Latest Updates
-
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி!
துன்பம் நீங்கி சிவனுடைய அருளை பெற வேண்டுமா? ஷ்ராவண மாதத்தில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்..!
ஷ்ராவண மாதம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான மாதம். இந்த மாதத்தில் சிவனை வழிபடுவதால், மகிழ்ச்சி, அன்பு, தூய்மை, நிம்மதி, நிதி ஆதாயம் கிடைக்கும். இந்து மதத்தில் ஷ்ராவண மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது.
இது ஆடி அமாவாசையிலிருந்து ஆவணி அமாவாசை வரையுள்ள நாட்கள் வரும் காலத்தை ஷ்ராவண மாதமாக கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு சிராவண மாதம் எப்போது தொடங்கியது? இந்த மாதத்தில் யாரை வணங்க வேண்டும் என்பது குறித்த முழு தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

ஷ்ராவண மாதம் 2024
ஷ்ராவண மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இதை சவான் மாதம் என்று அழைக்கலாம்.. இந்த சவான் மாதம் என்பது ஆடி அமாவாசையிலிருந்து ஆவணி அமாவாசை வரையுள்ள காலம். இந்த ஆண்டு சவான் மாதம் ஜூலை 4 ஆம் தேதி தொடங்கியது.. இது ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவடைகிறது. ஷ்ராவண மாதம் முழுவதும் பெண்களுக்கான பண்டிகையான காலமாகும்.. இம்மாதத்தில் முழு ஈடுபாட்டுடன் வழிபாடுகள் மற்றும் சடங்குகள் செய்யப்படுகின்றன. பென்கள அதிகமாக விரதங்கள் இருப்பார்கள். வரலக்ஷ்மி விரதமும் இந்த ஷ்ராவண மாதத்தில்தான் வருகிறது.. மேலும் சிவனுக்கு திங்கட்கிழமை உகந்த நாள் என்பதால், இந்த மாதத்தில் வரும் அனைத்து திங்கட்கிழமையும் விஷேசம் வாய்ந்தது தான்.
சவான் சோம்வார் 2024
1. முதல் சவான் சோம்வார்: ஜூலை 22, 2024
2. இரண்டாவது சவான் சோம்வார்: ஜூலை 29, 2024
3. மூன்றாவது சவான் சோம்வார்: ஆகஸ்ட் 5, 2024
4. நான்காவது சவான் சோம்வார்: ஆகஸ்ட் 12, 2024
5. ஐந்தாவது சவான் சோம்வார்: ஆகஸ்ட் 19, 2024
சவான் மாதத்தில் முக்கியமாக செய்ய வேண்டியவைகள்
1. ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சவான் திங்கட்கிழமைகளில் ஊமத்தங்காயை மஞ்சளுடன் கலந்து சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்தால் நல்லது.. அதன்பிறகு, சிவனை வழிபடச் செல்லும் போது, வடக்கு நோக்கி நீர் வழங்கவும். அதன் பிறகு, சிவலிங்கத்தின் மீது மஞ்சள் கொண்ட ஊமத்தங்காயை அர்ச்சனையாக வழங்கவும். ஊமத்தங்காய் தண்டு சிவலிங்கத்தின் நீர்த்தேக்கத்தை நோக்கி இருக்க வேண்டும். இது ஜலதாரி என்று அழைக்கப்படுகிறது.
2. மேலும் ஷ்ராவண மாதம் திருமணமான பெண்களுக்கு மிகவும் உகந்தது. திருமணத்திற்கு உகந்த மாதம் இந்த ஷ்ராவண மாதம் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் பெரும்பாலான திருமணங்கள் ஷ்ராவண மாதத்தில் நடைபெறுகின்றன. இந்த ம்ாதத்தில் விரதம் விரதத்தால் சிவன் மகிழ்வடைந்து கேட்ட வரத்தை கொடுப்பார் எனவும் சொல்லப்படுகிறாது. சிவப்பெருமானின் மனைவியான பார்வதி கூட இந்த விரதத்தை கடைபிடித்துதான் தனது திருமணத்தை வென்றார் எனவும் சொல்லப்படுகிறது.
3. உங்கள் காரியங்கள் வெற்றி பெறவில்லை என்றால், நீங்கள் சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு உண்மையான மனதுடன் மகாதேவனை நினைவுகூர்ந்து அவருக்கு ஒரு ஊமத்தங்காய் வழங்குங்கள். ஊமத்தங்காயின் தண்டு சிவனின் நீர்நிலையை நோக்கி இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் முக்கியமான வேலையைத் தொடங்குவதற்கு முன் 6 நாட்களுக்கு தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். சிவன் அருளால் அந்த வேலையில் வெற்றி கிடைக்கும்.
4. இன்று ஷ்ராவண மாதத்தின் முதல் பிரதோஷம்.. வியாழக்கிழமையில் வருகிறது.. இது குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இதனால் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையானது, வியாழக்கிழமை பிரதோஷம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது..
5. பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சிவனை வழிபடுவதால் உடல் நலம் குணமாகும். மக்கள் ஆரோக்கியமாக இருப்பர்கள்.. சிவன் அருளால் ஒருவருக்கு ஆரோக்கிய வரம் கிடைக்கும். சிவனை வழிபடுவதால் வறுமையும் நோயும் நீங்கி மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை..



Click it and Unblock the Notifications