Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
Teacher's day 2024: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.. சாவித்ரிபாய் புலே பற்றி தெரியுமா?
சாவித்ரிபாய் பூலே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.. இவர் முக்கிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவராக இருந்தவர்.. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சமூக சீர்திருத்தவாதியாகவும் கல்வியாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். 1831 ஜனவரி 3ஆம் தேதி மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்ற சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார்.. இவர், லட்சுமி மற்றும் கண்டோஜி நெவேஷே பாட்டீல் தம்பதியின் மூத்த மகள் ஆவார்.
பண்டையக்கால வழக்கப்படி சாவித்ரிபாய் புலேவிற்கு அவரது 9வது வயதில், 13 வயதான ஜோதிராவ் புலேவை 1840ம் ஆண்டு அவர்களது பெற்ரோர் திருமணம் செய்து வைத்தனர். ஜோதிராவ் புலேவும் மகாராஷ்டிராவின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். எனவே தனது மனைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னுடன் இணைத்து கொண்டார் ஜோதிராவ்.

பின்னர் தனது 17 ஆம் வயதில் கணவர் ஜோதிபா பூலேவின் உதவியுடன் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியாரானார். உயர்சாதி ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களையும், தன் இளம் வயதில் முதியவர்களுக்கு மண முடிக்கப்பட்டுக் கைம்பெண்ணான 75 பெண்களைக் கொண்டு பூனாவில் தனது முதல் பள்ளியை 1848-ல் தொடங்கினார் .
இதன் விளைவாக, சாவித்ரி பாய் உயர் சாதியினரால் துன்புறுத்தப்பட்டார் மற்றும் உடல் ரீதியாக தாக்கப்பட்டார். அவள் பள்ளிக்குச் செல்லும்போது அவள் மீது சேற்றை எறிவதும், கல்லெறிவதும், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதும் வழக்கம். பல அவமானங்களைச் சந்தித்த பிறகு, சாவித்திரிபாய் பல சீர்திருத்தங்களைச் செய்தார்.
இந்த எதிர்ப்புகளால் மனம்தளராத சாவித்திரி பாய் தனது கல்வி சேவையைத் தொடர்ந்தார். ஏட்டுக்கல்வியைத் தாண்டி கைவினைப் பொருள்கள், ஓவியம், தையல் என்று பன்முகத் திறமைகளை தன்னிடம் படித்த மாணவர்களுக்கு கற்றுத்தந்தார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பல பொய் வழக்குகள் அவர் மேல் தொடரப்பட்டன. அந்த அவதூறுகளை தன் கணவர் ஜோதிராவ் பூலேவோடு இணைந்து, தைரியமாக வெற்றி பெற்றார்...
1852-ம் ஆண்டு அவரது பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆகவும், 1854-ம் ஆண்டு 200-ஐயும் எட்டியது. மேலும் ஆசிரியரான சாவித்ரிபாய், சிறுமிகள் படிப்பை தொடர ஊக்க தொகையும் வழங்கினர். இதுபோன்றே சிறுமிகளுக்காக மேலும் 18 பள்ளிகளையும் அடுத்தடுத்து தொடங்கினர். அதில் 'பாலஹத்திய பிரதி பான்கட் கிரஹா' என, கைவிடப்பட்ட பெண்களுக்காக இல்லம் ஒன்றையும் நடத்தினார். 1890ஆம் ஆண்டு பம்பாய் பகுதிகளில் பிளேக் (Plague) நோய் பரவியது. அப்போது பல சாமானிய மக்கள் அந்தக் கொள்ளை நோய்க்கு பலியானார்கள். அதில் பாதிப்படைந்த தீண்டப்படாத மக்களின் குழந்தைகளுக்கு மருத்துவர்களே சிகிச்சை தர மறுத்தனர்.
இதனால் மனமுடைந்த அவர், அப்படி சிகிச்சைக்கு மறுக்கப்பட்ட 200 குழந்தைகளைத் தனது கல்விச் சாலைக்கு அழைத்துச் சென்று, அவர்களைத் தொட்டு மருந்திட்டு ஒரு நல்ல ஆசிரியருக்கு முன்னுதாரணமாக தனது சமூகக் கடமையைச் செய்தார் . பின்னாளில் 1897-ல் ஒரு கிளினிக் தொடங்கினர். ஒரு பிளேக் நோயாளிக்கு சேவை செய்ததன் மூலம் சாவித்ரிபாய் புலேவிற்கும் இந்நோய் பரவியது. இதனால் 1897-ம் ஆண்டிலேயே மார்ச் 10-ம் தேதி மறைந்தார். இந்தியப் பெண்கல்விக்கு வித்தட்ட முதல் பெண் அவர் என்று சொன்னால் மிகையாகாது..



Click it and Unblock the Notifications
