Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசிக்காரங்க பயங்கரமா கடலை போடுவாங்க.. ஆனா இதுவே இவர்கள் மீது காதலை வர வெச்சிடுமாம்..
கடலை போடுபவர்களை கையாள்வது சற்று கடினமாக இருக்கும். போரடிக்காமல் கடலைப் போடும் திறனைக் கொண்ட அந்த 5 ராசிக்காரர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அனைவரிடமும் திறமையாக பேசும் திறன் இருந்துவிடாது. அதேப் போல் பேச்சாற்றல் இருக்கும் அனைவரையுமே அனைவருக்கும் பிடித்துவிடாது. ஏனெனில் சிலர் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசுவார்கள். பொதுவாக ஒருவருக்கு ஒருவரைப் பிடிக்கும் போது, தூரத்தில் இருந்து அவர்களை பார்த்து ரசிப்பதோடு, அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்களுடன் சிறு பேச்சுக்களை உருவாக்க முயற்சிப்பார்கள். ஆனால் சிலர் பிடித்துவிட்டால், உடனே களத்தில் இறங்கி அவர்களுடன் பல வருடங்கள் பழகியது போன்று பேசி கடலைப் போடுவார்கள். இப்படி கடலைப் போடுபவர்கள் இயற்கையாகவே மென்மையாகவும், சற்று வசீகரமாகவும் இருப்பார்கள்.

கடலை போடுபவர்களை கையாள்வது சற்று கடினமாக இருக்கும். ஏனெனில் இவர்கள் நன்கு கடலை போட்டு உங்களை அறியாமலேயே உங்களுடன் நன்கு ஊர் சுற்றுவார்கள் மற்றும் சிரமமின்றி உங்களை சிரிக்க வைக்கும் திறனைக் கொண்டிருப்பார்கள். இப்படி போரடிக்காமல் கடலைப் போடும் திறனைக் கொண்ட அந்த 5 ராசிக்காரர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களைப் பற்றி எளிய வார்த்தைகளில் கூற வேண்டுமானால், இவர்கள் சிரமமின்றி எளிதில் ஒருவருடன் கடலை போடும் திறன் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களின் நம்பிக்கையுடன், நல்ல நகைச்சுவை உணர்வுடனும் ஒருவரை ஈர்க்கிறார். மேலும் இவர்கள் நன்கு ஊர் சுற்றக்கூடியவர்கள் மற்றும் இவர்கள் மற்றவர்கள் தங்களின் குணாதிசயங்களால் தான் ஈர்க்கிறார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணமுடையவர்கள் என்பதால், இவர்கள் எளிதில் மற்றவர்களுடன் சகஜமாக பேசுகிறார்கள். இவர்கள் தங்கள் மனதிற்கு ஒருவரைப் பிடித்துவிட்டால், இவர்களை அறியாமலேயே அவர்களுடன் கடலை போட ஆரம்பித்துவிடுவார்கள். மேலும் இவர்களுக்கு என்ன பேச வேண்டும், எப்போது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும்.

சிம்மம்
இயற்கையாகவே சிம்ம ராசிக்காரர்கள் நல்ல நண்பர்களாக பழகுவார்கள் மற்றும் தலைமைப் பண்பு கொண்டவர்கள். இந்த குணம் தான் இவர்களுக்கு ஒருவரைப் பிடிக்கும் போது மற்றவர்களை ஈர்க்க வைக்க உதவுகிறது. மேலும் இந்த ராசிக்காரர்கள் எப்போதும் ஒருவருடன் பேசும் போது கண்களைப் பார்த்தே பேசுவார்கள் மற்றும் மனதிற்கு பிடித்தவர்களை அணுகி பேச அதிக நேரம் எடுக்கமாட்டார்கள்.

விருச்சிகம்
உணர்ச்சிவசப்படும் மற்றும் மர்மம் நிறைந்த விருச்சிக ராசிக்காரர்கள் எளிதில் மற்றவர்களை ஈர்க்கக்கூடியர்கள். இவர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் விருச்சிக ராசிக்காரர்களிடம் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மற்றவர்களுடன் கடலை போடுவது எளிதாக இருக்கிறது. மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்களின் கவர்ச்சியான மற்றும் தீவிரமான குணாதிசயத்தால் மற்றவர்களை ஈர்க்கிறார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மற்றவர்களை அவ்வளவு எளிதில் ஈர்க்கமாட்டார்கள். ஆனால் இவர்கள் ஒருவரை ஈர்க்க நினைத்தால், அவரைக் கவர தங்களால் முடிந்தவரை முயற்சிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் நகைச்சுவை குணம் கொண்டவர்கள். இதுவே இவர்கள் ஒருவரை ஈர்க்க நினைப்பவரை எளிதில் ஈர்க்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications











