Just In
- 1 hr ago
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- 2 hrs ago
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- 3 hrs ago
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- 4 hrs ago
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
Don't Miss
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- News
42 லட்சம் பேர் இணைக்கவில்லை.. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்னும் 3 நாட்களே கால அவகாசம்!
- Movies
தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இந்த 5 ராசிக்காரங்கள விமர்சிக்கவே கூடாதாம்...மீறி விமர்சிச்சா..உங்க வாழ்க்கையையே அழிச்சிடுவாங்களாம்!
ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனித்தனி குணநல பண்புகள் உள்ளன. அந்த பண்புகளை பொறுத்து அவர்களின் வாழ்க்கையும் அமையும். ஒரு சிலர் மிகுந்த கோபம் கொண்டவர்களாகவும், ஒரு சிலர் ரொம்ப அமைதியானவர்களாகவும் இருப்பார்கள். இவ்வுலகில் உள்ள எல்லா மனிதர்களும் எல்லா விஷயத்திலும் மிகச் சரியானவர்களாக இருப்பதில்லை. நாம் வாழும்போது, பல விஷயங்களை அனுபவங்கள் வாயிலாக கற்றுக்கொள்கிறோம். நம்மை நாம் வளர்த்து மேம்படுத்திக்கொள்ள நம் வாழ்வில் ஒரு சிறிய விமர்சனம் தேவைப்படுகிறது. இது நமக்கு பல நேரங்களில் நன்மையானதாக இருக்கலாம்.
ஆனால், நம்மில் சிலர் விமர்சனங்களைத் தாங்க முடியாமல், அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், முழுச் சூழ்நிலைக்கும் மோசமாக நடந்துகொள்வார்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஊக்கமளிக்கும் வகையில் எடுத்துக்கொள்ள முடியாத ராசி அறிகுறிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவராகவும், தன்னை நேசிப்பவராகவும் இருப்பது அவர்களின் பாதுகாப்பின்மையை நன்றாக மறைக்கிறது. அவர்கள் தங்களுக்கு இருக்கும் சமூக அந்தஸ்த்து மற்றும் பெயர் பற்றி அதிக விழிப்புடன் இருப்பார்கள். தனிப்பட்ட முறையில் தங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அவர்கள் எப்போதும், முன்னோக்கி செல்வார்கள். மேலும், அவர்கள் தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை எடுத்துக்கொள்கிறார்கள். ஏனெனில் அது அவர்களின் ஈகோவை நேராக பாதிக்கிறது. அவர்கள் ஒருபோதும் விமர்சனத்திற்கு நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருக்க முடியாது. மாறாக அவர்கள் எந்த காரணமும் இல்லாமல் பாதிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதாக உணர்கிறார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் எவ்வளவு சரி, எவ்வளவு தவறு என்று அவர்களுக்கு சரியாகத் தெரியும். ஆனால் அதை வேறு யாராவது சுட்டிக் காட்டினால் அவர்களுக்குப் பிடிக்காது. சுய பகுப்பாய்வாளர்களாக இருப்பதால், அவர்கள் தங்களை போதுமான அளவு விமர்சிக்கிறார்கள். வேறு யாராவது அதை சத்தமாக செய்யும்போது, அதை வெறுக்கிறார்கள். மற்ற நபர் தங்களை இழிவுபடுத்த நினைப்பதாகவும், வெளியில் அவர்களை அவமதிக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்திறன் மற்றும் உணர்ச்சிகரமான நபர்களாக இருப்பார்கள். அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் இதயத்திற்கு நேராக எடுத்துக்கொள்கிறார்கள் மற்றும் உடனடியாக பாதிக்கப்படுவதை உணர்கிறார்கள். சிறிதளவு விமர்சனம் கூட அவர்களை மிக எளிதாக பாதிக்கும். ஒரு கருத்தை அனுப்பும் முன் அல்லது செல்லுவதற்கு முன் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். ஏனென்றால் அவர்கள் உங்களை அவர்களின் இதயத்திலிருந்தும் அவர்களின் சமூக ஊடகங்களிலிருந்தும் வெளியேற்றி உங்களை தவிர்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பரிபூரணவாதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் விட உயர்ந்தவர்களாக உணர்கிறார்கள். அவர்களின் புத்திசாலித்தனம், பணி நெறிமுறை மற்றும் படைப்பாற்றல் திறன்களை சந்தேகிக்க முடியாது மற்றும் சந்தேகிக்கக்கூடாது என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே யாராவது அவர்களை விமர்சிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் எளிதில் கோபமடைவார்கள். தங்களைச் சரியென்றும் மற்றவர் தவறு என்றும் நிரூபிப்பதில் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.

மீனம்
எந்த விமர்சனத்தை முன் வைத்தாலும் மீன ராசிக்காரர்களுக்கு பிடிக்காது, விலகி சென்றுவிடுவார்கள். இந்த ராசிக்காரர்கள், மற்றவர்களால் விமர்சிக்கப்படும்போது, அவர்களின் நம்பிக்கையையும் சந்தோஷமும் சிதைத்துவிடும். அவர்களை விமர்சிப்பதற்கு முன், அவர்களின் மோசமான செயல்களை சந்திக்க எப்போதும் தயாராக இருங்கள். ஏனென்றால் நீங்கள் அவர்களை எப்படி உணர வைத்தீர்கள் என்பதை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். தங்கள் முன்னேற்றத்திற்காக அதை எடுத்துக்கொண்டு கற்றுக்கொள்கிறார்கள்.