Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
Propose Day 2024: புரோபோஸ் தினத்தன்று காதலை தனித்துவமாக புரோபோஸ் செய்ய சில சுவாரஸ்யமான வழிகள்!
Propose Day 2024: காதலர் தினம் நெருங்கி வருகிறது. உள்ளத்தில் நிறைய காதலுடன் இந்த தடவையாவது அவகிட்ட சொல்லிடனும்னு நிறைய பேர் காத்துகிட்டு இருப்போம். ஆனால் நிறைய ஆண்களுக்கு தங்கள் காதலியிடம் லவ்வை எப்படி புரோபோஷ் பண்ணனும் என்பது தெரிவதில்லை. தினசரி நிறைய ஒத்திகையெல்லாம் பார்ப்பார்கள். ஆனால் காதலிகிட்ட போய் பேசும் போது எல்லாம் சொதப்பலாகி விடும்.
நாளை புரோபோஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த புரோபோஸ் தினத்தில் உங்கள் காதலை நீங்கள் தாராளமாக சொல்லலாம். சரி வாங்க உங்க காதலை எப்படி தனித்துவமாக புரோபோஸ் செய்யலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

புரோபோஸ் டே
இந்த புரோபோஷல் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. உங்களுக்கு நெருக்கமான நபரிடம் உங்கள் காதலை சொல்ல சரியான நாளாகும். உங்கள் தனித்துவமான ஐடியாக்களைப் பயன்படுத்தி வித்தியாசமான முறையில் புரோபோஷ் செய்யலாம். நீங்கள் புரோபோஷ் செய்யும் விதம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும். அப்புறம் என்ன உங்கள் காதலியிடம் இருந்து கண்டிப்பாக க்ரீன் சிக்னல் தான்.
நீங்கள் சந்தித்த முதல் தேதி
நீங்கள் அவரை சந்தித்த முதல் நாள் எப்படி இருந்தது என்பதை வெளிப்படுத்தலாம். அன்றைக்கு அணிந்த அதே ஆடையில் இருவரும் செல்லலாம். முதல் நாளில் அவரை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த விஷயங்களை பற்றி நீங்கள் பேசலாம். இப்படி ஒருவருக்கொருவர் முதல் நாள் அனுபவம் பற்றி பேசலாம். இந்த மாதிரி பேசுவது உங்கள் காதலிக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நீங்கள் எல்லா விஷயங்களையும் மறக்காமல் இருப்பது அவர் மேல் நீங்கள் வைத்த முக்கியத்துவத்தை காட்ட உதவுகிறது.
நடைபயணம் மேற்கொள்ளுங்கள்
உங்கள் துணையுடன் ஒரு நடைபயணத்தை மேற்கொள்ளலாம். அப்படியே பேசிக் கொண்டே போகும் போது உங்கள் ஆசைகளை நீங்கள் வெளிப்படுத்தலாம். உங்கள் காதலிக்கு பிடித்த அழகான இடத்திற்கு அழைத்துச் சென்று புரோபோஷ் செய்யலாம். கடற்கரை, சூரிய அஸ்தமனிக்கும் இடம், பூங்கா ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்லலாம்.
புதையல் வேட்டை விளையாட்டு
உங்கள் புரோபோஷலை வித்தியாசமாக சொல்ல இந்த புதையல் வேட்டை விளையாட்டு சிறந்த ஒன்றாக இருக்கும். உங்கள் காதலிக்கு ஒரு புதிர் விளையாட்டை வைக்கலாம். உங்கள் காதலிக்கு சிறிய சிறிய குறிப்புகளை கொடுத்து அதிலிருந்து உங்கள் காதலை புரோபோஷல் செய்யலாம். இப்படி புரோபோஷல் செய்யும் கண்டிப்பாக உங்கள் காதலி yes தான் சொல்வார்கள்.
கவிதை எழுதுங்கள்
பெண்களுக்கு கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். உங்கள் இதயத்தின் உள்ளே பூட்டிருக்கும் ஆழமான அன்பை காதலை எழுத்து வடிவில் கவிதைகளாக தொகுத்து கொடுக்கலாம். நீங்கள் உணரும் அனைத்தையும் கவிதைகளாக எழுதுங்கள். கவிதைகளில் உங்கள் காதலியை கொஞ்ச மறக்காதீர்கள். நீங்கள் அவரின் சிறந்த பாதியாக இருக்க நினைக்கிறீர்கள் என்பதை கவிதை வடிவில் எழுதுங்கள்.
ஸ்கிராப் புக் புரோபோஷல்
உங்கள் காதலிக்காக ஒரு ஸ்கிராப் புக்கை நீங்கள் தயார் செய்யலாம். உங்கள் நினைவுகளை ஒன்றாக தொகுத்து அழகான புகைப்படங்களுடன் குறிப்புகளை எழுதி உங்கள் காதலிக்கு பரிசாக கொடுக்கலாம். அதில் உங்கள் காதலையும் நீங்கள் வெளிப்படுத்தலாம்.
மியூசிக் வழியாக புரோபோஷ் செய்தல்
உங்கள் காதலிக்கு இசையின் மீது அளவுகடந்த ஆர்வம் இருந்தால் மியூசிக் வழியாக நீங்கள் புரோபோஷ் செய்யலாம். நீங்கள் நன்றாக பாட்டு பாடுவீர் என்றால் பாட்டின் வழியாக உங்கள் காதலை நீங்கள் வெளிப்படுத்தலாம். உங்களுக்கு பியானோ, கிடார் போன்ற இசைக்கருவிகள் வாசிக்க தெரியும் என்றால் அதன் வழியாகவும் உங்கள் காதலை நீங்கள் புரோபோஷ் செய்யலாம்.
மழையில் ஒரு முத்தம்
உங்கள் காதலிக்கு மழையில் நனைவது மிகவும் பிடிக்கும் என்றால் அந்த மாதிரியான இடத்தில் வைத்து புரோபோஷ் செய்யலாம். மழையில் நனைந்த படியே அவருடன் நடனமாடிக் கொண்டே கைகளில் மோதிரத்தை போட்டு விடலாம். அவர் உங்கள் காதலை ஏற்றுக் கொண்டால் முத்தமழையில் நனையுங்கள்.
பார்டியில் புரோபோஷ் செய்தல்
உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்து உங்கள் காதலிக்கு பிடித்த உணவுகளை விருந்தாக கொடுக்கலாம். விருந்தின் முடிவில் எல்லோரின் மத்தியில் நீங்கள் புரோபோஷ் செய்யலாம். இருவரும் ஒன்றாக நடனமாடி அன்றைய தினத்தை நீங்கள் கொண்டாடலாம்.



Click it and Unblock the Notifications