Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
உலகில் அதிக தற்கொலைகள் நடக்கும் டாப் 10 நாடுகள்... இந்தியாவில் எவ்வளவு தற்கொலைகள் நடக்குது தெரியுமா?
தற்போதைய வேகமான உலகத்தில் மோசமான வாழ்க்கை முறையால் தற்கொலை விகிதங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த அதிகரித்து வரும் தற்கொலை விகிதங்களுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் முதல் சமூகக் காரணங்கள் என பல காரணங்கள் இருக்கலாம். தற்கொலை என்பது தனிநபரை மட்டுமல்ல, உலகளவில் குடும்பங்கள் மற்றும் சமூகங்களையும் பாதிக்கும் ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது. மக்களின் உடல் ஆரோக்கியத்தைப் போலவே மன நலனுக்கும் முன்னுரிமை அளித்து வந்தால் இந்த பிரச்சினையைத் தடுக்கலாம்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 15-29 வயதுடையவர்கள் அதிகம் மரணிப்பதற்கு மூன்றாவது முக்கிய காரணமாக தற்கொலை உள்ளது. உலகம் முழுவதும் 720,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை காரணமாக இறக்கின்றனர். சில நாடுகளில் தற்கொலை விகிதங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த பதிவில் உலகளவில் அதிக தற்கொலை விகிதங்களை கொண்ட டாப் 10 நாடுகள் என்னென்ன மற்றும் இந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

லெசோதோ
தென்னாப்பிரிக்காவில் உள்ள லெசோதோ, உலகிலேயே அதிக தற்கொலை விகிதத்தைக் கொண்டுள்ளது, இது 100,000 பேருக்கு சுமார் 36.7 பேர் தற்கொலை செய்கின்றனர். இங்கு நிலவும் அதிக வறுமை, வேலையின்மை மற்றும் எச்.ஐ.வி விகிதங்கள் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன. கூடுதலாக, போதுமான சுகாதார விழிப்புணர்வு இல்லாததது இங்கு மனநலப் பிரச்சினைகளை அதிகரிக்கிறது.
எஸ்வதினி
உலகிலேயே இரண்டாவது பெரிய தற்கொலை விகிதத்தை எஸ்வதினி கொண்டுள்ளது, இங்கு 100,000 பேருக்கு சுமார் 31.8 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வறுமை, நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சுகாதார அமைப்பு மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மனநல வசதிகள் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
கயானா
தென் அமெரிக்காவில் உள்ள கயானா, உலகின் அதிக தற்கொலை விகிதம் கொண்ட மூன்றாவது நாடாகும், இங்கு 100,000 பேரில் சுமார் 26.3 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மனநோய் தொடர்பான பிரச்சினைகள், குடிப்பழக்கம், பொருளாதார சிக்கல்கள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் போன்ற ஏராளமான காரணங்களால் இங்கு தற்கொலைகள் அதிகரித்து வருகிறது.
ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ளது, இங்கு 100,000 பேருக்கு சுமார் 25.4 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இங்கு பல தசாப்தங்களாக நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, வேலையின்மை மற்றும் சுகாதார வசதிகளின் பற்றாக்குறை போன்றவை இதற்கு காரணமாக உள்ளது.
சாலமன் தீவுகள்
பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றாந சாலமன் தீவுகள், வேலையின்மை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மனநோய் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளால் இந்த பட்டியலில் உள்ளது, இது 100,000 பேருக்கு 22.5 என்ற விகிதத்தில் அதிக தற்கொலை விகிதம் உள்ளது.
சுரினாம்
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சுரினாம், உலகிலேயே அதிக தற்கொலை விகிதம் கொண்ட நாடுகளில் ஆறாவது இடத்தில உள்ளது, இது சாலமன் தீவுகளைப் போலவே 100,000 பேருக்கு 22.5 ஆகும். மோசமான மனநல சுகாதார அமைப்பு, குறைந்த விழிப்புணர்வு மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் ஆகியவை தற்கொலை வழக்குகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் காரணிகளாகும்.
உருகுவே
உருகுவே இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது, 100,000 பேருக்கு 22.0 அதிக தற்கொலை விகிதங்களுடன் இந்த நாடு மோசமான நிலையில் உள்ளது. நகர்ப்புற மன அழுத்தம், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் தனிமை போன்றவை இதற்கு காரணமாக உள்ளது.
தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவின் வறுமை, வன்முறை மற்றும் மனநலம் பிரச்சினைகள் போன்றவை நாட்டின் தற்கொலை விகிதம் 100,000 பேருக்கு 21.1 ஆக இருப்பதற்கு காரணிகளாக உள்ளன. இங்கு, அதிகளவு இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மைக்ரோனேஷியா
மைக்ரோனேஷியா என்பது ஒரு பசிபிக் தீவு நாடாகும், அங்கு 100,000 பேருக்கு 20.8 என்ற அதிக இளைஞர் தற்கொலை விகிதங்கள் பதிவாகியுள்ளன. மன அழுத்தம், மோசமான வேலை வாய்ப்புகள் மற்றும் மோசமான சுகாதார வசதிகள் ஆகியவை இந்த மோசமான விளைவுக்கு காரணமாக இருக்கின்றன.
தென் கொரியா
இந்த பட்டியலில் உள்ள நாடுகளிலேயே தென் கொரியா மட்டுமே வளர்ந்த நாடாகும். கல்வி அழுத்தம், வேலை தொடர்பான மன அழுத்தம் மற்றும் சமூக தனிமை ஆகியவை 20.6 என்ற அதிக தற்கொலை விகிதங்களுக்கு பங்களிக்கும் குறிப்பிடத்தக்க காரணங்களாகும். மேம்பட்ட சுகாதார அமைப்பு இருந்தபோதிலும், வேலை மற்றும் மனரீதியான பிரச்சினைகள் மக்களை தற்கொலை நோக்கி தள்ளுகிறது.
இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
உலகில் அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. 140 கோடிக்கும் அதிக மக்களைக் கொண்ட இந்தியாவில் 100,000 பேருக்கு 12.6 என்ற தற்கொலை விகிதம் உள்ளது. சமூக அழுத்தம் , நிதி நெருக்கடி, தேர்வு மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற சவால்கள் நாடு தழுவிய மன ஆரோக்கியத்தை பாதிக்கும் மிகவும் பரவலான காரணிகளாக உள்ளன.



Click it and Unblock the Notifications
