Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
Today Rasi Palan 07 July 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆபத்தான முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூலை 07ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று நீங்கள் அதிகம் வேலை செய்ய வேண்டியதிருக்காது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஓய்விற்காக இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் பயணங்களைக் கூட திட்டமிடலாம். இன்றைய நாள் பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும் ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் காலை 10 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணை இன்று மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார். உங்களுக்குப் பிடித்த இடத்திற்கு அவர்களை அழைத்து செல்லலாம். ஒருவேளை, நீங்கள் தனிமையில் இருந்தால், இன்று நீங்கள் ஒரு சிறப்பு நபரை சந்திக்க முடியும். நிதி நிலை நன்றாக இருக்கும். நெருங்கியவர்களிடமிருந்து சில பயனுள்ள ஆலோசனைகளைப் பெறலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, வணிகர்கள் ஏதேனும், புதிய வேலையைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை பதற்றமானதாக இருக்கக்கூடும். உங்கள் வீட்டில் வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் உற்சாகம் நிறைந்திருக்கும். நீங்கள் ஒருவரையொருவர் சகித்துக்கொள்வதால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணமானவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் இனிமையான நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் வந்து சேரும். நிதி நிலைமையில் ஏற்றம் ஏற்படும். உங்கள் நிதி முயற்சி வெற்றியடையும். உடல்நிலை நன்றாக இருக்கும். மனதளவில் வலுவாகவும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 9:00 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று கடந்த காலத்தை நினைத்து நீங்கள் மனம் வருந்தலாம். எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையின் நடத்தையில் சில மாற்றம் ஏற்படும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களைப் புறக்கணிப்பதாக உணர்வீர்கள். மனம் விட்டு பேச பழகி கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் எந்த அபாயகரமான முடிவுகள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று பண விஷயத்தில் கலவையான நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று சில பழைய நோய்கள் மீண்டும் தோன்றக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக ஏதேனும் வேலை நிலுவையில் இருந்தால் அலட்சியம் வேண்டாம். இது உங்கள் முன்னேற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். காதலைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. உங்கள் துணை கோபமாக இருந்தால், நீங்கள் அவர்களை சமாதானப்படுத்துவதில் அலட்சியம் காட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:50 மணி முதல் காலை 9:50 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் கடவுள் வழிபாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள். நீங்கள் எந்த ஆன்மீக தலத்திற்கும் செல்லலாம். வேலையில், இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்களின் முக்கியமான வேலைகளில் சில தடைகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையுடன் உணர்ச்சிப் பிணைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, எல்லா கவலைகளையும் மறந்து பொழுதுபோக்கில் கவனம் செலுத்தவும். உங்கள் பழைய நண்பரை சந்திக்கவும் செல்லலாம். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, உங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தவித அலட்சியமும் காட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 9:50 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, நீங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம். பணப்பற்றாக்குறையால் உங்களின் சில வேலைகள் தடைபடும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் பெற்றோருடன் கூடுதல் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பும், அவர்களின் வழிகாட்டுதலையும் பெறுவீர்கள். ஆரோக்கியம் குறையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 7:20 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர முடியும். உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் நல்ல மனநிலையில் இருப்பார். இன்று அவர்கள் உங்களுக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்க முடியும். சுப நிகழ்ச்சகளையும் வீட்டில் ஏற்பாடு செய்யலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 8:25 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று உங்கள் வீட்டின் அலங்காரத்தில் தேவையான சில மாற்றங்களைச் செய்யலாம். உங்களின் இந்த முயற்சியை உங்கள் குடும்பத்தினர் பெரிதும் பாராட்டுவார்கள். வாழ்க்கைத் துணையால் சில பெரிய வெற்றிகளை அடைய முடியும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் துணையைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வேலை விஷயமாக இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:45 மணி முதல் மாலை 3:00 மணி வரை



Click it and Unblock the Notifications