Latest Updates
-
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க..
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்..
Birth Date And Superpower In Tamil: ஒவ்வொருவரும் தனித்துவமான குணாதிசயங்களுடன், திறமைகளுடன் இவ்வுலகில் பிறக்கிறோம். அதில் சிலர் இயற்கையாகவே தலைமைத்துவ குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர். இன்னும் சிலர் படைப்பாற்றல், புத்திசாலித்தனம் அல்லது பிறரை ஈர்க்கும் கவர்ச்சியால் சிறந்து விளங்குவார்கள். இப்படியான ஒருவரது சுவாரஸ்யமான குணாதியங்கள், சிந்திக்கும் திறன், பலம், பலவீனம் போன்றவற்றை ஒருவரது பிறந்த தேதி வெளிப்படுத்துவதாக எண் கணிதம் கூறுகிறது.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒருவித சக்தி இருக்கும். ஆனால் அது நமக்கு சரியாக தெரியாது. டாரட் கார்டூ ரீடரான ரக்ஷனா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த தேதிப்படி ஒவ்வொருவரின் சூப்பர்பவர் என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார். உங்கள் பிறந்த தேதிப்படி உங்களின் சூப்பர்பவர் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
1, 10, 19, 28 - பிறவித் தலைவர்
* யாருக்காவது வழிகாட்டுதல் தேவைப்பட்டால், அவர்கள் உங்களிடமே வருவார்கள்.
* உங்களை நீங்கள் சந்தேகப்பட்டாலும், மற்றவர்கள் உங்களுள் இருக்கும் நம்பிக்கையை உணர்கிறார்கள்.
* குழப்பத்தில் இருக்கும் மக்களுக்கு தெளிவு கொடுப்பதே உங்கள் சூப்பர் பவர்.
2, 11, 20, 29 - உள்ளுணர்வு கொண்டவர்
* ஏதாவது சரியா தவறா என்பதை ஆதாரம் வருவதற்கு முன்பே உணர்ந்து விடுவீர்கள்.
* மற்றவர்கள் மறைக்கும் உணர்வுகளையும் நீங்கள் எளிதாக உணர்வீர்கள்.
* உங்கள் சூப்பர் பவர் உங்கள் உள்ளுணர்வை நம்புவது.
3, 12, 21, 30 - ஊக்கமளிப்பவர்
* உங்கள் வார்த்தைகளும், உங்கள் ஆற்றலும் மற்றவர்களின் நாளையே மாற்றிவிடும்.
* நீங்கள் பேசும்போது மற்றவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
* உங்கள் சூப்பர் பவர் மக்களை ஊக்கப்படுத்துவது.
4, 13, 22, 31 - உறுதியான அடித்தளம்
* மற்றவர்கள் பதற்றப்படும்போது கூட நீங்கள் அமைதியாக இருப்பீர்கள்.
* உங்களை மக்கள் நம்புவதற்குக் காரணம் உங்கள் நிலைத்தன்மை.
* உங்கள் சூப்பர் பவர் எதையும் வலுவாக கட்டியெழுப்புவது.
5, 14, 23 - சுதந்திர ஆன்மா
* ஒரே இடத்தில், ஒரே மாதிரி வாழ்வது உங்களுக்காக அல்ல.
* புதிய அனுபவங்களும் மாற்றங்களும் உங்களுக்கு உற்சாகம் தரும்.
* உங்கள் சூப்பர் பவர் மற்றவர்கள் காணாத வாய்ப்புகளை கண்டுபிடிப்பது.
6, 15, 24 - இதயங்களை குணப்படுத்துபவர்
* மக்கள் தங்கள் மனக்கஷ்டங்களை உங்களிடம் எளிதாக பகிர்ந்து கொள்வார்கள்.
* உங்கள் அருகில் இருப்பதால் கூட பலருக்கு நிம்மதி கிடைக்கும்.
* உங்கள் சூப்பர் பவர் அன்பாலும் அக்கறையாலும் மக்களை குணப்படுத்துவது.
7, 16, 25 - ஆழ்ந்த ஞானம் கொண்டவர்
* மற்றவர்கள் கவனிக்காத விஷயங்களை நீங்கள் கவனிப்பீர்கள்.
* வாழ்க்கை உங்களுக்கு ஆழமான பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது.
* உங்கள் சூப்பர் பவர் உண்மையை ஆழமாகப் புரிந்து கொள்வது.
8, 17, 26 - சாதனைகளை ஈர்க்கும் சக்தி
* நீங்கள் ஒரு இலக்கை நிர்ணயித்தால் அதை அடையும் வரை விடமாட்டீர்கள்.
* சவால்கள் உங்களை பலவீனப்படுத்தாமல் மேலும் வலுவாக்கும்.
* உங்கள் சூப்பர் பவர் வெற்றியை உங்களிடம் ஈர்ப்பது.
9, 18, 27 - பழமையான ஆன்மா
* மற்றவர்களின் வலியை உங்கள் இதயத்தில் உணரக்கூடியவர் நீங்கள்.
* நீங்கள் செல்லும் இடமெல்லாம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள்.
* உங்கள் சூப்பர் பவர் மனிதர்களின் வாழ்க்கையை அழகாக மாற்றுவது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications