மக்கள் பின்பற்றுகிறார்கள், அவர் ஒரு பதிவுக்கு $600,000 வசூலிக்கிறார் மேலும் பெரும்பாலும் ஆடம்பர ஃபேஷன் மற்றும் அழகு பிராண்டுகளை ஆதரிப்பவராகக் காணப்படுகிறார். ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் சராசரியாக $2,386,000 சம்பாதிக்கிறார்.
டுவைன் ஜான்சன்
"தி ராக்" என்று பிரபலமாக அறியப்படும் டுவைன் ஒரு ஹாலிவுட் நடிகர் ஆவார், அவர் முதலில் WWE என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மல்யுத்த வீரராக பிரபலமடைந்தார். அவரை 395 மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராமில் பினபற்றுகின்றனர். அவர் தனது திடமான உடலமைப்பிற்கு பெயர் பெற்றவர் மற்றும் ஹாலிவுட் அதிரடி திரைப்படங்களில் அவரை பார்க்கலாம். அவர் ஒரு பதிவின் மூலம் சராசரியாக $2,326,000 சம்பாதிக்கிறார்.
அரியானா கிராண்டே
அரியானா ஒரு விருது பெற்ற அமெரிக்க பாடகி, நடிகை மற்றும் பாடலாசிரியர் ஆவார். அவரது சமீபத்திய ஆல்பமான "ஜஸ்ட் லுக் அப்" உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய இசை பிரியர்களை கவர்ந்துள்ளது. அவரை இன்ஸ்டாகிராமில் 380 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் 2,264,000 டாலர் சம்பாதிக்கிறார்.
கிம் கர்தாஷியன்
கிம் கர்தாஷியன் மற்றொரு உலக புகழ்பெற்ற பிரபலம் ஆவார், அவர் தனது குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சி தொடரில் இடம்பெற்ற பின்னர் பெரும் புகழ் பெற்றார். அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரியான கைலி ஜென்னரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தனது அழகுசாதனப் பிராண்டான KKW பியூட்டியை அறிமுகப்படுத்தினார். அவரை இன்ஸ்டாகிராமில் 364 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். அவர் ஒரு பதிவின் மூலம் சராசரியாக $2,176,000 சம்பாதிக்கிறார்.
பியோனஸ் நோல்ஸ்
பியோனஸ் மிகவும் பிரபலமான பாடகி மற்றும் நடிகை ஆவார், அவர் முன்னர் பிரபலமான இசைக்குழுவான "டெஸ்டினிஸ் சைல்ட்" இன் ஒரு பகுதியாக இருந்தார். அவர் உலகின் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவர் மற்றும் உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான கேசட்டுகளை விற்றுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் 319 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். அவர் ஒரு பதிவின் மூலம் சராசரியாக $ 1,889,000 சம்பாதிக்கிறார்.
க்ளோ கர்தாஷியன்
க்ளோ ஜென்னர்-கர்தாஷியன் குழுவைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபர். அவர் குட் அமெரிக்கன் என்ற ஆடை பிராண்டை நிறுவினார். அவர் கைலியின் அழகு பிராண்டிலும் பங்குதாரராக இருக்கிறார். அவரை 311 மில்லியன் மக்கள் இன்ஸ்டகிராமில் பின்பற்றுகின்றனர். அவர் ஒரு பதிவின் மூலம் $1,866,000 சம்பாதிக்கிறார்.
ஜஸ்டின் பீபர்
ஜஸ்டின் பீபர் ஒரு பிரபலமான கனேடிய பாடகர் ஆவார், அவர் இந்த பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளார், அவருக்கு உலகளாவிய ரசிகர் பட்டாளம் உள்ளது, அதனால் இன்ஸ்டாகிராமில் அவரை 294 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். அவர் தன்னுடைய ஒரு பதிவின் மூலம் சராசரியாக $1,763,000 சம்பாதிக்கிறார்.



Click it and Unblock the Notifications
