Latest Updates
-
சேமியா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? மீல் மேக்கர் வெச்சு இந்த வெள்ளை சால்னா செய்யுங்க.. அள்ளும்.. -
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது... -
பீட்ரூட்டை இந்த ஸ்டைலில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது..
பல நூற்றாண்டுகளாக 'மனைவியை மாற்றிக் கொள்ளும்' பாரம்பரியத்தைக் கொண்ட பழங்குடியினர் - ஏன்னு தெரியுமா?
Namibian Tribes: உலகிலேயே ஆப்பிரிக்கா சுமார் 2000 மொழிகள் மற்றும் ஏராளமான பாரம்பரிய நடைமுறைகளைக் கொண்ட ஒரு பெரிய கண்டமாகும். இந்த நாட்டில் சுமார் 1.2 பில்லியன் மக்கள் உள்ளனர். அதோடு இந்நாட்டில் இன்னும் ஏராளமான பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்கா என்றதுமே பலருக்கும் நினைவில் வருவது, அங்குள்ள மக்கள் கருப்பாக இருப்பார்கள், பல பயங்கரமான மற்றும் அச்சுறுத்தும் வகையிலான கலாச்சாரங்களைக் கொண்டிருப்பார்கள் என்பதாகவே இருக்கும்.
முக்கியமாக அந்நாட்டில் இருக்கும் சில பழங்குடியினரின் பாரம்பரிய நடைமுறைகளை கேட்டால், இந்த நவீன உலகிலுமே அது உள்ளது என்று ஆச்சரியப்பட வைக்கும். அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான பாரம்பரிய நடைமுறையை வடக்கு நமீபியாவில் உள்ள ஒவாஹிம்பா மற்றும் ஓவாசெம்பா பழங்குடியினர் கொண்டுள்ளனர். அந்த நடைமுறையின் பெயர் "ஒகுஜெபுசா ஓமுகாசெண்டா". அதாவது மனைவியை மாற்றிக் கொள்ளுதல் என்பது தான் இதன் அர்த்தம்.

ஓவாஹிம்மா 16 ஆம் நூற்றாண்டில் அங்கோலாவில் இருநது நமீபியாவிற்கு குடிபெயர்ந்து ஓவாசெம்பாவுடன் குடியேறி, அந்த இரண்டு பழங்குடியினரின் கலாச்சாரங்களும் ஒரே மாதிரியாகிவிட்டன. அப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் தான் ஒகுஜெபுசா ஓமுகாசெண்டா (Okujepusa Omukazenda) என்ற மனைவியை மாற்றும் பாரம்பரிய நடைமுறை.
ஓவாஹிம்பா மற்றும் ஓவாசெம்பா பழங்குடியினரின் தோற்றம்
ஓவாஹிம்பா மற்றும் ஓவாசெம்பா பழங்குடியினர் சிவப்பு களிமண்ணில் ஒருசில வாசனைகள் மற்றும் மூலிகைகளைக் கலந்து, அவற்றை தங்களின் அலங்காரப் பொருளாக உடல் முழுவதும் பூசிக் கொள்வார்கள். பொதுவாக இப்படி பெண்களும், புதுமண தம்பதிகளும் தான் பூசிக் கொள்வார்கள். அதோடு தனித்துவமான ஹேர் ஸ்டைல் மற்றும் நகைகளை அணியக்கூடியவர்கள்.
இவ்விரு பழங்குடியினரிடத்தும் ஆண்களே குடும்பத்தின் தலைவர் மற்றும் பெண்களை விட ஆண்களே அதிக உரிமைகளைக் கொண்டுள்ளனர். பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்கவும், வீட்டை, குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பைக் கொண்டிருந்தாலும், ஆண்களே தங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள்.
இந்த விசித்திரமான பாரம்பரியம் எதற்கு?
ஒகுஜெபுசா ஓமுகாசெண்டா என்ற பாரம்பரியத்தில், கணவர் தனது மனைவியை தனது வீட்டிற்கு விருந்தினராக வரும் ஆணுடன் ஒரு இரவை கழிக்க அனுமதிப்பார். அந்த இரவில் அப்பெண்ணுடன் உடலுறவு கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார். ஒருவேளை வீட்டிற்கு விருந்தினராக வரும் ஆண் தனது மனைவியுடன் வந்தால், இரண்டு ஆண்களும் பெண்களை பரிமாறிக் கொள்ளலாம்.
இப்படியான பாரம்பரியம் கருணை மற்றும் வெளிப்படைத்தன்மையின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. அதோடு இது நட்பை வலுப்படுத்தும் மற்றும் விபச்சார சம்பவங்களைக் குறைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக மக்கள் அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனராம்.
இதற்கு அந்த பெண்கள் மறுக்கவோ, எதிர்த்து பேசவோ கூடாது. மாறாக, இதற்கு பெண்கள் அனுமதிக்கும் போது அவர்கள் தங்கள் கணவருக்கு அதிக மரியாதையை பெற்றுத் தருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக மனைவியை மாற்றும் போது அந்த கணவன் அந்த வீட்டில் தங்கமாட்டார். அருகில் உள்ள குடிசையிலோ அல்லது வெளியிலோ தூங்குவாராம்.
என்ன ஒரு மோசமான பாரம்பரியம்-ன்னு பாருங்க...



Click it and Unblock the Notifications