Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த 5 ராசிக்காரங்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்...ரிஸ்க் எடுக்கறது இவங்க இரத்தத்துலேயே இருக்காம்!
வாழ்க்கை எப்போதுமே நாம் நினைக்கிற மாதிரி செல்வதில்லை. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை எப்போதும் நம்மால் கணிக்க முடியாது.
வாழ்க்கை எப்போதுமே நாம் நினைக்கிற மாதிரி செல்வதில்லை. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை எப்போதும் நம்மால் கணிக்க முடியாது. எனவே எதையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கும் தைரியம் எல்லோருக்கும் இருக்காது. பலர் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக கடக்க நினைக்கிறார்கள், தங்களுக்கு தெரிந்ததை மட்டும் செய்து எச்சரிக்கையாக அனைத்தையும் செய்ய நினைக்கிறார்கள்.

வெகுசிலரே தைரியமாக வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். இவர்கள் கண்களுக்கு வாழ்க்கையில் தெரியும் அனைத்துமே சவால்கள்தான். இந்த போர்க்குணம் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். பிற்காலத்தில் வருந்துவதற்கு எதுவும் இல்லை என்பதற்காக வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பதை விரும்புகிற ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் இரட்டை ஆளுமைக்காக புகழ் பெற்றவர்கள், இது அவர்களின் மனநிலையையும் பிரதிபலிக்கிறது. அவர்கள் திடீரென்று செய்ய விரும்பாத ஒன்று இருந்தால், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். முடிவெடுக்கும் தருணத்தின் உத்வேகம் இந்த நபர்களிடம் மிக அதிகமாக இருக்கும். அதனால் ரிஸ்க் எடுப்பது அவர்களுக்கு அவ்வளவு பெரிய விஷயமல்ல. அதனால் ஏற்படும் விளைவுகளையும் இவர்கள் திறம்பட சமாளிப்பார்கள்.

சிம்மம்
காட்டின் ராஜாவான சிங்கம் ரிஸ்க் எடுக்காமல் வேறு யார் ரிஸ்க் எடுக்கப்போகிறார்கள் இவர்கள் இந்த பட்டியலில் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை இவர்கள் நடக்க வைக்கிறார்கள். விரும்பியதை அடைய இவர்கள் எந்த ரிஸ்க்கையும் எடுப்பார்கள். ரிஸ்க் எடுக்கும்போது அட்ரிலின் சுரப்பது இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

விருச்சிகம்
இவர்கள் நிச்சயமாக ஒரு துணிச்சலான ஆன்மாவாக இருப்பார்கள். நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக விளையாடினால், நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்துவீர்கள், புதிதாக எதையும் கற்றுக் மாட்டீர்கள் என்ற கோட்பாட்டை அவர்கள் நம்புவதால் அவர்கள் ரிஸ்க் எடுக்கிறார்கள். அவர்கள் உற்சாகத்தையும் பல்வேறு புதிய அனுபவத்தையும் விரும்புகிறார்கள். அதற்காக எந்த ரிஸ்க்கும் எடுப்பார்கள்.

தனுசு
இந்த ராசிக்காரர்கள் மிகவும் சாகச குணம் கொண்டவர்கள். அவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதை விரும்புகிறார்கள், அவர்களின் வாழ்க்கையின் பயோடேட்டாவில் வெவ்வேறு அனுபவங்களைச் சேர்க்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆபத்தான பாதையில் செல்ல விரும்புகிறார்கள்.

கும்பம்
வேறு யாரும் இதற்கு முன் செய்யத் தயாராக இல்லாததைக் காணும்போது இவர்கள் அதைச் செய்ய விரும்புகிறார்கள், மேலும் இந்த ஆபத்து எடுக்கும் அணுகுமுறை இவர்களின் வேலையில் பிரகாசிக்கிறது. ஒரு கும்பத்தின் ஆளுமை மிகவும் தனித்துவமானது. இதுவரை யாரும் செல்லாத பாதையில் செல்ல பயப்படுவதில்லை. அவர்கள் புதிய விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications