Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களே! ஒரு பெண் உங்களை விரும்புகிறாள் என்றால் இப்படித்தான் நடந்து கொள்வாளாம்.. தெரிஞ்சுக்கோங்க..
Valentines Day 2024: ஆறு அது ஆழம் இல்ல, அது சேரும் கடலும் ஆழம் இல்ல, ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா என்ற பாடல் வரிகளை கேட்டு இருப்பீங்க. அது உண்மைதான் பெண்கள் தங்கள் மனதில் என்ன நினைக்கிறாங்கன்னு அவ்வளவு எளிதாக சொல்ல முடியாது. ஒரு பெண் ஒரு ஆணிடம் பழகுவதை வைத்து ஒரு யூகத்துக்கு வந்து விட முடியாது.
பெண்கள் பொதுவாக நிறைய விஷயங்களை நேரடியாக வெளிப்படுத்துவதில்லை. அவர்களுக்கு ஒரு நபரை பிடித்திருந்தால் கூட அதை மறைமுகமாகத்தான் கூறுவார்கள். பெண்கள் ஒரு ஆணை தேர்வு செய்ய நிறைய காரணங்கள் இருக்குமாம். ஆண்கள் தான் அதை புரிந்து கொள்வதே இல்லை. ஒரு பெண் உங்களை விரும்புகிறாள் என்றால் கீழ்க்கண்ட விஷயங்களை அவர்கள் செய்வார்களாம். ஆண்கள் இதை சரியாக புரிந்து கொண்டாலே போதுமாம்.

அதுவும் காதலர் தினம் வரப்போகிறது. உங்களுக்கு பிடித்த பெண்ணுக்கு உங்களைப் பிடிக்கிறதென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு நடந்து கொள்வார்கள். அதை நீங்கள் அப்பெண்ணிடம் கண்டால், வருகிற காதலர் தினத்தில் உங்கள் காதலை தெரிவியுங்கள்.
ஒரு பெண் ஒரு ஆணை விரும்பினால் வெளிப்படுத்தும் விஷயங்கள்:
அன்பு எங்கே என்ற தேடல்
ஒரு பெண் உங்களை விரும்புகிறாள் என்றால் அவள் உங்களிடம் இருந்து அன்பை எதிர்பார்க்க ஆரம்பிப்பாள். உங்களது அன்பு, நட்பு போன்ற தொடர்புகள் அவர்களுக்கு முக்கியமானதாக தெரியும். நீங்கள் காட்டும் அன்பு அவரை வெகுவாக கவர ஆரம்பிக்கும்.
நிலைமையை மதிப்பீடு செய்தல்
நீங்கள் அவளிடம் எதாவது கூறினால் அவள் உங்களை ரசிக்கிறாளா அந்த விஷயம் அவளுக்கு பிடிக்கிறதா என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவளுடைய உடல் மொழியை வைத்தே இதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் நீங்கள் கவனிக்கும் போதே அது உங்களுக்கு புரியும். அவள் உங்களை விரும்புகிறாள் என்பதை அவள் உடல் மொழி வைத்தே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
அலைந்து திரிந்த பார்வை
நீங்களும் அவளும் பேசும் போது கண் தொடர்பு என்பது மிக முக்கியமானது. அவள் உங்களிடம் கண் தொடர்பு காட்டாவிட்டால் உங்களது பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம். இதுவே உங்கள் உரையாடல் அவளுக்கு பிடித்து இருந்தால் அவள் உங்களை பார்த்து பேச ஆசைப்படுவாள். இதுவே கீழ் நோக்கி பார்த்தல், தொலை தூர பார்வை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே உங்கள் பேச்சை மாற்றி வேறு தலைப்பில் பேசுங்கள். எனவே ஒரு பெண்ணின் பார்வை உங்கள் மீது இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.
உடல் தோரணைகள்
அவளுடைய உடல் தோரணைகள் கூட விருப்பத்தை ஏற்படுத்தும். அவள் அசெளகரியமாக இருக்கிறாளா அல்லது உங்கள் கவனத்தால் அச்சுறுத்தப்படுகிறாளா என்பதைக் கூட அறிகுறிகளாக அறியலாம். அவள் உடல் தோரணை உங்கள் மீது விருப்பம் இல்லை என்பதைக் காட்டினால் புரிந்து கொள்ளுங்கள்.
பேசும் விதம்
சில நேரங்களில் உங்க லவ்வர் பேசும் விதத்தை வைத்தே அவருக்கு உங்களை பிடித்து இருக்கா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் அவள் சலிப்பாக பேசலாம். அவளுடைய குரலில் உங்களுக்கு சிவப்பு கொடி காட்டலாம். அதை வைத்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஆர்வமின்மையை எதிர்கொள்ளுதல்
உங்களுடைய பேச்சு அவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதனால் உங்கள் மீது ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். இதுவே உங்களுடன் இருப்பதை அவர் நன்றாக உணர்ந்தாலோ அல்லது உங்கள் பேச்சு அவருக்கு பிடித்து இருந்தாலோ அவர் உங்களை விரும்புவதை நீங்கள் உறுதி செய்யலாம்.
சரியான முறையில் வெளியேறுதல்
அவளுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் சரியான முறையில் வெளியேறுவது மிகவும் அவசியம். மரியாதையுடனும் அன்புடனும் வெளியேறுவது அவசியம். நீங்கள் அவளிடம் மரியாதை காட்டினால் அடுத்த முறை அவளை நீங்கள் பார்க்கும் போது ஒரு புன்முறுவல் அல்லது அவளது நினைவில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவீர்கள். அவளிடம் முதிர்ச்சியுடன் நடந்து கொள்வது மிகவும் அவசியம். இந்த புரிதல் உங்களுக்கு மேலும் காதலில் கை கொடுக்கும்.
உணர்ச்சிகளை கணித்தல்
அவளுடன் இருக்கும் போது அவளுடைய உணர்ச்சிகளை கவனிப்பது மிகவும் அவசியம். அவள் மனதில் நிறைய பிரச்சினைகள் இருக்கலாம். அவளுடன் நீங்கள் பேசும் போது அதை புரிந்து கொண்டு பேசுவது நல்லது. ஒரு பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications