இந்தியாவின் டாப் 10 சிறந்த உணவுகளின் பட்டியல் இதுதான்... லிஸ்ட்டில் இருக்கும் ஒரே பிரியாணி எது தெரியுமா?

TasteAtlas என்ற பிரபல நிறுவனம் உலகெங்கிலும் உள்ள சிறந்த உணவுகள் பற்றிய வழிகாட்டுதலை அவற்றுக்கு ரேட்டிங் போடுவதன் மூலம் வழங்கி வருகிறது. சமீபத்தில் Taste Atlas அதன் "சிறந்த மதிப்பிடப்பட்ட இந்திய உணவுகள்" பட்டியலை வெளியிட்டுள்ளது, இந்த பட்டியலில் இந்தியாவின் மாம்பழ லஸ்ஸி முதலிடத்தில் உள்ளது, இது "உலகின் சிறந்த 16 பால் பானங்கள்" என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது."

ஹைதராபாத் பிரியாணி ஒரு வருடம் கழித்து மீண்டும் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் மற்றும் பானங்கள் இரண்டையும் உள்ளடக்கிய பட்டியலில், சாய் மசாலா இரண்டாவது சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் பட்டர் கார்லிக் நான் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

TasteAtlas Shares List Of Top 10 Best And Worst Indian Dishes

இதைத் தொடர்ந்து, அமிர்தசாரி குல்ச்சா 4வது இடத்திலும், பட்டர் சிக்கன் 5வது இடத்திலும், ஷாஹி பனீர் 7வது இடத்திலும், சோலே பாதுரே 8வது இடத்திலும், தந்தூரி சிக்கன் 9வது இடத்திலும், குருமா 10வது இடத்திலும் உள்ளது.

அதேசமயம், "மோசமான ரேட்டட் இந்திய உணவு" பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உணவுகளை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பது பல்வேறு கேள்விகளையும், யூகங்களையும் எழுப்புகிறது. இந்த பட்டியலில், "ஜல் ஜீரா" "மோசமாக மதிப்பிடப்பட்ட இந்திய உணவு" பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, இது இந்தியாவில் கடுமையான கோடைக்காலத்தில் பலரால் விரும்பி குடிக்கப்படுகிறது மற்றும் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும்.

இரண்டாவது இடத்தில், 'கஜக்' என்று நொறுக்குத்தீனி உள்ளது, இது வட இந்தியாவில் குளிர்காலத்தில் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். இந்த பட்டியலில் தென்னிந்தியாவின் 'தேங்கை சாதம்' 3வது இடத்திலும், பான்டா பட் 4வது இடத்திலும், ஆலு பைங்கானாட் 5வது இடத்திலும், தண்டாய் 6வது இடத்திலும், அச்சப்பம் 7வது இடத்திலும், மிர்ச்சி கா சலான் 8வது இடத்திலும், மல்புவா 9வது இடத்திலும், பெரும்பாலான மக்கள் வெறுக்கும் உப்புமா 10வது இடத்திலும் உள்ளன.

"மோசமாக மதிப்பிடப்பட்ட இந்திய உணவுகள்" பட்டியல் பெரும்பாலான இந்தியர்களுக்கு எதிரானது மற்றும் பலர் அவற்றின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

பலவகையான உணவு வகைகளை ஆழ்ந்து நேசிப்பதற்காக அறியப்பட்ட இந்தியர்கள், சமூக ஊடகங்களில் இந்த பட்டியல் குறித்த கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய உணவை வரையறுக்கும் பிராந்திய மாறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களை இந்த மதிப்பீடுகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று பலர் கூறியுள்ளனர். உதாரணமாக, ஜல்ஜீரா, சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் விரும்பப்படும் பெரிதும் பானமாகும், அதே சமயம் எண்ணற்ற வீடுகளில் உப்புமா ஆறுதலான காலை உணவாக உள்ளது.

பிரபலமான நடிகர் அஹ்சாஸ் சன்னா, Taste Atlas-ன் சமூக ஊடகப் பதிவில், "இதை யார் மதிப்பிடுகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பட்டியலை கேள்வி கேட்பது அவர் மட்டுமல்ல, பல food bloggers மோசமான மதிப்பிடப்பட்ட உணவுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.''

"இதை யார் மதிப்பிட்டார்கள்? ஒரு மேற்கத்தியர் என்று நான் யூகிக்கிறேன்," என்று ஒரு பயநாளர் குறிப்பிட்டுள்ளார். "இந்திய உணவை அனுபவிக்காத அல்லது அதைப்பற்றிய ஐடியாவே இல்லாத ஒருவரால் இதுபோன்ற அரைகுறையான பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்று மற்றொருவர் கருத்து தெரிவித்தார். "இந்த உணவுகளை மதிப்பிட இந்தியர்களிடம் நீங்கள் கேட்க வேண்டும்" என்று சிலர் பரிந்துரைத்தனர். "அச்சப்பம் மற்றும் மிர்ச் கா சாலனை அந்தப் பட்டியலில் சேர்த்தவர்கள் நீக்கப்பட வேண்டும்" என்று ஒருவர் கூறியுள்ளனர்.

Story first published: Monday, July 1, 2024, 19:30 [IST]
Desktop Bottom Promotion