Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் எந்த ராஜபுத்திர அரசருக்கு சொந்தமானது? ஷாஜஹான் அதை எப்படி வாங்கினார் தெரியமா?
உலக காதலர்களின் சின்னம் எதுவென்றால் அது தாஜ்மஹால்தான். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் பொக்கிஷமாகும். தாஜ்மஹால் அதன் பிரமாண்டமான அழகிற்கும், அற்புதமான கட்டுமானத்திற்கும் மட்டும் பெயர் பெற்றது அல்ல. தாஜ்மஹால் அது கட்டப்பட்ட நோக்கத்திற்காகவும் பிரபலமானது.
தாஜ்மஹாலை பார்வையிட ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். தாஜ்மஹால் 17 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஷாஜஹானால் தனது அன்பு மனைவி மும்தாஜ் மஹாலின் அன்பான நினைவாக கட்டப்பட்டது. UNESCO இந்த நினைவுச்சின்னத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.

தாஜ்மஹாலின் நிலம்
தாஜ்மஹாலை சுற்றி பல மர்மங்களும், சர்ச்சைகளும் உள்ளது, அதில் மிகவும் முக்கியமான ஒன்று தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலத்தின் கதை. வரலாற்று பதிவுகளின்படி, தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் முதலில் முகலாய ஆட்சியாளர் ஷாஜகானுக்கு சொந்தமானது அல்ல. அந்த நிலம் முகலாய ஆட்சியாளரால் கைப்பற்றப்படவில்லை, மாறாக இது இருவரிடையே பரிமாறிக்கொள்ளப்பட்டது.
தாஜ்மஹால் நிலம் ஜெய்ப்பூர் மன்னருக்கு சொந்தமானது
ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் 1631 இல் புர்ஹான்பூரில் இறந்தார். அவர் இறந்த பிறகு அவரது உடல் புர்ஹான்பூரிலேயே அடக்கம் செய்யப்பட்டது, ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு மும்தாஜின் உடல் ஆக்ராவுக்கு மாற்றப்பட்டது. வரலாற்று பதிவுகளின்படி, தாஜ்மஹாலைக் கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம், ஷாஜகானின் நண்பரான ஆமீரின் அரசர் மிர்சா ராஜா ஜெய் சிங்கிற்கு சொந்தமானது.
முகலாய வரலாற்று பதிவு பத்ஷாநாமாவின் படி, அந்த நிலம் ஜெய்சிங்கின் தாத்தா ராஜா மான் சிங்கிற்கு சொந்தமானது. அவர் அந்த நிலத்தை ஷாஜகானுக்கு நன்கொடையாக வழங்கினார். தற்போது தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் முன்பு கச்வாஹா ராஜபுத்திரர்களுக்குச் சொந்தமானது என்றும், அந்த இடத்தில் ஒரு மற்றொரு கட்டுமானம் இருந்தது என்றும் வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI), இந்த நிலம் ராஜா ஜெய்சிங்கிற்குச் சொந்தமானது என்றும், ஒரு ராஜபுத்திர மன்னரான அவர், ஷாஜகானின் நம்பகமான நண்பர்களில் ஒருவராக இருந்தார் என்று கூறுகிறது. ஷாஜஹான் ஜெய் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்ராவில் உள்ள நான்கு ஹவேலிகளுக்கு ஈடாக தற்போது தாஜ்மஹால் உள்ள நிலத்தை கையகப்படுத்தினார்.
பொதுவான நடைமுறை
இதுபோன்ற சொத்து பரிமாற்றம் என்பது முகலாய ஆட்சியாளர்களுக்கும், ராஜபுத்திர மன்னர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். முகலாய அரசவையில் ராஜா ஜெய் சிங் மிகவும் மதிக்கப்படும் மற்றும் விசுவாசமான இராணுவத் தலைவராக இருந்தார், அதனால் அவர் ஷாஜஹானுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.
தாஜ்மஹாலுக்கான நிலம் பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறப்படுவதற்கு மாறாக, அது கூட்டணி வம்சங்களுக்கிடையேயான நில பரிமாற்றம் என்பதே உண்மையாகும், இது இராஜதந்திரத்தின் அடையாளமாக மட்டுமல்லாமல், சக்திவாய்ந்த சமகால ஆட்சியாளர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அமைதியான வாழ்விற்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
