Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
Today Rasi Palan 20 July 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூலை 20ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களின் நல்ல செயல்பாட்டின் பலத்தால் உங்கள் உயர் அதிகாரிகளை ஆச்சரியப்படுத்துவீர்கள். விரைவில் அதன் சரியான பலனைப் பெறுவீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் உயரக்கூடும். இருப்பினும், நீங்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும். காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, பொருளாதார நிலையில் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் தவறான முடிவுகளின் விளைவுகளை நீங்கள் அனுபவிக்க நேரிடலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் துணையுடன் உங்கள் நடத்தை சரியாக வைத்திருக்க வேண்டும். வேலையில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12:50 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத்துணையின் கோபம் உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். இன்று உங்களுக்குள் ஒரு சின்ன விஷயத்துக்காக பெரிய சண்டை வர வாய்ப்புள்ளது. வேலையில் இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் விரைவில் முன்னேறலாம். பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:55 மணி முதல் இரவு 7:20 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, காதல் விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு ஏதேனும் காதல் முன்மொழிவு வரலாம். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அரசு ஊழியர்கள் தங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். தனியார் நிறுவன் ஊழியர்களுக்கு இன்று முக்கியமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் காலை 11 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்கள் உடல்நலம் மேம்படும். இன்று உங்கள் முக்கிய பணிகளில் கவனம் செலுத்த முடியும். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அன்றாட வேலைகளைச் செய்து முடிப்பதில் உங்கள் துணைக்கு உதவுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வேலையை முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செய்வீர்கள். இன்று நீங்கள் வேலை விஷயமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 9:55 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு இன்னும் வலுப்பெறும். உங்கள் திருமண வாழ்க்கையில் புதிய மற்றும் அழகான திருப்பம் வரலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பண பரிவர்த்தனைகள் செய்யும்போது அவசரப்பட வேண்டாம். உடல்நலம் சம்பந்தமான பிரச்சனை வரலாம். உங்கள் தினசரி வழக்கத்தில் மாற்றங்கள் தேவை,
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:20 மணி முதல் மாலை 6 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, குடும்ப உறுப்பினரின் தவறான நடத்தை உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும். உங்களை நீங்களே கட்டுப்படுத்துவது நல்லது. அலுவலகத்தில் உங்கள் வேலையை மிக வேகமாக முடிக்கவும். இல்லையெனில், உங்களின் சில வேலைகள் இன்று முழுமையடையாமல் போகலாம். பண விஷயத்தில் இன்று சாதாரணமாக இருக்கும். உங்களைப் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் இனிமையானதாக இருக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுவோர் விரும்பிய பலன்களைப் பெறலாம். காதலைப் பற்றி பேசுகையில், உங்கள் காதல் துணையுடனான சந்திப்பு அற்புதமாக இருக்கும். உங்கள் உறவில் அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் கசப்பான வார்த்தைகள் உங்கள் மனதைப் புண்படுத்தும். மனதில் பல வகையான எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். நீங்கள் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:35 மணி முதல் காலை 11:35 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணைக்காக ஏதாவது சிறப்புச் செய்ய திட்டமிடலாம். உங்கள் துணைக்கு அவருக்கு பிடித்த பரிசை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம். சட்ட விஷயங்களில் எந்த வித அலட்சியமும் காட்டாதீர்கள். இல்லையெனில் உங்கள் கஷ்டங்கள் அதிகரிக்கலாம். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். நீங்கள் திருமணமாகாதவராகவும், விரும்பிய வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்கள் என்றால், இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 7 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், உங்கள் வழியில் இருந்துவந்த பிரச்சினை இன்று தீர்க்கப்படும். பணம் தொடர்பான உங்கள் கவலைகள் நீங்கும். உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:05 மணி முதல் காலை 8:50 மணி வரை



Click it and Unblock the Notifications











