Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க கனவுல இதெல்லாம் வருதா? அப்ப உங்களை தேடி பணம் வரப்போகுதுன்னு அர்த்தம்...
Money Related Dreams In Tamil: தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது. அப்படி தூங்கும் போது அனைவருக்குமே கனவுகள் வருவதுண்டு. அப்படி வரும் பெரும்பாலான கனவுகள் நமது ஆழ்மனதில் புதைந்திருக்கும் ஆசைகளாக அல்லது விருப்பங்களாக இருக்கலாம்.
நிறைய பேர் இரவு படுத்த உடனேயே கனவுலகில் நுழைந்துவிடுவார்கள். கனவுகளானது வெறும் நமது ஆசைகளாக மட்டும் இருப்பதில்லை, சில சமயங்களில் நமக்கு வரவிருக்கும் ஒருசில நல்ல விஷயங்களைக் குறிக்கவும் செய்வதாக ஸ்வப்ன சாஸ்திரம் கூறுகிறது.

உதாரணமாக, ஒருவரைத் தேடி ஒரு பெரிய தொகை வரவிருந்தால், அந்நபர் தூக்கத்தில் செல்வத்தைக் குறிக்கும் ஒருசில விஷயங்களைக் காண்பார்கள். இப்போது செல்வத்தில் வருகையைக் குறிக்கும் அந்த கனவுகள் எவையென்பதைக் காண்போம். உங்களுக்கும் இந்த மாதிரியான கனவுகள் வந்தால், பணம் வரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
* தூக்கத்தின் போது வரும் கனவில் ஒருவர் எண்ணெய் விளக்கு அல்லது மின்சார விளக்கை கண்டால், அது அந்நபருக்கு விரைவில் ஒரு பெரிய தொகை கிடைக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாக ஸ்வப்ன சாஸ்திரம் கூறுகிறது.
* ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, நீங்கள் உங்கள் கனவில் கை விரலில் மோதிரம் அணிவது அல்லது அணிந்திருப்பதைக் காண்டால், உங்களைத் தேடி பணம் வரப் போகிறது என்று அர்த்தம்.
* நீங்கள் உங்கள் கனவில் பசும்பாலை கறந்து குடிப்பதைக் காண்கிறீர்களா? அப்படியானால் அது உங்கள் வீட்டில் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கப் போகிறது என்பதன் அறிகுறி.
* உடல் வலிமையைக் கொண்ட விலங்கு தான் குதிரை. நீங்கள் உங்கள் கனவில் குதிரையை, அதுவும் வெள்ளை நிற குதிரையைக் கண்டால், அது உங்களுக்கு ஒரு பெரிய அளவிலான பண ஆதாயம் கிடைக்கப் போகிறது என்பதைக் குறிப்பதாக ஸ்வப்ன சாஸ்திரம் கூறுகிறது.
* ஒருவர் தங்களின் கனவில் மாந்தோட்டத்தில் இருப்பது போன்று கனவு கண்டால், அது விரைவில் ஒரு நல்ல நிதி நன்மைகளைத் தரப் போகிறது என்ற அர்த்தம். மேலும் இந்த வகை கனவு இனி உங்களின் வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கப் போவதையும் குறிக்கிறது.
* கனவில் நாரைக் காண்பது மங்களகரமானதாக ஸ்வப்ன சாஸ்திரம் கூறுகிறது. அதுவும் ஒருவருக்கு நாரை கனவில் வந்தால், அது எதிர்காலத்தில் எதிர்பாராத ஒரு பெரிய பண ஆதாயம் கிடைக்கப் போவதைக் குறிக்கிறது.
* ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, நீங்கள் மரம் ஏறுவது அல்லது மலை ஏறுவது போன்று கனவு கண்டால், எதிர்காலத்தில் புகழின் உச்சியை அடைவதோடு, வாழ்வில் ஒரு நல்ல முன்னேற்றத்தை காணப்போகிறீர்கள் என்று அர்த்தம். அதோடு, இந்த வகை கனவு அதிக செல்வத்தை பெறவிருப்பதையும் குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications