Latest Updates
-
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்..
சிறந்த கல்வி முறை உள்ள டாப் 10 நாடுகள்... டாப் 100-ல் கூட வராத இந்தியா... எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Countries With the Best Education System: கல்வி என்பது ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மட்டுமல்ல வலுவான மற்றும் வெற்றிகரமான தேசத்திற்கும் அடித்தளமாக உள்ளது. ஒரு நல்ல கல்வி முறை என்பது மாணவர்களை படிப்பில் சிறந்து விளங்கச் செய்வது மட்டுமல்ல, எதிர்காலத் தலைவர்கள், சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பொறுப்புள்ள குடிமக்களையும் உருவாக்குவதாகும்.
உலகில் சில நாடுகள் மாணவர்களுக்கு உயர்தர கல்வியை வழங்குவதில் தனித்து நிற்கின்றன, இது மாணவர்களை தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றியை அடைய சிறப்பாக தயார்படுத்துகிறது. இந்த நாடுகள் அனைத்து மாணவர்களிடமும் சமமான அணுகுமுறை, திறமையான ஆசிரியர்கள், நவீன உள்கட்டமைப்பு மற்றும் நடைமுறை கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. இதன் விளைவாக, இந்த நாடுகளில் பயிலும் ணவர்கள் உலகளாவிய மதிப்பீடுகளில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள், அதிக பட்டப்படிப்பு விகிதங்களைக் கொண்டுள்ளனர் மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

இந்த பட்டியலில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டாலும், அவை அனைத்தும் அறிவார்ந்த மற்றும் திறமையான ஒரு எதிர்கால தலைமுறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உலகில் சிறந்த கல்வி முறையைக் கொண்டுள்ள டாப் 10 நாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தென் கொரியா
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தென் கொரியா. தென் கொரியாவின் கல்வி முறை அதன் கடுமைக்கு பெயர் பெற்றது, இது குறிப்பாக மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியலில் அதிக சாதனைகளை செய்ய வழிவகுக்கிறது. தென் கொரியா உலகிலேயே அதிக கல்லூரி பட்டதாரிகளைக் கொண்டுள்ளது, இங்கு 69% கல்லூரி பட்டதாரி விகிதம் உள்ளது. உயர்கல்வி தென் கொரிய மக்களின் வாழ்க்கையின் கலாச்சாரரீதியாகவும், கல்விரீதியாகவும் முக்கியமான பகுதியாக உள்ளது. தற்போது தென் கொரியா மெய்ஸ்டர் பள்ளி மூலம் ஒரு புதிய வடிவ கல்வியையும் பரிசோதித்து வருகிறது.
டென்மார்க்
டென்மார்க் ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இங்கு 3 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளில் 97% பேர் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். டென்மார்க் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலில் சிறந்த கல்வியை வழங்கும் நாடுகளில் முன்னணியில் உள்ளது. இங்கு 16 வயது வரை பள்ளிப்படிப்பு இலவசம் மற்றும் கட்டாயமானது, மேலும் சிறு வயதிலிருந்தே படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனைகளை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
நெதர்லாந்து
நெதர்லாந்தில் 5 முதல் 16 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்வி ஒழுங்குபடுத்தப்பட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டச்சு கல்வி முறை உலக பிரபலமானது மற்றும் உயர்தர கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கும், ஆராய்ச்சியை மையமாகக் கொண்ட கல்வி கலாச்சாரத்திற்கும் தாயகமாக உள்ளது. நெதர்லாந்தின் கூட்டு முயற்சி அதன் குடிமக்களில் 79% பேருக்கு மூன்றாம் நிலை மட்டத்தில் கல்வி கற்பிக்கிறது, இது மக்களுக்கு உயர்கல்வியில் வழங்கும் உறுதியான கொள்கையை பிரதிபலிக்கிறது.
பெல்ஜியம்
பெல்ஜியம் ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறது, 3 முதல் 4 வயது மாணவர்களுக்கான ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வித் திட்டங்களில் 98% பேர் சேர்க்கப்படுகிறார்கள். பெல்ஜியத்தில் உயர்நிலைப் பள்ளியை முடிப்பவர்களின் விகிதமும் 93% ஆக உள்ளது. பெல்ஜியத்தின் பன்மொழிக் கல்வி முறை மாணவர்களை உலகமயமாக்கப்பட்ட சூழலில் வெற்றிகளை அடைய தயார்படுத்துகிறது.
ஸ்லோவேனியா
ஸ்லோவேனியா அதன் உயர்நிலைப் பள்ளி படிப்பவர்களின் எண்ணிக்கை 95% ஆகவும் மற்றும் வாசிப்பு, கணிதம் மற்றும் அறிவியலில் வலுவான செயல்திறனுக்காகவும் தனித்து நிற்கிறது. ஸ்லோவேனியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7% சதவீதத்தை கல்வியில் முதலீடு செய்கிறது மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில் மாநில பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணமில்லாத இளங்கலை பட்டங்களை வழங்குகிறது.
ஜப்பான்
ஜப்பானின் கல்வி முறை அதன் உயர் கல்வியறிவு விகிதங்களுக்காகவும், கல்வியுடன் சேர்த்து ஒழுக்கத்தில் கவனம் செலுத்துவதற்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 65% கல்லூரி பட்டப்படிப்பு விகிதத்துடன், ஜப்பான் உயர்கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்பதை ஊக்குவிக்கிறது. மேலும் உலகெங்கிலும் உள்ள பல கல்வி பாடத்திட்டங்களைப் போலவே, ஜப்பானின் கல்வி பாடத்திட்டமும் கல்விக்கு மட்டுமின்றி, நெறிமுறை சார்ந்த கல்விக்கும் முன்னுரிமை அளிக்கிறது, இதனால் குழந்தைகள் வலுவான பொறுப்புணர்வுடன் வளர்கிறார்கள்.
ஜெர்மனி
ஜெர்மனியில் கல்வியை தொழிற்கல்வியுடன் இணைக்கும் இரட்டைக் கல்வி முறை உள்ளது. இந்த கட்டமைப்பு மாணவர்கள் தத்துவார்த்த அறிவு மற்றும் நடைமுறைத் திறன்கள் இரண்டையும் பெற அனுமதிக்கிறது. ஜெர்மனி தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை இலவசக் கல்வியை வழங்குகிறது, இது மக்களுக்கு தரமான கல்விக்கான சமமான அணுகலை உறுதி செய்கிறது. ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பொறியியல், வாகனப் படிப்புகள் போன்றவற்றின் கல்வியின் தரம் உலகப்புகழ் பெற்றது.
பின்லாந்து
மாணவர் நல்வாழ்வு, சமத்துவம் மற்றும் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கற்றல் பாதைகள் ஆகியவற்றில் முக்கியத்துவம் அளிக்கும் புதுமையான கல்வி முறைக்கு பின்லாந்து பெயர் பெற்றது. இங்கு அனைத்து மட்டங்களிலும் கல்வி இலவசம், மேலும் ஆசிரியர்கள் இங்கு நன்றாக மதிக்கப்படுகிறார்கள். கல்வி கட்டாயமாக இருந்தாலும், பின்லாந்து வழக்கமான கல்வி முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, இங்கு படைப்பாற்றல் மற்றும் விமர்சன சிந்தனைக்கு முன்னுரிமை அளிக்கிறது.
நார்வே
நார்வேயில், 6-16 வயது வரை அரசாங்க உதவியுடன் மாணவர்களுக்கு இலவசமான கல்வி வழங்குகிறது மற்றும் உயர் படிப்புகளுக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது. நார்வே அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6.7% சதவீதத்தை கல்விக்காக செலவிடுகிறது மற்றும் மாணவர்களின் விமர்சன சிந்தனை, STEM பாடங்கள் மற்றும் மொழித் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கற்றல் பிரச்சினைகள் உள்ள மாணவர்களுக்கு தனிக்கவனம் வழங்கப்படுகிறது.
அயர்லாந்து
அயர்லாந்து அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% சதவீதத்தை கல்விக்காக செலவிடுகிறது. இந்த முதலீடு அயர்லாந்து சர்வதேச கல்வி தரவரிசை பட்டியலில் இடம்பெயர உதவுகிறது. அயர்லாந்து 93% உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விகிதத்தையும் 63% கல்லூரி பட்டமளிப்பு விகிதத்தையும் அடைந்துள்ளது, இது கல்வியில் அயர்லாந்து எப்படி சிறப்பாக செயல்படுகிறது என்பதை விளக்குகிறது.
இந்திய கல்வி முறை எத்தனாவது இடத்தில் உள்ளது?
இந்தியா தனது கல்வி முறையில் 76% கல்வியறிவு விகிதத்துடன் உலகில் 101-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருந்தாலும், இந்திய கல்வி முறையில் காலாவதியான பாடத்திட்டம், மனப்பாடம் செய்தல், நடைமுறை திறன்கள் இல்லாமை மற்றும் தரமான கல்விக்கான சமமற்ற அணுகல் போன்ற பிரச்சினைகளால் பின்னடைவுகளை சந்திக்கிறது. கிராமப்புற-நகர்ப்புற இடைவெளிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை ஆகியவை கற்றல் விளைவுகளை பாதிக்கின்றன.



Click it and Unblock the Notifications
