Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இனி அன்லிமிடெட் லட்டு கிடைக்குமாம்... தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு..!
திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டும் எண்ணிக்கையில் லட்டு வழங்கப்படும். அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒரு லட்டு ரூ.50 என்ற விலையில் பக்தர்கள் தேவையான லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.. இது குறித்த முழு தகவல்களை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் அதிகரி கூறுகையில், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யாதவர்களுக்கு ஆதார் அடிப்படையில் தலா 2 லட்டுகள் மட்டும் வழங்கப்படும். பக்தர்களுக்கு அன்லிமிடட்டாக லட்டு வழங்க வேண்டும் என்ற கொள்கையை தேவஸ்தானம் இதுவரை கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
முன்னதாக தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் லட்டு கவுண்டர்களில் ஆதார் அட்டையை பயன்படுத்தி 2 லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது கள்ளச் சந்தையில் விறபனை செய்யப்படும் லட்டு விற்பனையை தடுக்கும் வகையில், புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. திருப்பதி கோவிலில் தற்போது நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் அளவில் லட்டுகள் விற்கப்படும் நிலையில், இதில் சுமார் 1 லட்சம் லட்டுகள் இடைத்தரகர்கள் மூலமாக வாங்கப்பட்டு வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், இதனை தடுக்கும் வகையில் ஆதார் முறையை அறிமுகப்படுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது..
அதனைத் தொடர்ந்து திருப்பதி கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஒரு ஹப்பி நியூஸ் சொல்லி உள்ளது.. அதாவது, இனி பக்தர்களுக்கு அன்லிமிடெட் லட்டு கிடைக்கும். இதனை தடுக்கும் வகையில் புதிய அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதில், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் தங்களிடம் உள்ள தரிசன டிக்கெட்டை காட்டினால், ரூ.50 கட்டணத்தில் அன்லிமிடெட் எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம்.
மேலும் தரிசனம் செய்யாமல் வரும் பக்தா்களுக்கு ஆதார் காட்டு அடிப்படையில் தலா 2 லட்டுக்கள் மட்டுமே வழங்கப்படும். இந்த நடைமுறை செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்டு பிரியா்கள் மிகுந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
அதனால் திருப்பதிக்கு வந்து ஏராளமான லட்டுக்களை வாங்கிச் சென்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். சிலர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரும் நெருங்கிய உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள். பிரசாதமாக வழங்கப்படும் இந்த லட்டை எப்படி வாங்குவது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது..



Click it and Unblock the Notifications

