Latest Updates
-
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த 4 ராசிக்காரங்க உங்க கணவன் அல்லது மனைவியா? அப்ப உங்கள ஈஸியா ஏமாத்தி கள்ள உறவில் ஈடுபடுவாங்களாம்!
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் மென்மையான, இனிமையான மற்றும் அழகான மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். உறவில் ஏற்படும் வாக்குவாதம் மற்றும் சண்டைகளை முதலில் ஆரம்பிப்பதும் அவர்கள்தான்.
உறவில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் விசுவாசமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். தங்கள் துணையை ஏமாற்றும் கணவன் அல்லது மனைவி அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலான தம்பதிகள் வெவ்வேறு காரணங்களுக்காக கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் மற்றும் தங்கள் துணையை ஏமாற்ற துணிகிறார்கள். அதேநேரத்தில் உங்களிடம் மிகவும் விசுவாசமாக இருக்கும் நபர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை தங்கள் வாழ்க்கையின் "ஒரே" அன்பாகப் பார்க்கிறார்கள். நீங்கள் மட்டுமே அவர்களின் வாழ்க்கை என்று இருக்கிறார்கள்.

இருப்பினும், சில குறிப்பிட்ட ஆளுமைப் பண்புகளால் உங்களை ஏமாற்றும் ராசி அறிகுறிகள் உள்ளன. உங்கள் கணவன் அல்லது மனைவி அவர்களில் ஒருவர் என்று நீங்கள் நினைத்தால், மேலும் தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் துணையை ஏமாற்றும் மோசமான போக்கைக் கொண்டுள்ளனர். ஏனெனில், இந்த ராசிக்காரர்களுக்கு அவர்களின் துணையை ஏமாற்றுவது வேடிக்கையாக இருக்கிறது. இவர்களுடன் டேட்டிங் செய்யும் போது, அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வார் மற்றும் நேசிப்பார்கள். ஆனால் மறுபக்கம் என்னவெனில், அவர்களின் எதிர்பார்ப்பை உங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் சலிப்படையக்கூடும். இதனால், இந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கான மகிழ்ச்சியை பெற கள்ள உறவில் ஈடுபடுவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் மென்மையான, இனிமையான மற்றும் அழகான மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். உறவில் ஏற்படும் வாக்குவாதம் மற்றும் சண்டைகளை முதலில் ஆரம்பிப்பதும் அவர்கள்தான். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் விசுவாசமற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களால் ஒரு முடிவை தெளிவாக எடுக்க முடியாது. அப்படி முடிவெடுத்தாலும், அதை அவர்களால் கடைபிடிக்க முடியாது. இந்த ராசிக்காரர்கள் அழகான அனைத்தையும் விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் மற்றொரு அழகான நபரை சந்திக்கும் போது, எளிதில் அவர்களுடன் உறவில் ஈடுபட முடியும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் தூண்டுதல் மற்றும் போட்டி நடத்தை காரணமாக அவர்கள் துணையை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் உங்களுடன் ஒரு ஆழமான காதலை கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு விஷயங்கள் அவர்களுக்கு சலிப்பானதாக தோன்றலாம். அவர்கள் அமைதியற்றவர்கள் மற்றும் நிலையான மாற்றம் தேவை என நினைக்கிறார்கள். இதனால், அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாராட்டப்பட வேண்டும் என்று இந்த ராசிக்காரர்கள் விரும்புகிறார்கள். நீங்கள் ஒரு சிறிய விஷயத்தை விட்டுவிட்டால் கூட அவர்கள் எளிதாக மற்றொருவர் மீது காதலில் விழுந்துவிடுவார்கள். இவர்கள் எளிதாக உங்களை ஏமாற்றலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசம் கொண்டவர்களாக தவறாக கருதப்படுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் மற்றவர்களை எளிதில் ஏமாற்றும் திறன் கொண்டவர்கள், இவர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எப்பொழுதும் அவர்கள் உறவில் உள்ளவற்றுக்கு முற்றிலும் எதிரான விஷயங்களை செய்ய முனைவார்கள். இந்த சிந்தனை செயல்முறைதான் அவர்களை தவறான பாதையில் அழைத்து செல்கிறது. அதனால், வேறொருவருடன் கள்ள உறவில் ஈடுபடுவது இவர்களுக்கு சாதாரணம்.

இதர ராசிக்காரர்கள்
கடகம், ரிஷபம், விருச்சிகம், கன்னி மற்றும் சிம்மம் ஆகிய ராசிக்காரர்கள் அவர்களின் துணைக்கு மிகவும் விசுவாசமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் நேர்மையான துணையாக நடந்துகொள்வார்கள் மற்றும் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியாய் கிடைக்க நீங்கள் தவம் செய்திருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
