Latest Updates
-
தீபாவளி ஸ்பெஷல் கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - செமயா இருக்கும் -
இந்தியாவின் 'மாந்திரீக பூமி' என்று அழைக்கப்படும் கிராமம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோதுமை ரவா இட்லியும், தக்காளி கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நவம்பர் 07, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 14 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
சுக்கிரதாதித்ய யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க உதடுகள் கருப்பா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
200 கிராம் பன்னீர் இருந்தா இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவியை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Today Rasi Palan 17 August 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் மீதான பணிசுமை கணிசமாக அதிகரிக்கலாம்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 17ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். படிப்பில் உங்கள் ஆர்வம் குறைவாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. இன்று உங்களுக்கு பண விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:30 மணி முதல் இரவு 10 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, பங்குச் சந்தையில் பணிபுரிபவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். வீட்டின் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக உங்கள் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். உடல்நலம் சம்பந்தமான திடீர் பிரச்சனை வரலாம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்றைய நாளின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் உறுப்பினர்கள் இன்று உங்களுக்காக ஒரு ஆச்சரியத்தைத் திட்டமிடலாம். வேலைப்பளு குறைவதோடு, மனநலமும் மேம்படும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்களுக்காக சில முக்கியமான பொருட்களை வாங்கி மகிழலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலகத்தில் உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், சிறிய கவனக்குறைவால் தவறான விளைவை சந்திக்க நேரிடலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தடைப்பட்ட எந்த வேலையையும் இன்று செய்து முடிக்கலாம். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வணிகர்கள் சட்ட விஷயங்களில் எந்தவிதமான அலட்சியத்தையும் காட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் நீங்கள் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். மறுபுறம், உத்தியோகஸ்தர்கள் இந்த காலக்கட்டத்தில் கடினமாக உழைக்க வேண்டும். அப்போது தான் உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்கள் உடல்நிலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். வேலையுடன் ஓய்விலும் கவனம் செலுத்த வேண்டும். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் பாசமும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, சிறிய முடிவை கூட இன்று மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் இருக்கும். இருப்பினும், நகைச்சுவையாக கூட, அவரது மனதைப் புண்படுத்தும் விஷயத்தை சொல்லாதீர்கள். பண விஷயத்தில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். வேலையில், இன்று கலவையான நானாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, குழந்தை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். திடீர் பண வரவு உண்டாகும். தொழிலதிபர்கள் பழைய கடனில் இருந்து விடுபடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:10 மணி முதல் காலை 11:05 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, காதலைப் பொறுத்தவரை இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்யுங்கள். வேலையில் இன்று பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளின் சுமை அதிகரிக்கலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, உங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். ஆனால், கடன் கொடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வாழ்க்கைத் துணையின் கோப குணம் உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இல்லையெனில், உறவில் மனகசப்பு அதிகரிக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் நிறைய அலைய வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 8:25 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் பலத்தால் நல்ல வெற்றியைப் பெற முடியும். வியாபாரிகளின் பொருளாதார நிலை வலுப்பெறும். இன்று உங்கள் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 12 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, சுயநலவாதிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். இல்லையெனில் உங்கள் பெருந்தன்மையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அதிகம் பேசுவதைத் தவிர்க்கவும். தொழிலதிபர்களுக்கு புதிய வணிக முன்மொழிவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் உறவு வலுவாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை



Click it and Unblock the Notifications
