Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
செப்டம்பர் மாதம் திருப்பதி போற பிளான் இருக்கா? அப்போ கண்டிப்பாக இதை தெரிஞ்சுக்கோங்க..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் சராசரியாக நாள்தோறும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அந்த வகையில் இம்மாதம் செப்டம்பர் 2024 ஏழுமலையானை சந்திக்க நீங்கள் திட்டமிட்டிருந்தால் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
இந்த மாதம் திருப்பதியில் எந்த தேதிகளில் என்னென்ன சிறப்பு பூஜைகள் மற்றும் தரிசனங்கள் நடைபெற உள்ளன என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், அதன்படி உங்கள் தரிசனத்திற்கான பயணத்திட்டத்தை நீங்கள் திட்டமிட முடியும். செப்டம்பர் மாதத்தில் வரும் சிறப்பு விழாக்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் இந்த மாதத்தில் (செப்டம்பர் 2024) நடைபெற உள்ள சிறப்பு விழாக்கள் குறித்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் செப்டம்பர் மாத சிறப்பு விழாக்கள்
1. செப்டம்பர் 5: பலராம ஜெயந்தி மற்றும் வராஹ ஜெயந்தி
2. செப்டம்பர் 7: விநாயக சவிதி (விநாயகர் சதுர்த்தி)
3. செப்டம்பர் 17: அனந்த பத்மநாப விரத வழிபாடு
4. செப்டம்பர் 18: பத்ரபாத மாத கருடசேவை
5. செப்டம்பர் 28: சர்வ ஏகாதசி.
கீழ்திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்கள்
1. செப்டம்பர் 6, 20, 27 : ஆண்டாள் ஊர்வலம்
2. செப்டம்பர் உத்திர நட்சத்திரம்: கோவிந்தராஜ சுவாமி ஊர்வலம்
3. செப்டம்பர் 13: வருடாந்திர பவித்ரோத்சவ விழாவிற்கான அங்குரார்பணம்
4. செப்டம்பர் 14-16: பவித்ரோற்சவம் செப்டம்பர் 18: மாதாந்திர கருட சேவை
5. செப்டம்பர் 23: ரோகிணி நட்சத்திரம்.. ஸ்ரீ பார்த்தசாரதி மற்றும் தாயார் உற்சவ மூர்த்திகள் ஊர்வலம்.
இந்த நாள்களில் திருப்பதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். செப்டம்பர் 18ம் தேதி பௌர்ணமி அன்று ஸ்ரீவாரி கருட சேவை நடைபெறும். இந்த நாளிலும் ஏராளமான பக்தர்கள் திருமலை மலைக்கு வருகை புரிவார்கள். அதனால் அந்த கூட்டத்தை மனதில் கணகிட்டு அதற்கு ஏற்றால் போல் உங்களின் பயணத்தை அமைத்துக் கொள்ளலாம்..
மேலும் திருப்பதி கோயிலி புதிதாக அலங்கரிக்கப்பட்ட சுவாமி புஷ்கரணியில், ஸ்ரீவாரி பக்தர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செல்வதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் புஷ்கரணியை சீரமைக்கும் பணியை தேவஸ்தானம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, பொதுப்பணித் துறையைச் சேர்ந்த சுமார் 100 பணியாளர்கள் புஷ்கரணியில் இருந்த பழைய நீரை அகற்றி, நீர்நிலைகளில் தேங்கியிருந்த மணல் மற்றும் பாசிகளை அகற்றி சுத்தம் செய்தனர்..
மேலும், சுவாமி புஷ்கரணியின் படிகள் தங்க நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுவாமி புஷ்கரிணியில் சுமார் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த மாதம், சுவாமி புஷ்கரணி புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, புஷ்கரணியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் புஷ்கரிணி புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் புஷ்கரணிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.. இந்த திருப்பதி கோவிலின் புஷ்கரணியில் புனித நீராடினால் உடலும் மனமும் சுத்தமடையும் என்பது ஐதீகம்..



Click it and Unblock the Notifications