Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
இந்த ராசிக்காரங்க பண்றதெல்லாமே பொய் சத்தியம்தானாம்.. தெரியாம கூட இவங்கள நம்பிராதீங்க...!
நீங்கள் கடைபிடிக்க முடியாத ஒரு வாக்குறுதியை கூறும்போது அது பொய் சத்தியமாக மாறுகிறது. மேலும் நீங்கள் சத்தியம் செய்தவர்களை ஏமாற்றியவர் ஆகிறீர்கள்.
சத்தியம் செய்வதும், அதனை கடைப்பிடிப்பதும் என்பது அனைவராலும் முடியாத ஒன்றாகும். அனைவருமே பிறர் தங்களுக்கு செய்த சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள், ஆனால் அவர்கள் அவ்வாறு இருக்க மாட்டார்கள். வாக்குறுதி கொடுப்பது என்பது எளிதானது, ஆனால் அதனை கடைபிடிப்பதில்தான் சிக்கலே உள்ளது.

நீங்கள் கடைபிடிக்க முடியாத ஒரு வாக்குறுதியை கூறும்போது அது பொய் சத்தியமாக மாறுகிறது. மேலும் நீங்கள் சத்தியம் செய்தவர்களை ஏமாற்றியவர் ஆகிறீர்கள். இந்த பொய் சத்தியங்கள் உங்களின் மீதான மற்றவர்களின் நம்பிக்கையை சிதைக்கும். சிலர் இந்த பொய் சத்தியங்களை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்வார்கள். இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பொய் சத்தியத்தை எளிதாக செய்வார்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஒரு சத்தியம் செய்யும்போது அதனை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் செய்வார்கள். எப்போதும் அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் அதிகமிருப்பதால் அவர்கள் இதனை மறந்து விடுவார்கள். தங்களால் அந்த விஷயத்தை செய்ய முடியுமா என்றே யோசிக்காமல் இவர்கள் வாக்குறுதி கொடுத்து விடுவார்கள். ஒரே விஷயத்தை முழுகவனத்துடன் செய்வது என்பது இவர்களால் முடியாது. தங்களை நிராகரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இவர்கள் அடிக்கடி பொய் சத்தியம் செய்வார்கள். அதனை நினைத்து இவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் ஒன்றை பெறுவதற்காக பொய் சத்தியம் செய்வார்கள். இவர்கள் தங்கள் சத்தியத்தை அடமானமாக பயன்படுத்துவார்கள், ஆனால் அதனை கடைபிடிப்பார்களா என்பது சந்தேகம்தான். இவர்கள் மற்றவர்களின் மனதை எளிதில் மாற்றக்கூடியவர்கள் எனவே தங்களின் செயல்கள் நல்லதுக்காகத்தான் என்று மற்றவர்களை எளிதில் நம்ப வைப்பார்கள். கும்ப ராசிக்காரர்கள் சிலசமயம் மற்றவர்கள் விரும்புவதை விட முரணாக இருப்பார்கள், குறிப்பாக சத்தியம் தொடர்பான விஷயங்களில். சத்தியத்தை பாதுகாக்க அழுத்தம் கொடுக்கப்பட்டால் இவர்கள் அதனை கடைபிடிக்கமாட்டார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். நீங்கள் நம்பக்கூடிய ஒருவராகவும் அவர்களை பார்க்க விரும்புகிறார்கள், எனவே அவர்கள் கடைபிடிக்க வாய்ப்பில்லாத வாக்குறுதிகளை அளிப்பார்கள். நேர்மையாக இருப்பதும், அவர்களுக்கு செய்ய விருப்பம் இல்லை என்பதை கூறிவிடுவதும் மிகவும் எளிது ஆனால் இதனால் மற்றவர்களின் மனது கஷ்டப்படும் என்று அஞ்சி இவர்கள் பொய்யான வாக்குறுதிகளை கூறுவார்கள். எவ்வளவு பெரிய சத்தியத்தையும் தன்னால் நிறைவேற்ற முடியுமா என்று சிந்திக்காமல் இவர்கள் செய்துவிடுவார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் கனிவானவர்கள் எனவே தன்னிடம் உதவி கேட்கும் அனைவருக்கும் உதவ வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள். இவர்களிடம் இருக்கும் பிரச்சினையே இவர்களால் " இல்லை " என்று கூறமுடியாமல் இருப்பதுதான். அதனால் இவர்கள் அனைத்து விதமான வாக்குறுதிகளையும் எளிதில் வழங்கிவிடுவார்கள். ஆனால் அதனை நிறைவேற்றுவதற்கான நேரம் வரும்போது அவர்கள் தாங்கள் செய்த சத்தியத்தில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. இவர்களின் நோக்கமெல்லாம் தாங்கள் கூறும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் ஆனால் எதார்த்தத்தில் யாராலும் அவ்வாறு இருக்க முடியாது என்பதை இவர்கள் உணரமாட்டார்கள்.

தனுசு
சத்தியம் செய்வதை பொறுத்தவரை இவர்கள் அஜாக்கிரதையாக இருப்பார்கள், தாங்கள் செய்த சத்தியத்தை அடுத்த நிமிடமே இவர்கள் மறந்து விடுவார்கள். இவர்கள் தீங்கிழைப்பவர்கள் அல்ல, ஆனால் தங்களின் சொந்த தேவைகள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். வாக்குறுதியைக் கடைப்பிடிப்பதை விட அவர்கள் தங்கள் நேரத்தை என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பது முக்கியம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஒரு வாக்குறுதியை கொடுக்கும்போது அவர்களால் அது செய்யக்கூடியதாகத்தான் இருக்கும், ஆனால் அடுத்தடுத்த விஷயங்கள் வரும்போது அவர்களின் சத்தியங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறைந்துவிடும். இவர்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஒரு விஷயத்தை செய்வதாக ஒப்புக்கொள்வார்கள், ஆனால் அதனை நிறைவேற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டால் அதனை அப்படியே விட்டுவிடுவார்கள். தங்களின் திறமையை மற்றவர்கள் கேள்விக்குள்ளாக்குவதை இவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.



Click it and Unblock the Notifications