Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அளவில்லா அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
சனிபகவான் பெயரைக் கேட்டாலே அனைவரும் பயப்படுவார்கள், ஆனால் இந்த பயம் தேவையற்றது, ஏனெனில் சனிபகவான் நீதியின் பக்கம் நிற்பவர். சனிபகவான் மனிதர்களுக்கு கெட்ட பலன்களைத் தருவது மட்டுமின்றி அவர்களின் புண்ணியத்திற்கு ஏற்ப நல்ல பலனையும் தருகிறார்.
சனியின் நிலை சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை ஏற்படுத்துகிறது. ஏப்ரல் 6, 2024 அன்று, சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். அக்டோபர் 3ஆம் தேதி வியாழன் வரை சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பார்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் இந்த சனிப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான பலன்களைத் தரப்போகிறது. பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் இந்த சஞ்சாரத்தால் பலன் அடையப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் சஞ்சாரம் மிகவும் நன்மை பயக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் பண பலன்கள் கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு இருந்த அனைத்து நிதி பிரச்சனைகளும் தீரும். இந்த காலகட்டத்தில், நீங்கள் புதிய வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கலாம்.
வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் உங்கள் தொழில் நிலை பிரகாசமாக இருக்கும். அரசுப் பணிக்குத் தயாராவோர் கடின உழைப்பின் மூலம் அரசுப் பணியைப் பெறலாம். இந்த நேரத்தில், நிலுவையில் உள்ள பல பணிகள் முடிவடையும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
கடகம்
இந்த சனிப்பெயர்ச்சியால் கடக ராசியினருக்கும் நல்ல காலம் தொடங்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். பல வருட கடின உழைப்புக்குப் பிறகும் பதவி உயர்வு கிடைக்காவிட்டால், இந்த காலக்கட்டத்தில் அது தேடிவரும்.
உங்கள் பதவி மற்றும் வருமானம் வேகமாக உயரும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உங்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். உங்கள் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். கடந்த சில நாட்களாக உங்கள் மனதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது அனைத்தும் தீர்க்கப்படும். நீங்கள் கடனில் சிக்கியிருந்தால், இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலைமை மேம்படும், அதன்மூலம் கடன் பிரச்சினைகள் தீரும்.
உங்கள் வசதி அதிகரிக்கும் மற்றும் அது உங்கள் மனதை மகிழ்விக்கும். உங்களின் உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணையுடனான உறவு பலப்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் சனி பகவானின் அருள் பூரணமாகக் கிடைக்கும். வேலை தேடுபவர்களின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வரும். இக்காலத்தில் வியாபாரத்தில் இருப்பவர்கள் ஆதாயமடைவார்கள். பல புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரும்.
உங்கள் துணையுடன் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். திருப்தியான திருமண வாழ்க்கையால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைப்பேறு தொடர்பான சில மகிழ்ச்சியான செய்தியைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
