Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
Shani Jayanti 2026: சனி ஜெயந்தி நாளில் இந்த பரிகாரங்களை செய்யுங்க.. ஏழரை சனியின் தாக்கம் குறையும்..
Shani Jayanti 2026: பஞ்சாங்கத்தின் படி, சூரிய புத்திரனான சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் தான் பிறந்தார். இந்த சனி பகவான் பிறந்த தினம் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சனி ஜெயந்தி மே 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முக்கியமாக இந்த ஆண்டின் சனி ஜெயந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இது சனி பகவானுக்கு உரிய சனிக்கிழமையில் வருகிறது. அதுவும் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் சனிக்கிழமையில் சனி ஜெயந்தி வருகிறது.

இந்நாளில் சனி பகவானை மகிழ்விக்க பலரும் பலவிதமான சடங்குகளை செய்வார்கள். மேலும் சனி பகவானால் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் இந்நாளில் ஒருசில பரிகாரங்களை செய்தால், சனியின் தாக்கம் குறையும்.
அதுவும் ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்ட கும்பம், மீனம், மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள், மற்றும் சனி தோஷம் உள்ளவர்கள் சனி பகவானை மகிழ்விக்க ஒருசில பரிகாரங்களையும், தானங்களையும் செய்தால், சனியின் தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
பலரும் சனி பகவானைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆனால் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களையே தருவார். எனவே நன்மைகளை செய்பவர்களுக்கு சனி பகவான் நல்ல பலன்களையும், கெடுதல்களை செய்பவர்களுக்கு பலவிதமான பிரச்சனைகளையும் தருவார். இப்போது சனி ஜெயந்தி நாளில் சனி பகவானை மகிழ்விக்க எந்த மாதிரியான பரிகாரங்களை செய்யலாம் என்பதைக் காண்போம்.
1. அரச மர வழிபாடு
சனி ஜெயந்தி நாளன்று மாலை வேளையில் அரச மரத்திற்கு நீரை ஊற்றி, கடுகு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சனி தோஷம் குறைவதாக நம்பப்படுகிறது.
2. அனுமன் வழிபாடு
சனி பகவானும், அனுமனும் நண்பர்கள். எனவே இந்நாளில் அனுமன் சாலிசா, சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வதன் மூலம் சனியின் அசுப விளைவுகள் குறைவதாக கூறப்படுகிறது. எனவே நீங்கள் சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அனுமன் சாலிசா, சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யுங்கள்.
3. சனி மந்திரம்
சனி பகவான் பிறந்த நாளான சனி ஜெயந்தி நாளன்று சனி பகவானுக்கு முன் அமர்ந்து "ஓம் ஷண் சனைச்சராய நமஹ" என்னும் சனி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். இது மன அமைதியையும், நேர்மறை ஆற்றலையும் அளிக்கும்.
4. தர்மம் செய்யவும்
சனி பகவானின் மோசமான விளைவுகளைத் தணிக்க, ஏழை எளியோருக்கு கருப்பு நிற ஆடைகள், குடைகள், போர்வைகள், காலணிகள், இரும்பு பொருட்கள் போன்றவற்றை தானம் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே சனி ஜெயந்த நாளில் இந்த பொருட்களை தானம் செய்யுங்கள்.
5. கருப்பு எள் மற்றும் கடுகு எண்ணெய் விளக்கு
சனி ஜெயந்தி நாளன்று சனி பகவான் கோவிலுக்கு சென்று, அவருக்கு கருப்பு எள் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தி தீபம் ஏற்றுங்கள். இது சனிபகவானின் அசுப விளைவுகளைத் தடுக்கும்.
6. சனி ஸ்தோத்திரம்
சனி பகவான் பிறந்த நாளில் தசரதன் எழுதிய சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது சனி பகவானின் ஆசீர்வாதத்தைப் பெற உதவுவதாக நம்பப்படுகிறது. எனவே ஒரே பாட்டில் சனி பகவானை மகிழ்விக்க நினைத்தால், சனி ஸ்தோத்திரத்தை சொல்லுங்கள்.
7. விலக்குகள், பறவைகளுக்கு உணவளிக்கவும்
வாயில்லா ஜீவன்களான பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவை தானமாக வாங்குவது சனி பகவானை மகிழ்விக்கும். எனவே நீங்கள் சனி பகவானை எளிதில் சந்தோஷப்படுத்த நினைத்தால், இதை செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
