Today Rasi Palan 06 December 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்துவது நல்லது.

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். டிசம்பர் 06ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 06 December 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலை அடிப்படையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. இன்று நீங்கள் எந்த ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கவும். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். திடீரென சில பெரிய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், உணவுப் பழக்கவழக்கங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புவோருக்கு, குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்கும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வருமானத்தை விட அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். இன்று பெரிய நிதி பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்கவும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 9:15 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இன்று திரும்பப் பெற வலுவான வாய்ப்புள்ளது. இன்று உங்களின் மிகப்பெரிய கவலை நீங்கும். அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் பழைய உணவு உண்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான ஒருங்கிணைப்பு மேம்படும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். அலுவலகத்தில், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இன்று நீங்கள் சங்கடமாக உணர வேண்டியிருக்கும். வியாபாரிகள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம். நீங்கள் பெரிய பலன்களை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், உங்கள் ஆசை நிறைவேறுவதில் காலதாமதல் ஏற்படலாம். இருப்பினும் உங்கள் கடின உழைப்பைத் தொடர வேண்டும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி உங்கள் பொன்னான நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அறிவுரைகளை அலட்சியம் செய்யாதீர்கள். வியாபாரிகள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் ஒரு நீண்ட தூர பயணத்தை மேற்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் பயணம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கும் தவறை செய்யாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் காலை 11:30 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு இருக்கும். இன்று நீங்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிடுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்து வேலை இன்று முடிவடையும். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். வங்கித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. சில்லறை வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். பண விஷயத்தில் இன்று நல்ல நாள். இன்று நீங்கள் பணம் சம்பாதிக்கவும் புதிய வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் நண்பகல் 12:50 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உடன்பிறந்தவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் அனைத்து நிதி பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய விவாதம் நடத்தலாம். தொழிலதிபர்கள் இன்று அவசர அவசரமாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம். இல்லையெனில், நீங்கள் சட்ட பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளலாம். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தவும். குறிப்பாக நேரத்திற்கு உணவு உண்ண பழகுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உணர்ச்சி ரீதியாக பலவீனமாக உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தவறான நடத்தை உங்களை வருத்தமடையச் செய்யும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், அதிகமாக செலவு செய்வது உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் முக்கியமான கோப்புகளை பத்திரமாக வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சோர்வான நாளாக இருக்கும். தேவையில்லாமல் அலைய வேண்டி வரலாம். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, உடல்நலக் குறைவால் உங்கள் அன்றாடத் திட்டங்கள் தடைபடலாம். ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். இன்று வேலையில் நல்ல நாளாக இருக்கும். வணிகர்கள் பெரிய ஒப்பந்தங்கள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், நீங்கள் உங்கள் வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், உங்கள் வேலை கெட்டுவிடும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று செலவுகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். நிதி நிலை வலுவாக இருக்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால் இன்று நல்ல நாளாகும். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுக்க இன்று நல்ல நாள். நீங்கள் சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தால், இன்று சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:20 மணி முதல் காலை 10 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். பொறுப்புகளின் சுமை அதிகரிக்கலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் மோதலைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் வேலைக்கு ஆபத்து ஏற்படலாம். வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இன்று வாக்குவாதங்கள் ஏற்படலாம். இருப்பினும், விரைவில் உங்களுக்கிடையில் எல்லாம் சாதாரணமாகிவிடும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று சராசரி நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:50 மணி முதல் இரவு 8:15 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று வாகனங்களை மிகவும் கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக இரவில் வாகனம் ஓட்டும்போது கவனக்குறைவாக இருக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். எந்தவொரு சர்ச்சைக்குரிய பிரச்சனையையும் இன்று தீர்க்க பலமான வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இன்று மிகவும் இனிமையான நாளாக இருக்கும். திடீர் பெரிய நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீதிமன்ற விஷயங்களில் வெற்றி பெறலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நிலுவையில் உள்ள வேலையின் சுமை அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

Story first published: Wednesday, December 6, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion