Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
திருப்பதி போற பிளான் இருக்கா? நவம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியிடும் தேதி அறிவிப்பு..!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அதேநேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 மாதங்களுக்கு முன்பே சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்த டிக்கெட்களும் வெளியிடப்பட்ட உடனேயே தீர்ந்துவிடும்.. இதனால் தேவஸ்தானம் எந்த தேதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் உள்ளிட்ட பிற சேவைகளுக்கான டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்பதை முன்னதாகவே அறிவிக்கும்.

அந்த வகையில் தற்போது அக்டோபர் மாதம் வரை அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்ட நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த டிக்கெட்டை எந்த தேதியில் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
திருப்பதிக்கு நவம்பரில் செல்ல இருக்கும் பக்தர்களுக்காக, நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதில் தரிசனம் செய்யும் டிக்கெட் தவிர தங்குமிடம் மற்றும் தன்னார்வ சேவைக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டையும் வெளியிட்டுள்ளது.. அதன்படி வரும் 19 ஆம் தேதி முதல் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான மின்னணு டிக்கெட்டுகளுக்கு பதிவு செய்யலாம். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் சேவைகளில் கலந்து கொள்ளலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மெய்நிகர் சேவை டிக்கெட்டுகள் அதே நாளில் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மற்றும் அறைகள் முன்பதிவு டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கான டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கும், 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும். இதேபோல் திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவுக்கான டிக்கெட் 24 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளது..
மேலும், பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான ttdevasthanams.ap.gov.in மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications