Latest Updates
-
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
அன்னையர் தினத்தில் இந்த வாஸ்து செடிகளைப் பரிசளிங்க… அம்மாவின் ஆரோக்கியமும் செல்வமும் பல மடங்கு உயரும்! -
பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் வீடு குளிர்ச்சியாக இருக்கணுமா? இந்த வாஸ்து செடிகளை உடனே மாற்றுங்க! -
Mothers Day 2026: உங்க அம்மாவுக்கு இந்த 'உயிர்காக்கும் மருத்துவ பரிசோதனைகள்' பரிசா குடுங்க.. ஹேப்பி ஆவாங்க.. -
வைகாசி மாதம் சூரியனின் ஆசியால் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?
Swapna Shastra: ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, நமக்கு வரும் கனவுகள் ஒவ்வொன்றும் நமது வாழ்க்கையுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டிருக்கும். பொதுவாக கனவுகளானது ஒருவரது ஆழ்மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்களால் வரலாம். அதில் சில கனவுகள் சாதாரணமாக இருந்தாலும், சில கனவுகள் மனதில் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.

அதுவும் எப்போது ஒருவருக்கு ஒரே கனவு திரும்ப திரும்ப வருகிறதோ, அப்போது நிச்சயம் பலரது மனதிலும் 'இந்த கனவு ஏதாவது நமக்கு சொல்ல வருகிறதோ' என்று யோசிக்கத் தோன்றும். ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, சில கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் குறிப்பதாக கூறுகிறது. இப்போது ஒருவருக்கு எந்தெந்த கனவுகள் திரும்ப திரும்ப வந்தால் என்ன அர்த்தம் என்பதைக் காண்போம்.
1. கீழே விழுவது போன்ற கனவு
நிறைய பேருக்கு உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவது போன்ற கனவு திரும்ப திரும்ப வரக்கூடும். இப்படியான கனவு ஒரு நிலையற்ற தன்மையைக் குறிப்பதாக ஸ்வப்ன சாஸ்திரம் கூறுகிறது. எப்போது ஒருவருக்கு எதிர்காலம் குறித்த பயம் அல்லது வாழ்வில் எடுத்த முடிவுகள் குறித்த பயம் உள்ளதோ, அப்போது இப்படியான கனவு வருமாம். இருப்பினும் இந்த கனவு ஒருவருக்கு அடிக்கடி வந்தால், வாழ்வில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.
2. கனவில் கோவில் அல்லது தெய்வங்கள் வருவது
கனவில் அடிக்கடி தெய்வங்கள் வந்தாலோ அல்லது கோவில்களுக்கு செல்வது போன்று வந்தாலோ மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படியான கனவு வாழ்வில் நல்ல மாற்றங்கள் வருவதையும், தனிப்பட்ட வாழ்வில் வளர்ச்சி ஏற்படப் போவதையும் குறிக்கிறது. இப்படியான கனவு மனதிற்கு தைரியத்தைக் கொடுப்பதோடு, ஆன்மீகத்தில் சற்று முன்னேற வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
3. கனவில் தண்ணீர் வருவது
ஒருவரது கனவில் திரும்ப திரும்ப தண்ணீர் வந்தால், அது அந்நபரின் உணர்வுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போவதைக் குறிக்கிறது. அதுவும் கனவில் சுத்தமான நீரைக் கண்டால், நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று அர்த்தம். அதுமே அசுத்தமான நீரைக் கண்டால், வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதைக் குறிக்கிறது என்று அர்த்தம்.
4. இறந்தவர்கள் கனவில் வருவது
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, ஒருவரது கனவில் அடிக்கடி இறந்தவர்கள் வந்தால், அது நமக்கு ஏதோ ஒரு செய்தியை சொல்ல வருகிறது என்று அர்த்தம். சில நேரங்களில், இப்படியான கனவில் தொடர்ந்து அடிக்கடி வருமாயின், அது குடும்பத்தில் நடக்கவுள்ள மாற்றங்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
5. அடிக்கடி பயணிப்பது
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, ஒருவரது கனவில் அடிக்கடி பயணம் மேற்கொள்வது போன்று வந்தால், வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்று அர்த்தம். அதுவும் இது தொழில் வாழ்க்கை அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய தொடக்கங்கள், புதிய வாய்ப்புகள் போன்றவற்றைக் குறிக்கிறது. எனவே அடிக்கடி இப்படியான கனவு வந்தால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், உங்கள் வாழ்க்கை சூழலை ஆராய்ந்து பாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications