Latest Updates
-
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த ராசிக்கராங்க மாதிரி பொண்ணுங்ககிட்ட கடலை போட யாராலும் முடியாதாம் தெரியுமா?
ஆண்களைப் பொறுத்தவரையில் உலகிலேயே கடினமான வேலை எதுவென்றால் பெண்களிடம் பேசுவதுதான்.
ஆண்களைப் பொறுத்தவரையில் உலகிலேயே கடினமான வேலை எதுவென்றால் பெண்களிடம் பேசுவதுதான். அனைத்து விஷயங்களிலும் தைரியமாக இருக்கும் ஆண்களுக்குக் கூட பெண்களிடம் பேசுவது என்றால் உடனடியாக வேர்த்து விடும். ஆனால் சில ஆண்களுக்கு பெண்களிடம் பேசுவது என்பது கை வந்த கலையாக இருக்கும். இவர்களின் தனிச்சிறப்பே இதுவாகத்தான் இருக்கும், விஷயமே இல்லை என்றாலும் இவர்களின் பேச்சு நீண்டுக் கொண்டே செல்லும்.

இவ்வாறு பெண்களுடன் பேசுவது அல்லது கடலைப் போடுவது என்பது வளர்த்து கொள்ளக் கூடிய ஒரு விஷயம்தான் என்றாலும், சிலருக்கு அவர்களின் பிறவியிலேயே இந்த திறன் இருக்கும். இதற்கு அவர்கள் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் கடலை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

சிம்மம்
கடலை போடுவதில் வல்லவர்களாக இருப்பவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்தான். இவர்களுக்கு இதற்கு தந்திரங்கள் எதுவும் தேவையில்லை, இவர்களின் இயல்பான வசீகரம், அனைவருக்கும் பிடித்த குணம் போன்றவையே இவர்களுக்கு போதும். ஆனால் தொடர்ச்சியான கண் தொடர்பு, விளையாட்டான கிண்டல் மற்றும் பாராட்டு போன்றவற்றின் மூலம் இவர்கள் இதை உச்சநிலைக்கு எடுத்துச்செல்வார்கள். இவர்கள் சாதாரணமாக பேசுவார்கள், அதற்கென தனி முயற்சியோ, பயிற்சியோ இவர்களுக்குத் தேவையில்லை. அனைவரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்ப்பது என்பது இவர்களுக்கு பெரிய வேலையாகவே தெரியாது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பேசும்போது அதனை தவிர்ப்பது என்பது முடியாத காரியமாகும். இவர்களின் அதீத வசீகரமும் மர்மமானதாகவே இருக்கும். இவர்கள் அதனை முழுமையாக வெளிப்படுத்த மாட்டார்கள், ஆனால் வெளிப்படுத்த மாட்டார்களா என்று மற்றவர்களை ஏங்க வைப்பார்கள். ஏனெனில் இவர்களின் வசீகரம் சக்திவாய்ந்ததாக இருக்கும். இவர்களின் உள்ளுணர்வு மற்றவர்கள் இவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும், எனவே அவர்களின் மனநிலைக்கு ஏற்றாற்போல இவர்கள் பேசுவார்கள். இவர்கள் உங்களுடன் இருக்கும்போது இவர்களின் உடல் மட்டும்தான் உங்களுடன் இருக்கும். ஆனால் இவர்களின் மனம் வேறு எங்காவது இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அனைவரையும் நேசிக்கக் கூடியவர்கள், வேடிக்கையானவர்கள், சொல்ல வேண்டிய விஷயங்களை சரியாகவும், ரசிக்கும்படியாகவும் பேசுவார்கள். இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள், இவர்கள் கடலைப் போடுகிறார்கள் என்பதை எதிரில் இருப்பவர்கள் உணரவே முடியாது, ஏனெனில் இவர்கள் உண்மையான ஆர்வத்துடன் பேசுவார்கள், இது அவர்களின் வசீகரித்தை மேலும் அதிகரிக்கும். இவர்கள் ஒருவரை பாராட்டும்போது அது உண்மையானதாகவே இருக்கும், ஏனெனில் இவர்கள் பாஸிட்டிவான ஒரு விஷயம் இருந்தால் மட்டும்தான் பேசவே தொடங்குவார்கள். இவர்களின் கவனத்தை ஈர்ப்பது என்பது மற்றவர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கடலை போடுவதில் கில்லாடிகள். வேடிக்கையும், கலகலப்பும் நிறைந்த இவர்கள் கடலை போடுவதை ஒரு சாகசமாக நினைக்கிறார்கள். இவர்களுடன் நேரம் செலவிட அனைவரும் விரும்புவார்கள், இதனால் இவர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவர்களாக இருப்பார்கள். ஆர்வமும், வசீகரமும் நிறைந்த இவர்கள் ஒருவரின் கண்களைப் பார்த்து பேசும்போது எதிரில் இருப்பவர்கள் நிச்சயம் மயங்கிவிடுவார்கள். நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் முதல் நகர்வைச் செய்வதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கடலைப் போடுவது மேஷத்திற்கு ஒரு விளையாட்டாக இருக்கலாம், மேலும் அவர்கள் ஒருபோதும் அதனை இழக்க விரும்புவதில்லை.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் புதிய நபர்களைச் சந்திக்கவும், புதிய இடங்களுக்குச் செல்லவும், எல்லாவற்றையும் அனுபவிக்கவும் விரும்புகிறார்கள். எனவே கண்டிப்பாக இவர்கள் கடலைப் போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அனைத்து விஷயங்களையும் வேகமாக செய்யும் இவர்கள், இந்த வேலையை மட்டும் பொறுமையாக செய்வார்கள். கடலைப் போடுவது இவர்களுக்கு இயல்பாகவே வரக்கூடிய ஒன்றாகும் எனவே அதற்காக அதீத முயற்சி எடுக்க வேண்டும் என்ற அவசியம் இவர்களுக்கு இல்லை.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நட்பாகவும்,உண்மையாகவும் பழகக்கூடியவர்கள். மற்றவர்களுடன் பேசும்போது நுட்பமாக பேசக்கூடியவர்கள், இதை இவர்கள் கடலைப் போடுவதிலும் பின்பற்றுவார்கள். எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பார்கள், முடி அல்லது உடையுடன் விளையாடிக் கொண்டே இருப்பார்கள், மற்றவர்களின் செயல்களுக்கு முதலில் கருத்து சொல்வது இவர்களாகத்தான் இருக்கும். இவர்கள் எப்பொழுதும் பெண்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அவர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் அவர்களை மிகவும் ஸ்பெஷலாக உணரவைக்கும். முகஸ்துதி பாடுவதில் இவர்களை மிஞ்ச ஆளே கிடையாது.



Click it and Unblock the Notifications











