Latest Updates
-
தீபாவளி ஸ்பெஷல் கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - செமயா இருக்கும் -
இந்தியாவின் 'மாந்திரீக பூமி' என்று அழைக்கப்படும் கிராமம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோதுமை ரவா இட்லியும், தக்காளி கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நவம்பர் 07, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 14 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
சுக்கிரதாதித்ய யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க உதடுகள் கருப்பா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
200 கிராம் பன்னீர் இருந்தா இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவியை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Today Rasi Palan 08 August 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்கவும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 08ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு கலவையான பலன்களை தரும் நாளாக இருக்கும். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்காமல் போகலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். குழந்தைகளுக்காக சில முக்கியமான பொருட்களை வாங்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், வானிலை மாற்றத்தால் சில பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:15 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் தவறான அணுகுமுறை உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புண்படுத்தும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் சேமிப்பில் கவனம் செலுத்தினால், விரைவில் உங்கள் நிதிப் பிரச்சனைகள் தீரும். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். உடல்நலம் சம்பந்தமான பிரச்சனை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, மோசமான உணவு பழக்கத்தால் உங்கள் உடல் நலம் கெடும் வாய்ப்புள்ளது. வேலையுடன் உங்களுக்காக போதுமான நேரத்தை ஒதுக்குவது நல்லது. அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்க வேண்டும். இன்று உங்கள் எந்த வேலையையும் முடிக்காமல் விடாதீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர் உங்கள் மீது கூடுதல் அக்கறை காட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 9:15 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களின் இந்தப் பயணம் உங்கள் பணத்தையும் நேரத்தையும் தான் வீணடிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரிவு ஏற்படலாம். இன்று உங்கள் துணையின் நடத்தையில் சில மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பார்வை உங்கள் மீது இருக்கும். எனவே, வேலையில் எந்த வித அலட்சியத்தையும் காட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். அதன் தாக்கம் உங்கள் வேலையிலும் தெரியும். பொருளாதார நிலையில் பலம் உண்டாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க போகிறீர்கள் என்றால், நீங்கள் வெற்றியைப் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:50 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சில கடினமான பணிகள் ஒதுக்கப்படலாம். வியாபாரிகள் தடைபட்ட லாபம் கிடைக்காமல் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இன்று உங்களால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் சோர்வாக உணருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று நீங்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். உயர் அதிகாரிகளின் தவறான நடத்தையால் உங்கள் நம்பிக்கை குறையலாம். தொடர்ந்து கடினமாக உழைத்தால், விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். பண விஷயத்தில் இன்று சாதாரணமாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:50 மணி முதல் மாலை 3 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் பணம் தொடர்பான ஏதேனும் பரிவர்த்தனை செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், இழப்புகள் சாத்தியமாகும். வேலை அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும் இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். சில குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:35 மணி முதல் காலை 11 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, உங்கள் அன்றாட வழக்கத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இன்று, வாழ்க்கைத் துணை உங்களிடமிருந்து ஒரு பெரிய கோரிக்கையை முன் வைக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்குள் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் அன்புடனும் புரிந்துணர்வுடனும் செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:50 மணி முதல் இரவு 8:10 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். தேர்வில் அபார வெற்றி பெறலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்களுக்காக ஒரு பெரிய செலவை செய்யலாம். பெற்றோரின் பாசமும் ஆதரவும் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். உங்கள் துணையுடனான சந்திப்பு மிகவும் மறக்கமுடியாததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் காலை 11:30 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தை பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும். ஒரு பழைய நோய் உங்களைத் தொந்தரவு செய்யலாம். வேலையில், இன்று சாதாரண நாளாக இருக்கும். நீங்கள் புதிய வேலையைத் தொடங்கினால், அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தந்தை மூலம் புதிய லாபம் கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்:1
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 8:15 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று வேலை நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலையில் பலம் உண்டாகும். உங்கள் நிதி முயற்சி வெற்றியடையும். வாழ்க்கைத் துணை உங்களுக்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை



Click it and Unblock the Notifications
