Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
திருப்பதியில் பக்தர்கள் நாளை முதல் சீக்கிரமாக தரிசனம் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் சராசரியாக நாள்தோறும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் இலவச டிக்கெட்களில் வரும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.. இதனை மாற்றவே தேவஸ்தானம் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது.. அதாவது இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் விரைவாக சாமியை பார்க்க ஏதுவாக தேவஸ்வதான நிர்வாகம் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் டிக்கெட்களின் எண்ணிகையை குறைத்துள்ளது..

ஸ்ரீவாணி டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீடு 500 ஆக உள்ளது, அதே நேரத்தில் ஆஃப்லைனில் 1000 டிக்கெட்டுகளின் தினசரி ஒதுக்கீட்டில், 100 திருப்பதி விமான நிலையத்திலும், 900 திருமலையில் உள்ள கோகுலம் ரெஸ்ட் ஹவுஸிலும் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது..
எனவே பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன காரணமாக இலவசமாக ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் இனிமேல் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை அவசியமில்லை.. திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு இந்தியாவில் பலரும் வரவேற்றுள்ளனர். அதோடு அறக்கட்டளைக்கு வரும் வருமானத்தை பார்க்காமல் ஏழை எளிய பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக தேவஸ்தானம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
இந்த முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஜீலை 22 ஆம் தேதி முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் டிக்கெட்டின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.. மேலும் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதாரம், அன்னதானம் போன்ற சேவைகளை கண்காணிப்பதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் உதவி நிர்வாக அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்..
அத்துடன் சில ஏஜெண்டுகள் ஒரே ஐடி மற்றும் மொபைல் எண்ணில் நூற்றுக்கணக்கான முறை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகின்றனர். அதனை தவிர்க்க , விரைவில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை ஆதார் அட்டையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட் விரைவில் பெரிய அளவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications