Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 13 September 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்வில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கு..
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. கார்த்திகை, ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, உங்கள் அன்புக்குரியவர்களின் மகிழ்ச்சியைக் கவனிப்பதோடு உங்கள் மீதும் கவனம் செலுத்தினால் நல்லது. வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பும் ஆதரவும் பாதகமான சூழ்நிலைகளிலும் உங்கள் மன உறுதியை அதிகரிக்க செய்யும். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சிறப்பாக இருக்கும். சரியான முடிவுகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்களின் கடின உழைப்பின் பலன்களை பதவி உயர்வில் பெறலாம். வீட்டில் அமைதியான சூழல் இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையின் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கும். இன்று முதுகு அல்லது தோள்பட்டை வலியால் நீங்கள் சிரமப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். கூட்டு வியாபாரம் செய்வது உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் வயதானவர்களின் உடல்நிலை குறித்து கவலைகள் இருக்கும். மருத்துவ செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு அரசுத் துறையினரால் அதிக லாபம் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்குவதற்கான திட்டங்கள் முன்னேறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அதிக கவனம் தேவை. குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி வரலாம். சிறிய விஷயங்களுக்கு சண்டை போடுவதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், வயிறு சம்பந்தமான தொற்று ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 7:30 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, நிதி விஷயங்களில் இன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரத்தைப் பெற முடியும். வேலை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உங்கள் வேலையில் சரியான கவனம் செலுத்த முடியும். மாணவர்களுக்கு இன்று அனுகூலமான நாள். பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் எண்ணங்களை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனையை பேசி தீர்க்க முயற்சிக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில், வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, நீங்கள் வேலை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், அனுபவமுள்ளவர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவர்களை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் மனரீதியாகவும் நன்றாக உணருவீர்கள். வியாபாரத்தில் நிலவும் மந்தநிலை உங்கள் கவலைகளை அதிகரிக்கலாம். ஆனால், அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். விரைவில் பதவி உயர்வு பெறலாம். உங்கள் வீட்டைப் புதுப்பிக்க நிறைய பணம் செலவழிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் செய்ய திட்டமிடப்படலாம். உங்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் ஏதேனும் இருந்தால் கோபம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு தவறான பாதையில் செல்லாதீர்கள். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க இதுவே சரியான நேரம். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் இழப்பு ஏற்படலாம். அன்புக்குரியவரிடமிருந்து நல்ல செய்தியையும் பெறலாம். தொழிலதிபர்கள் பெரிய முதலீடுகள் செய்ய இது சரியான நேரமில்லை. பண விஷயங்களில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஏதேனும் ஒரு வேலையை ஒப்படைத்தால், அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் காணப்படும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு தலைவலி பிரச்சனை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் காலை 9:20 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, தேவையற்ற விவாதங்களில் இருந்து விலகி உங்கள் நேரத்தை நன்றாகப் பயன்படுத்துங்கள். இன்று நீங்கள் முடிக்க வேண்டிய சில முக்கியமான வேலைகள் உள்ளன. சில சமூகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பதன் முலம், நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பெரிய சவாலைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். இல்லையெனில், உங்கள் சில வேலைகள் இன்று முழுமையடையாமல் போகலாம். வீட்டில் பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்களுக்கு மூட்டுவலி பிரச்சனை இருந்தால் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உங்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணையின் வீட்டார் மூலம் பிரச்சனைகள் வரலாம். உங்களைப் பற்றிய ரகசியங்களை பிறருடன் அதிகம் பகிர வேண்டாம். வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்கள் மீது சற்று மனக்கசப்பு காட்டுவார்கள். அலுவலகத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதனால், நீங்கள் மிகவும் சோர்வாக உணருவீர்கள். இன்று திடீரென்று சிறிது தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். தொழிலதிபர்கள் வியாபாரத்தில் அபாயகரமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களின் முன்னேற்றத்தில் தடைகள் இருக்கலாம். உங்களின் கடின உழைப்புக்கு எதிர்பார்த்த பலன்களை விரைவில் பெறுவீர்கள். குடும்ப விஷயங்களில் சிந்திக்காமல் உங்கள் கருத்தை தெரிவிக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் தவறான நடத்தை உங்கள் மனதைக் காயப்படுத்தும். நீங்கள் உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமாக உணர்வீர்கள். திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். செவிவழிச் செய்திகளால் அதிகம் அலைக்கழிக்கப்படாதீர்கள். இல்லையெனில், தேவையற்ற விஷயங்களில் சிக்கி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிப்பீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் முக்கியமான ஆவணங்களைச் செய்யும்போது அவசரப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் வேலையை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். குடும்ப உறவுகளில் மனகசப்பு அதிகரிக்கலாம். வீட்டில் பதற்றமான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்குப் பிடித்தமான இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். காதல் ஜோடிகளுக்கும் இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 8:30 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, மாணவர்கள் மனம் மற்றும் அறிவு சுமைகளிலிருந்து விடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்கள் தொழில் புதிய திசையில் நகரும். பண விஷயங்களில் அவசரம் வேண்டாம். இல்லையெனில், நஷ்டம் ஏற்படலாம். நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். வியாபாரிகளின் சில முக்கிய வேலைகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். லாபம் ஈட்ட வாய்ப்பு கூடும். உங்கள் தற்போதைய வேலையுடன் நீங்கள் ஒரு பகுதி நேர வேலை செய்ய விரும்பினால், உங்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பதற்றம் நீங்கும். அதனால், வீட்டின் சூழலில் பெரிய முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். உங்கள் துணையின் நடத்தையில் ஏற்படும் சில மாற்றங்களால் நீங்கள் மிகவும் கவலையடைவீர்கள். உங்கள் அன்றாட வழக்கத்தில் சில முக்கிய மாற்றங்களைச் செய்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, நீங்கள் ஒரு பணியை நீண்ட காலமாக முடிக்க கடினமாக உழைத்திருந்தால், அதன் சரியான முடிவுகளைப் பெறலாம். புதிய சொத்து வாங்கும் திட்டமிடலாம். உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் உதவியால் உங்கள் பிரச்சனையைத் தீர்க்க முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலைத் திட்டத்தைத் தொடங்குவதற்கான நேரம் இது. வெளியூர் சென்று வேலை செய்ய வேண்டுமென்ற கனவில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடன் உங்கள் உறவு மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு விரிசல் இருந்தால், எல்லா மனக்கசப்புகளையும் மறந்துவிட்டு, அவர்களை சமாதானப்படுத்த முயற்சிக்கவும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உணவில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:41
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 3 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் ஒரு புதிய தொழிலில் தங்கள் அதிர்ஷ்டத்தைப் பெற முயற்சித்தால், நீங்கள் வெற்றி பெறலாம். உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் பேச்சால், நீங்கள் மோசமாக உணரலாம். நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். வேலையுடன், உங்களுக்காக போதுமான நேரத்தை ஒதுக்குங்கள். இல்லையெனில், கவனக்குறைவு உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். தொழிலதிபர்கள் வேலை சம்பந்தமாக நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மீது நீங்கள் அற்புதமான நம்பிக்கையை உணர்வீர்கள். நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் பெரியவர்களிடம் மன்னிப்பு கேட்டு உங்கள் தவறை ஏற்றுக்கொள்ளுங்கள். சிறு விஷயத்துக்காக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள நிதி நிலைமை மேம்படும். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். நீங்கள் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டால், உங்கள் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இதுவே சரியான நேரம். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையெனில், அவர்கள் தங்கள் இலக்குகளில் இருந்து விலகலாம். தொழிலதிபர்கள் கடும் போட்டியைச் சந்திக்க வேண்டி வரும். சில புதிய யுக்திகளை வகுக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உங்கள் பணிச்சுமை அதிகரிக்கலாம். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். உங்கள் காதல் வாழ்க்கையில் புதுமையை உணர்வீர்கள். இன்று நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை



Click it and Unblock the Notifications











