Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
Today Rasi Palan 13 June 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதையோ, கடன் கொடுப்பதையோ தவிர்க்கணும்!
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் பூரம், உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 13ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். ஒரு பெரிய ஒப்பந்தத்தை இன்று உறுதிப்படுத்த முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தந்தை உதவியால் லாபம் உண்டாகக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, சில நாட்களாக வேலை சம்பந்தமாக அதிக அழுத்தத்தை நீங்கள் உணர்ந்திருந்தால், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் எல்லா கவலைகளையும் மறந்து உங்கள் மீது கவனம் செலுத்துவீர்கள். நிதி விஷயங்களில், இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், பெரும் சிக்கல் உண்டாகக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை மேலோங்கும். நீங்கள் வேலையில்லாமல் நீண்ட நாட்களாக வேலை தேடுகிறீர்கள் என்றால், இன்று உங்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். வியாபாரிகளின் பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:50 மணி முதல் இரவு 8:10 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, வணிகர்கள் நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அலுவலகத்தில், உங்கள் வேலையை முழு ஆற்றலுடன் செய்து முடிக்க வேண்டும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, நேரத்தை மனதில் வைத்து செயல்படவும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:15 மணி முதல் மதியம் 12:15 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, பணத்தின் அடிப்படையில் இன்று கலவையான நாளாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்வது நல்லது. குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் உள்ள ஒருவருடன் உங்களுக்கு மனகசப்பு ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சனைகள் வேலையில் ஆதிக்கம் செலுத்த ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இதனால், வேலையை இழக்கவும் நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 8:20 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, நீதிமன்றத்தில் ஏதேனும் சொத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால், வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கு இன்று பொருத்தமான நாள். வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும், இன்று உங்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். உண்ணும் உணவில் காட்டும் அலட்சியம் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:35 மணி முதல் மதியம் 12 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, அலுவலகத்தில், மேலதிகாரி உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளை வழங்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். இன்று நீங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையாக நேரத்தைச் செலவிடுவீர்கள். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 7:00 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் முக்கிய வேலை ஒன்றை சரியான நேரத்தில் முடிக்காததால், மேலதிகாரி கோபத்தை எதிர்கொள்ள நேரிடலாம். தொழிலதிபர்கள் லாபம் பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:25 மணி முதல் காலை 10:50 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஏதேனும் போட்டித் தேர்வுக்குத் தயாராகிறீர்கள் என்றால், உங்கள் நேரத்தை நன்றாகப் பயன்படுத்துங்கள். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். கடன் வாங்குவதையோ, கடன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று உங்கள் அலுவலக சூழ்நிலை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை கூடும். வியாபாரிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்களுக்குப் பிடித்த இடத்திற்கு அவர்களை அழைத்து செல்லலாம். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று நிதி விஷயங்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். இன்று, வாழ்க்கைத் துணை உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்பலாம். உங்கள் துணையை ஏமாற்றாமல் இருப்பது நல்லது. வேலை முன்னணியில், இன்று கலவையான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:35 மணி முதல் இரவு 8:20 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, நீங்கள் அலுவலகத்தில் உயர் பதவியில் பணிபுரிபவராக இருந்தால், நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரம் கிடைக்கும். இன்று திடீரென வீட்டிற்கு சில விருந்தினர்கள் வரலாம். நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 2 மணி வரை



Click it and Unblock the Notifications