Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Republic Day 2024: குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினரை எவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள் தெரியுமா?
Republic Day 2024: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசுத் தினவிழா கொண்டாடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் வருவது இந்தியாவின் 74 வது குடியரசுத் தினமாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு டாக்டர். அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழுவால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த தினத்தையே நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்த குடியரசு தின நாளில் பள்ளி, கல்லூரிகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது உண்டு. புது டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் குடியரசுத் தலைவரால் தேசியக் கொடி ஏற்றுவது உண்டு. அப்படியே புது டெல்லி ராஜ்பாத்தில் பிரமாண்டமான அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பில் இந்திய ஜனாதிபதி உட்பட ஏராளமானோர் கலந்து கொள்வர்.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு விருந்தினரை அழைப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பிரான்ஸ் அதிபரான இம்மானுவேல் மேக்ரான் என்பவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சரி வாங்க குடியரசுத் தின விழாவிற்கான சிறப்பு விருந்தினரை எவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
2024 ஆம் ஆண்டின் சிறப்பு விருந்தினர்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 2024 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் மற்றும் எலிசே பிரான்ஸ் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இந்தியாவில் குடியரசு தின விழாவில் பிரான்ஸ் தலைவர் ஒருவர் பங்கேற்பது இது 6வது முறையாகும். 2023 ஆம் ஆண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் ஃபதா அல்-சிசி பங்கேற்றார். இப்படி ஏகப்பட்ட தலைவர்கள் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளனர்.
சிறப்பு விருந்தினர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்?
கடந்த காலத்தில் இந்தியாவில் சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுக்க சில குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி வந்தார்கள். இந்தியாவிற்கான சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்பதில் இந்திய அணிசேரா இயக்கம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. 1950 கள் மற்றும் 1960 களின் அணிசேரா இயக்கம் (NAM) என்பது ஒரு சர்வதேச இயக்கமாகும். இந்த இயக்கம் தான் காலனித்துவ நாடுகளின் வளர்ச்சி செயல்முறைக்கு உதவியது. அதன் படி இந்தியா தனது முதல் குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தோனேசியாவின் ஜனாதிபதி சுகர்னோவை அழைத்திருந்தனர். ஏனெனில் அணிசேரா இயக்கத்திற்கு நிதியளிக்கும் உறுப்பு நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்றாகும்.
குடியரசு தினத்திற்கான தலைமை விருந்தினரை தேர்வு செய்யும் முறை
குடியரசு தினத்திற்கான தலைமை விருந்தினரை தேர்வு செய்வது ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்தே தொடங்குகிறது. இதை வெளியுறவு அமைச்சகம் கவனித்து வருகிறது. தலைமை விருந்தினரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அந்த நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவுமுறையை பற்றி முதலில் சிந்திக்க வேண்டும். ஏனெனில் குடியரசு தினம் என்பது இந்தியாவிற்கான பெரிய விஷயமாகும். எனவே ஒரு நாட்டுடைய தலைவரை சிறப்பு விருந்தினராக தேர்ந்தெடுக்கும் போது அந்த நாட்டிடையே நட்புறவை பேணுவது மிகவும் அவசியம். மேலும் இந்தியாவின் பொருளாதாரம், இராணுவம், அரசியல் மற்றும் வணிக நலன்கள் போன்ற முக்கியமான காரணிகளும் இதில் கவனிக்கப்பட வேண்டும்.
2024 ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு
குடியரசு தின விழா அணிவகுப்பானது ராஷ்டிரபதி பவனுக்கு (ஜனாதிபதி மாளிகை) அருகிலுள்ள ரைசினா மலையிலிருந்து தொடங்கி ராஜ்பாத் வழியாகச் செல்கிறது. செங்கோட்டைக்குச் செல்லும் வழியில் இந்தியா கேட்டைக் கடந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கி இந்த அணிவகுப்பானது நடைபெறும்.
சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை
வெளியுறவு அமைச்சகம் குடியரசு தின விழாவிற்கான சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுத்த பிறகு இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒப்புதலைப் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. பிரதமரும் ஜனாதிபதியும் ஒப்புதலை தெரிவித்த பிறகு சாத்தியமான CG வேலைகள் எல்லாம் சரிபார்க்கப்பட வேண்டும். பிறகு வெளியுறவு அமைச்சகம் சிறப்பு விருந்தினர் உறுதி செய்யப்பட்ட உடன் அந்த நாட்டுடன் அதிகாரப்பூர்வ தொடர்பு கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொண்டு வரும்.
இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications