Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
இந்த ராசிக்காரங்களுக்கு மட்டும்தான் காதலில் எப்பவும் அதிர்ஷ்டம் இருக்குமாம் ஏன் தெரியுமா?
சிலர் மற்ற விஷயங்களில் எப்படி இருந்தாலும் காதலர் விஷயத்தில் மிகவும் தெளிவான நல்ல முடிவை எடுப்பார்கள். அவர்கள் தேர்ந்தேடுப்பவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
பொதுவாக அனைத்திலும் நல்ல முடிவை எடுப்பவர்கள் என்று நாம் நினைப்பவர்கள் காதல் விஷயத்தில் தவறான முடிவை எடுத்துவிடுவார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் காதல் துணை அவர்களுக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவர்களாக இருக்கமாட்டார்கள், அதற்கு அவர்கள் கூறும் பதிலும் அபத்தனமானதாக இருக்கும். இதனால் அவர்களின் முடிவெடுக்கும் ஆற்றல் மீது உங்களுக்கு சந்தேகங்கள் எழலாம்.

மறுபுறம் இதற்கு நேர்மாறாக சிலர் மற்ற விஷயங்களில் எப்படி இருந்தாலும் காதலர் விஷயத்தில் மிகவும் தெளிவான நல்ல முடிவை எடுப்பார்கள். அவர்கள் தேர்ந்தேடுப்பவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களை காதலில் அதிர்ஷ்டசாலி என்று அனைவரும் நினைப்பார்கள். ஆனால் இந்த அதிர்ஷ்டம் அவர்களுக்கு கிடைக்க அவர்களின் பிறந்த ராசி ஒரு முக்கிய காரணமாகும். ஒருவரின் ராசி அவர்களின் முடிவெடுக்கும் திறனை நிரணயிக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சரியான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பார்கள் என்று பார்க்கலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பார்கள். காதல் விஷயங்களை பொறுத்தவரை இவர்களின் ஆறாவது அறிவு எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும். மகர ராசிக்காரர்கள் மனிதர்களை படிக்க முடியும், எனவே இவர்கள் உணமையான நல்லவர்களையும், பாசாங்கு செய்பவர்களையும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள். மகர ராசிக்காரர்கள் ஒரு மோசமான நகைச்சுவை உணர்வைக் கொண்டுள்ளனர், தங்கள் துணையிடமும் இதைத்தான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். நெருக்கடி காலங்களில் ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருக்கும் ஒருவரை அவர்கள் விரும்புவார்கள். எனவே இவர்கள் ஒருவரை தேர்ந்தடுக்கும் போது அவர்கள் இந்த அனைத்து குணங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அத்தியாவசியமாக நினைக்கும் விஷயங்களில் காதலும், ரொமான்ஸும் எப்பொழுதும் இருக்கும். அதிர்ஷ்டவசமாக யார் உண்மையில் அவர்களை காதலிப்பார்கள் என்பதை உள்ளுணர்வு இவர்களுக்கு இருக்கிறது. இவர்களுக்கு உள்ளுணர்வு மற்றும் மற்றவர்களின் உண்மையான நோக்கம் என்பதை கண்டறியும் திறன் இயற்கையாகவே இருக்கும். தன்னுடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இவர்கள் விரைவாகவே புரிந்து கொள்வார்கள். மீன ராசிக்காரர்கள் தங்கள் உள்ளுணர்வை பின்பற்றும்போது அது அவர்களின் உண்மையான காதலை நோக்கி அழைத்துச் செல்லும். மாறாக மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுக்கும் இவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்களின் காதல் மற்றும் திருமண விஷயங்களில் அருமையான ரசனை கொண்டவர்கள். இதற்கு காரணம் அவர்களின் ராசி மட்டுமல்ல, அவர்களுக்கான சரியான நபரை தேர்ந்தெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வதுதான். அதிக உணர்திறனும், புத்திசாலித்தனமும் கொண்ட இவர்கள் தங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள். இவர்கள் தங்களின் இதயம் சொல்வதை கேட்பவர்கள், மற்றவர்களின் கண்களுக்கு தெரியாத தவறுகளை கூட இவர்கள் கவனிப்பார்கள். தங்களுக்கு பொருத்தமானவர்கள் என்று தோன்றும் வரை இவர்கள் ஒருபோதும் தங்கள் முடிவை வெளிப்படுத்தமாட்டார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு காதல் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் சிறந்த ரசனை இருக்கும். ஒருவரை பார்த்த மாத்திரத்திலேயே அவர்களைப் பற்றிய ஒரு கணிப்புக்கு இவர்கள் வந்துவிடுவார்கள். ஒருவரைப் பற்றிய அனைத்து நேர்மறை மற்றும் எதிர்மறை பண்புகளையும் இவர்கள் ஆராய்வார்கள். இவர்கள் விஷயங்களை இலகுவாகச் செய்ய மாட்டார்கள், அவர்கள் ஒருவரின் மீது ஆர்வம் காட்டும்போது அவர்கள்தான் தங்களுக்கானவர்கள் என்று முடிவெடுத்து இருப்பார்கள். இவர்கள் பெர்பெக்ட்டானவர்களை எதிர்பார்க்கமாட்டார்கள், தனக்கு பொருத்தமானவர்களைத்தான் எதிர்பார்ப்பார்கள். இவர்கள் இறுதி முடிவு எப்பொழுதும் இவர்களுக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும்.

கடகம்
அன்பும், குடும்பமும்தான் கடக ராசிகாரர்களுக்கு எல்லாமே, எனவே அதனை பாதிக்கும் எவருடனும் இவர்கள் காதலில் ஈடுபடமாட்டார்கள். இவர்களை வழிநடத்துவது இவர்களின் உள்ளுணர்வுதான், இவர்களின் உள்ளுணர்வே இவர்களை சரியான நபரிடம் அழைத்துச்செல்லும். கடக ராசிக்காரர்கள் தங்களின் துணை இரக்கமுள்ளவர்களாகவும், ஆக்கபூர்வமானவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களை ஆச்சரியப்படுத்தாத எவருடனும் இவர்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். இவர்கள் காதலில் இருக்கும்போது அதில் முழுஅர்பணிப்புடன் இருப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அதிக உணர்ச்சிவசப்படுபவர்களில் ஒருவராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக புத்திசாலித்தனமானவர்களில் இவர்கள் கண்டிப்பாக ஒருவராக இருப்பார்கள். இதனால் இவர்களின் காதல் முடிவுகளில் எப்பொழுதும் தெளிவாக இருப்பார்கள். நீண்டகால பழக்கத்திற்குப் பிறகுதான் இவர்கள் தங்கள் காதலை உறுதிசெய்வார்கள். இவர்கள் தேர்ந்தெடுப்பவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். வேடிக்கையான, கனிவான, சுவாரஸ்யமான, ஆக்கபூர்வமான மற்றும் சிந்தனைமிக்கவர்களை இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். சரியான காதலை தேர்ந்தெடுக்க இவர்களுக்கென தனி பார்முலா இருக்கும்.



Click it and Unblock the Notifications