Latest Updates
-
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
'இந்த' 5 ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாசத்துக்கு மேல பணம் கொட்டோ கொட்டுனு கொட்டபோகுதாம் தெரியுமா?
விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாட்டரி கிடைக்காது. ஆனால், இந்த ராசிக்காரர்கள் வசதியான நிதியாண்டில் அங்கும் இங்கும் சில லாபங்களை பெறுவார்கள். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகுதான் அவர்களின் நிதிநிலை இந்த ஆண்டு உச்சத்தில் இருக்கும்
பொதுவாக மனிதர்கள் எல்லாருக்கும் அதிக செல்வ வளம் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு பெரிய செல்வதராகவோ அல்லது பணக்காரராகவோ ஆசை இருக்கும். ஆனால், இது எத்தனை பேருக்கு சாத்தியம் ஆகிறது என்பது கேள்விக்குறி. ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு வேலை அல்லது தொழில் செய்கிறோம். சில நாட்கள் வருமானம் நன்றாக இருக்கும். பல நாட்கள் மிகவும் மோசமான நிதிநிலையை பெற்றிருப்போம். எப்படி இருந்தாலும் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்.

என்றைக்காவது ஒருநாள் செல்வ வளம் பெற்று, வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்போம் என நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்களின் ஜோதிடம் அதற்கு பதில் கூறும். ஒவ்வொரு வருடமும் பணம் சம்பாதித்து செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்டம் நம் அனைவருக்கும் இல்லை. இந்த வருடம் 5 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் நட்சத்திரங்கள் உள்ளன. நீங்கள் அவர்களில் ஒருவரா இல்லையா என்பதை அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக அவர்கள் தங்கள் கடின உழைப்பால் நிறைய சாதிப்பார்கள். நிறைய அதிர்ஷ்டம் அவர்களை வந்து சேரும். செல்வமும் பணமும் வந்து சேரும் இந்த வருடத்தில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் வைத்திருக்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வளம் பெறுவார்கள். 2022 ஆம் ஆண்டில் அவர்களின் ஜாதகத்தின் சிறப்பம்சமாக கல்வி நாட்டம் இருப்பதாகத் தெரிகிறது. கன்னி ராசி நேயர்கள் மாணவர்கள், தாங்கள் எதிர்பார்த்த வெளிநாட்டுக் கல்வி மற்றும் பணிகளைப் பெற முடியும். இது இந்த ஆண்டின் கடைசி காலாண்டாக இருக்கும், இந்த ஆண்டு கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டம் அடிப்பதை நீங்களே பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாட்டரி கிடைக்காது. ஆனால், இந்த ராசிக்காரர்கள் வசதியான நிதியாண்டில் அங்கும் இங்கும் சில லாபங்களை பெறுவார்கள். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகுதான் அவர்களின் நிதிநிலை இந்த ஆண்டு உச்சத்தில் இருக்கும்.

தனுசு
தனுசு ராசி நேயர்களின் நிதிக்கு இது சாதகமான ஆண்டாகும். அதனால், இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு முன்னேற்றம் காண்பதோடு, இந்த ஆண்டு மாணவர்களுக்கும் படிப்பும் நன்றாக இருக்கும். இருப்பினும், பருவகால மாற்றங்கள் காரணமாக அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும்.

கும்பம்
இந்த ராசிக்காரர்களுக்கு நிதிநிலையில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் செவ்வாய், சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களின் பரஸ்பர இணைப்பால் வெற்றி கிடைக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், கும்ப ராசிக்காரர்கள் தங்கள் நீண்ட கால முதலீடுகளின் பலன்களை பெறுவார்கள். தங்கள் நிதியை எவ்வாறு கையாள்வது என்பதில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications