Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
இந்த 4 ராசிக்காரங்க தனது சந்தோஷத்துக்காக நிறைய பணத்தை செலவு பண்ணுவாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் நிறைய பணத்தை செலவழிப்பார்கள். அதே வேளையில் சில ராசிக்காரர்கள் மிகவும் கஞ்சமாக இருப்பார்கள். இவையெல்லாம் ராசியை ஆளும் கிரகங்களினால் தான்.
ஜோதிர சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரரின் குணாதிசயங்களும் வேறுபட்டிருக்கும். ஏனெனில் ஒவ்வொரு ராசியும் சில கிரகங்களால் ஆளப்படுகின்றன. இதனால் கிரகங்களின் தாக்கம் மக்களின் வாழ்க்கையில் காணப்படுகிறது. சொல்லப்போனால் ஒருவரது குணாதிசயமானது கிரகங்களின் தன்மையைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.

ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் நிறைய பணத்தை செலவழிப்பார்கள். அதே வேளையில் சில ராசிக்காரர்கள் மிகவும் கஞ்சமாக இருப்பார்கள். இவையெல்லாம் ராசியை ஆளும் கிரகங்களினால் தான். இப்போது நாம் பார்க்கப் போவது, தங்களின் சந்தோஷத்திற்காக அதிக பணத்தை செலவழிக்கும் ராசிக்காரர்களைப் பற்றித் தான். இந்த ராசிக்காரர்கள் நிறைய பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் ஆடம்பர செலவுகளையும் செய்வார்கள். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பணத்தை அதிகம் செலவு செய்யக்கூடியவர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனின் தாக்கத்தால் தான் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சகல சுகபோகங்களையும் பெறுகிறார்கள். மேலும் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வத்தை காட்டுகிறார்கள். அதோடு இந்த ராசிக்காரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியை தனது சந்தோஷத்திற்கு செலவழிப்பார்கள். இருப்பினும், இவர்களிடம் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. ஏனெனில் இவர்கள் அதிக பணத்தை சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள்.

கடகம்
கடக ராசியின் அதிபதி புதன். இந்த புதனின் தாக்கத்தால், இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகளாக கருதப்படுகிறார்கள். இதனால் இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பணம் சம்பாதிக்கிறார்கள். அதுவும் புதிய திட்டங்களின் மூலம் நல்ல பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவார்கள். அதோடு இந்த ராசிக்காரர்களுக்கு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற தீவிர ஆசையும் உண்டு. மேலும் இந்த ராசிக்காரர்கள் ஒரு வேலையை செய்ய முடிவெடுத்துவிட்டால், அதை முடித்த பின்னரே நிம்மதியடைவார்கள். தங்களின் வசதிக்காக அதிக பணத்தை சுதந்திரமாக செலவு செய்வார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் நன்கு பழகக்கூடியவர்கள். இவர்கள் தங்களின் நடத்தையால் நல்ல உறவுகளை உருவாக்குவார்கள். இது தவிர, இவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கக்கூடியவர்கள். மேலும் இவர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். தங்களுடைய வசதிக்கு எவ்வித குறையும் இல்லாமல் இருக்க கடுமையாக உழைப்பார்கள். அதோடு இவர்கள் பிராண்டட் பொருட்களையே பயன்படுத்த விரும்புவார்கள். இதற்காக நிறைய பணத்தையும் செலவழிப்பார்கள்.

துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் பொருள், இன்பத்திற்கு காரணமாக கிரகமாக கருதப்படுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், அவர் எல்லா சுகங்களையும் பெறுவார். இந்த ராசிக்காரர்களுக்கு விலை உயர்ந்த பொழுதுபோக்குகளின் மீது அதிக நாட்டம் இருக்கும். மேலும் இவர்கள் உணவு மற்றும் தங்கள் வாழ்க்கைகாக நிறைய பணம் செலவழிப்பார்கள். இதனால் பணம் செலவழிப்பதில் இந்த ராசிக்காரர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
