Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
Today Rasi Palan 11 February 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 6.00-7.00 மணி வரை. மாலை 3.30-4.30 மணி வரை. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் நல்ல நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். இருப்பினும், வியாபாரிகள் பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்பாடுகளால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 12:20 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வாகனங்களில் மிகவும் கவனமாக செல்லவும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் பொழுதுபோக்கிற்காக அதிக பணத்தை செலவிட வேண்டாம். அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பில் பங்கேற்கலாம். உங்கள் ஆலோசனைகள் இன்று மேலதிகாரியை பெரிதும் கவர்ந்திழுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக துணி வியாபாரம் செய்வோருக்கு, பெரிய ஆர்டர் கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலை அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வணிகர்கள் தங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உங்கள் வேலையை முழு ஆற்றலுடன் செய்ய முயற்சிக்கவும். பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 9:15 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, மாணவர்கள் தேவையற்ற விஷயங்களில் உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களின் மகிழ்ச்சியான செய்தி மனமகிழ்ச்சியை அளிக்கும். வணிகர்கள் இன்று சட்டவிரோதமான எந்த வேலையையும் செய்ய வேண்டாம். உங்கள் சிறிய தவறு உங்களுக்கு பெரிய சிக்கலை உண்டு பண்ம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளில் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, நீங்கள் அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரிந்தால், இன்று உங்கள் பணி பாராட்டப்படலாம். வணிகர்கள் இன்று புதிய வணிக முன்மொழிவைப் பெறலாம். முக்கியமான வணிக முடிவுகளை எடுப்பதில் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், நெருக்கமான ஒருவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். இன்று பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவருடன் உங்களுக்கு தகராறு இருந்தால், இன்று உங்களுக்கிடையே எல்லாம் சாதாரணமாகிவிடும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, வீட்டில் வயதானவர்கள் இருந்தால், இன்று அவர்களின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்படலாம். வியாபாரிகள் இன்று பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். பதவி உயர்வை அடைய கடினமாக உழைக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக உங்கள் பெற்றோருடனான உறவு வலுவடையும். உங்களுக்கு சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கங்கள் இருந்தால், அவற்றை விரைவில் விடுபட முயற்சி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 8:15 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணலை வழங்கியிருந்தால், நேர்மறையான பதிலைப் பெறலாம். தொழிலதிபர்கள் நிதி ஆதாயங்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் அனைத்து நிதி பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இன்று நீங்கள் வீட்டில் பூஜை, யாகம் போன்றவற்றை ஏற்பாடு செய்யலாம். அலுவலகத்தில் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சில்லறை வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். உங்கள் தொழிலில் வளர்ச்சி சாத்தியமாகும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள். திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தவும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு முழங்கால்கள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:05 மணி முதல் காலை 9:20 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலை அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். கூட்டு வியாபாரம் செய்வோருக்கு தங்கள் துணையிடையே விரிசல் ஏற்படலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் நடத்தையால் உத்தியோகஸ்தர்களுக்கு சிரமம் ஏற்படும். இன்று நீங்கள் உங்கள் வேலையை விட்டுவிட முடிவு செய்யலாம். பணத்தின் அடிப்படையில் இன்று சராசரியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:50 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று நீங்கள் ஒரு புதிய சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். அலவலகத்தில் சக ஊழியர்களிடம் அதிகமாக புறம் பேச வேண்டாம். வியாபாரிகள் இன்று பணி நிமித்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை நல்ல மனநிலையில் இருப்பார். காதல் விஷயத்தில் இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஏதாவது ஆச்சரியத்தைத் திட்டமிடலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தின் அடிப்படையில், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, குடும்பத்தில் நிலவி வந்த தகராறு நீங்கி இன்று மீண்டும் உங்கள் வீட்டில் அமைதி திரும்பும். நிதி நிலை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக விரும்பிய விலையுயர்ந்த பொருளையும் வாங்க முடியும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காணலாம். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுப்பெறும். உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், அதிக கவனம் தேவை,செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ் நேரம்: காலை 6:35 மணி முதல் காலை 11 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, சொத்து சம்பந்தமான வேலை செய்பவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் முக்கியமான வேலைகளில் இருந்துவந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் துணையுடனான உறவை மேம்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை உணருவீர்கள். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, தினமும் காலையில் திறந்த வெளியில் நடைபயிற்சி செய்யவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:50 மணி முதல் மாலை 3 மணி வரை



Click it and Unblock the Notifications











