Just In
- 8 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 9 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 11 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 12 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'அந்த' விஷயத்தில் சிறந்த பார்ட்னராக இருக்கும் 5 ராசிகள் எது தெரியுமா? உங்க ராசி இதுல இருக்கா?
பாலியல் பொருத்தம் என்பது ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான உறவின் ஒரு முக்கிய அம்சம் என்பதை மறுக்க முடியாது. பொருத்தம் என்று வரும்போது பலரும் தங்கள் பாலியல் வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
பாலியல் பொருத்தம் என்பது ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான உறவின் ஒரு முக்கிய அம்சம் என்பதை மறுக்க முடியாது. பொருத்தம் என்று வரும்போது பலரும் தங்கள் பாலியல் வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாலியல் இணக்கமான கூட்டாளரைக் கண்டுபிடிப்பது வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களிலும் பழகுவதைப் போலவே முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
இராசி அறிகுறிகள் ஒருவரின் ஆளுமைப் பற்றி நிறைய சொல்ல முடியும். ராசிபலன்களின் படி படுக்கையில் யார் சிறந்தவர் என்பதையும் சொல்ல முடியும், இது சரியான கூட்டாளரை தேடுவதற்கு உங்களுக்கு நிச்சயமாக உதவும். உங்களின் பாலியல் ஆசைகள் பற்றி உங்கள் துணையிடம் வெளிப்படையாக இல்லாதது பல சிக்கலுக்கு வழிவகுக்கும்.
சிறந்த ராசிகள்
ஜோதிடம் நிச்சயமாக படுக்கையில் சிறப்பாக செயல்படும் ராசி அறிகுறிகளைப் பற்றிய தகவல்களை உங்களுக்குக் கொடுக்க முடியும். எனவே உங்கள் தேடலை பூர்த்தி செய்யும் பாலியல் வலிமைக்கு பெயர் பெற்ற ராசிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சிம்மம்
இந்த காட்டுராஜா எளிதில் படுக்கையில் சிறப்பாக செயல்படும் இராசி அறிகுறிகளில் ஒன்றாகும். இவர்கள் உற்சாகம் நிறைந்த, ஆர்வமுள்ளவர்களாகவும், படுக்கையில் அனைத்தையும் தொடங்குபவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் துணையை படுக்கையில் மிகவும் சிறப்பாக உணரவைக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள். இந்த சூரிய அடையாளம் ஒரு அழகான மரியாதைக்குரிய காதலன் என்றும் அறியப்படுகிறது, மேலும் உங்கள் தேவைகளையும் கோரிக்கைகளையும் அவர்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள்.
MOST READ: பண்டைய இந்தியாவின் தலைசுற்ற வைக்கும் வினோதமான பாலியல் செயல்பாடுகள்... ஷாக் ஆகாம படிங்க...!
துலாம்
மற்ற விஷயங்களைப் போலவே படுக்கையிலும் அவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் கொடுக்கும் மற்றும் எடுக்கும் கலையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் மற்றும் நம்பமுடியாத அளவிற்கு திறமையான காதலர்கள் என்று அறியப்படுகிறார்கள். உங்கள் கொடூரமான கற்பனைகளை நிறைவேற்றுவது முதல் மேலும் உங்கள் மோசமான கனவுகளை உயிர்ப்பிப்பது வரை அனைத்தையும் அவர்கள் அறிவார்கள்.
விருச்சிகம்
இந்த சிற்றின்ப ராசிக்காரர்களுக்கு ரகசிய பாலியல் விளையாட்டை எவ்வாறு நன்றாக விளையாடுவது என்று தெரியும். இவர்கள் படுக்கையில் ஆதிக்கம் செலுத்துவதுடன் புதிய சோதனைகளையும் முயற்சிப்பார்கள். அவர்களின் கவரும் குணம் உங்களைஉச்சக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். படுக்கையறையைப் பொறுத்தவரை நீங்கள் சொல்லாமலேயே உங்களின் தேவைகளை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
கன்னி
நிதானமான, ஆர்வம் நிறைந்த உடலுறவை விரும்புபவர்கள் தாராளமாக கன்னி ராசிக்காரர்களை மணந்து கொள்ளலாம். உடலுறவைப் பொறுத்தவரை உங்களுக்கு வசதியான சூழலை உருவாக்க தங்களால் முயன்ற அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். அவர்கள் உங்கள் பாலியல் விருப்பங்களைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள், அவை அனைத்தையும் முடிந்தவரை பூர்த்தி செய்வார்கள்.
MOST READ: கொரோனா நோயாளிகளை தாக்கும் புதிய ஆபத்தான நோய்... அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
தனுசு
அப்பாவி போல தோற்றமளிப்பதால் இவர்களை படுக்கை விஷயங்களில் ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உடலுறவின் போது தன்னிச்சையான காதல், ஆர்வம் மற்றும் உற்சாகத்தை இவர்கள் வெளிப்படுத்துவார்கள். புதிய முயற்சிகளுக்கு இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள் மேலும் உங்களையும் உற்சாகப்டுத்துவார்கள். இவர்களுடனான உறவு எப்பொழுதும் புதிய அனுபவமாக இருக்கும்.