Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
திருப்பதி செல்லும் இந்த பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்... என்ன தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் சராசரியாக நாள்தோறும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் இலவச டிக்கெட்களில் வரும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்..இதில் மூத்த குடிமக்களும் அடங்குவர்.. அதனால் திருப்பதி தேவஸ்தானம் அவர்களுக்காக சில வசதிகளை அறிவித்துள்ளது.. அவர்கள் மணி கணக்கில் காத்திருக்காமல் உடனே கோவில் உள்ளே சென்று ஏழுமலையானை தரிசித்து விட்டு 30 நிமிடத்தில் வெளியில் வந்துவிடலாம்..

1. அதில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்ய வசதியாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
2. மூத்த குடிமக்கள் இலவச தரிசனத்திற்காக தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 3 மணிக்கு 2 இடங்களை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. அங்கு சென்றால் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் இந்த வசதிக்கு தகுதியுடையவர்களாக அங்கிகரிக்கப்படுவார்கள்..
3. இதனால் மூத்த குடிமக்கள் 30 நிமிடங்களுக்குள் சாமி தரிசனம் செய்ய முடியும். மூத்த குடிமக்கள் தரிசனம் செய்யும் போது மற்ற அனைத்து வரிசைகளும் நிறுத்தப்படும், இதனால் குடிமக்கள் அமைதியான முறையில் மற்றும் எந்தவித தொந்தரவும் இல்லாத தரிசனத்தை செய்ய முடியும்..
4. அதற்கு மூத்த குடிமக்கள் கவுண்டரை அடைய பார்க்கிங் பகுதியில் இருந்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவை வசதியையும் தேவஸ்தானம் செய்துள்ளது..
5. இந்த தரிசனத்திற்குத் தகுதிபெற,ஒருவர் புகைப்பட அடையாளத்துடன் வயது சான்றிதழை சமர்ப்பித்து, அதை எஸ்-1 கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தரிசனத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்றுடன் தட்சிண மட தெருவில் உள்ள திருமலை நம்பி கோவிலுக்கு அருகில் உள்ள நுழைவு வாயிலில் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, மூத்த குடிமக்களுக்கான இருக்கை வசதிகளை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது மேலும் அவர்கள் படிக்கட்டுகளில் ஏற தேவையில்லை.
6. தரிசனத்தின் போது அவர்களுக்கு சாம்பார், தயிர் சாதம் மற்றும் சூடான பால் இலவசமாக வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 08772277777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. இலவச டிக்கெட்களில் வரும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.. இதனை மாற்றவே தேவஸ்தானம் ஒரு அதிரடியான முடிவை கடந்த வாரம் அறிவித்திருந்தது.... அதாவது இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் விரைவாக சாமியை பார்க்க ஏதுவாக தேவஸ்வதான நிர்வாகம் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் டிக்கெட்களின் எண்ணிகையை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..



Click it and Unblock the Notifications