Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
15 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் ராகு புதன் சேர்க்கை: மார்ச்சில் இந்த 3 ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்
Rahu Mercury Conjunction 2024 In Pisces: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க செய்யும். அப்படி கிரகங்களின் சேர்க்கை நிகழும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
சில கிரகங்களின் சேர்க்கைகள் சில ஆண்டுகளுக்கு பின் நிகழும். அப்படி நிகழும் போது, சில ராசிக்காரர்களுக்கு அந்த சேர்க்கை மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அந்த வகையில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மார்ச் மாதத்தில் மீன ராசியில் நுழைகிறார்.

இதனால் மீன ராசியில் ராகு புதன் சேர்க்கை நிகழும். இந்த சேர்க்கை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இப்படி நிகழும் சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது மீன ராசியில் நிகழும் ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். இந்த ஒப்பந்தத்தால் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் இக்காலத்தில் எதிர்பார்த்த கடன் தொகையை பெறுவார்கள். பேச்சுடன் தொடர்புடைய வேலைகளை செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலில் எதிர்பாராத வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. தொழிலதிபராக இருந்தால், வணிகத்தில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு வலுவடையும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
