Latest Updates
-
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவில் அதிக புத்திசாலிகள் உள்ள டாப் 10 மாநிலங்கள்... தமிழ்நாடு எத்தனாவது இடத்தில இருக்கு தெரியுமா?
Top 10 Indian States With Highest IQ: உலகிலேயே மிகவும் பன்முகத்தன்மை கொண்ட சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்று இந்தியா. 140-கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா 28 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் மொழிகள் மற்றும் கலாச்சாரங்களில் மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் கல்வி முறை மற்றும் நுண்ணறிவு அளவு (IQ) வரை நீள்கிறது. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது.
IQ என்பது ஒருவரின் அறிவாற்றல் திறன்களின் பிரதிபலிப்பாகும், ஆனால் அது பெரும்பாலும் தரமான கல்வி மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான பிற வசதிகள் கிடைப்பதையும் சார்ந்துள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. இந்தியாவில் உயர்ந்த IQ கொண்ட டாப் 10 இந்திய மாநிலங்கள், அதற்கான காரணம் என்னவென்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கேரளா
கடவுளின் தேசமான கேரள மிக உயர்ந்த IQ-வையும், இந்தியாவின் மிக உயர்ந்த கல்வியறிவு விகிதம் கொண்ட தென்மாநிலமாகவும் உள்ளது. இங்கு சராசரி IQ 110-112 ஆக உள்ளது. கேரளாவின் உயர் கல்வியறிவு விகிதம், கல்வித்துறையில் செய்யப்படும் முதலீடு மற்றும் மக்களின் பொதுவான கற்றல் கலாச்சாரம் போன்றவை இதற்கு காரணமாக உள்ளது. கேரள பள்ளிகள் புரிதல், விமர்சன சிந்தனை மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன, இதன் விளைவாக கல்வியில் மேம்பட்ட முடிவுகள் கிடைக்கின்றன.
டெல்லி
இந்தியாவில் அதிக IQ கொண்ட இரண்டாவது மாநிலமாக நமது தலைநரகமான டெல்லி உள்ளது, இங்கு மக்களின் சராசரி மதிப்பிடப்பட்ட IQ 106 முதல் 109 வரை உள்ளது. இந்தியாவின் தலைநகரில் சிறந்த தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்விக்கான எளிமையான அணுகல் மற்றும் போட்டி நிறைந்த கல்வி சூழல் உள்ளது. நகரமயமாக்கல் மற்றும் CBSE போன்ற தேசிய அளவிலான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது.
தமிழ்நாடு
நமது தமிழ்நாட்டு மாணவர்கள் வாரியத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் சராசரியாக 103-106 IQ உடன் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அறிவியல் மற்றும் கணிதத்தில் கவனம் செலுத்துவதும், பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்களின் அதிக எண்ணிக்கையும், அதிக அறிவாற்றல் செயல்திறனுக்கு வழிவகுக்கிறது.
மஹாராஷ்டிரா
இந்தியாவின் பொருளாதார நகரமாக இருக்கும் மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த IQ தோராயமாக 102-104 ஆகும். மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் உள்ள நகர்ப்புற மக்கள்தொகையில் அதிகமான நபர்கள் தரமான கல்வி மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மேம்படுத்தும் சிறப்பு பாடங்கள் போன்றவற்றை எளிதில் அனுபவிக்கின்றனர்.
கர்நாடகா
இந்தியாவில் அதிக தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் கொண்ட நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் சராசரி IQ 102-103 ஆக உள்ளது. பெங்களூருவின் தாக்கமும், STEM கல்வியில் கவனம் செலுத்துவதும் முதல் 5 இடத்திற்குள் கர்நாடகா இடம் பெற முக்கிய காரணமாக உள்ளது.
உத்தரப் பிரதேசம்
இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம், சராசரி IQ 99 ஐக் கொண்டுள்ளது. இங்கு நிலவும் நகர்ப்புற-கிராமப்புற இடைவெளி மக்கள் கல்வி பெறுவதை மிகவும் கடினமாக்குகிறது. இருப்பினும், பள்ளிப்படிப்பு மற்றும் எழுத்தறிவை மேம்படுத்துவதற்கான சமீபத்திய முயற்சிகள் இங்கு ஓரளவு நேர்மறையான முடிவுகளைத் தருகின்றன.
பஞ்சாப்
பஞ்சாபின் சராசரி கிட்டதட்ட IQ 99 ஐ நெருங்குகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கலவையும், சண்டிகர் போன்ற நகரங்களில் அறிவுசார் நிறுவனங்களின் அதிகரிப்பும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
பீகார்
பீகாரின் சராசரி IQ தோராயமாக 96 ஆக உள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது பீகாரில் எழுத்தறிவு மற்றும் கல்விக்கான அணுகல் மேம்பட்டுள்ளது, இருப்பினும் இது சமூக-பொருளாதார காரணிகளால் கல்வி இப்போதும் பெரும்பாலான மக்களுக்கு கிடைக்காமலிருக்கிறது.
சண்டிகர்
இந்தியாவின் சிறிய, நகரமயமாக்கப்பட்ட யூனியன் பிரதேசமாக இருப்பதால், சண்டிகரின் சராசரி IQ தோராயமாக 99 ஆகும். கல்வி மற்றும் ஆங்கில வழிக் கல்வியை எளிதாகப் பெறுவது இங்குள்ள மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது.
குஜராத்
குஜராத்தில் சராசரி IQ 97 என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியும், மாநில அரசுக்கு கல்வியில் அதிகரித்து வரும் கவனம் மாநிலத்தின் அறிவாற்றல் செயல்திறனை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications

