Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
2023-ல் அதிக வெற்றியையும், பணத்தையும் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
2023 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு நிறைய முன்னேற்றமும், பணமும் தரும் ஆண்டாக இருக்கப் போகிறது.
2023 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ளன. அனைவருக்குமே இந்த புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதுவும் 2023 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு நிறைய முன்னேற்றமும், பணமும் தரும் ஆண்டாக இருக்கப் போகிறது.

அதுவும் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும் அதோடு, காதல், திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். இப்போது 2023 ஆம் ஆண்டில் வாழ்வில் முன்னேற்றத்தையும், வெற்றியையும் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு அற்புதமாக இருக்கப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த முன்னேற்றம் 2023 ஆம் ஆண்டின் ஜனவரியில் கிடைக்கப் போகிறது. தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம்
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்கப் போகிறது. சனிப்பெயர்ச்சியால் வாழ்க்கை நேர்மறையாக இருக்கும். இந்த ஆண்டில் சில பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டம் சற்று ஆதரவாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பளம் உயர வாய்ப்புள்ளது. வியாபாரம் வேகமாக வளரும். அரசு வேலை செய்பவர்களுக்கு ஏப்ரல் முதல் அற்புதமாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். உங்களின் ஒரு பெரிய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்ய சிறந்த காலம். இருப்பினும், ஆண்டின் இரண்டாம் பாதியில் மட்டுமே முதலீடுகளை செய்ய வேண்டும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு முழுவதும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டில் பெரிய முன்னேற்றம், பணம், வெற்றி, மகிழ்ச்சி என அனைத்துமே கிடைக்கப் போகிறது. ஆண்டின் தொடக்கம் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். வருமானம் அதிகரித்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். முதலீடு செய்ய சிறந்த ஆண்டு. வேலை-வியாபாரத்திற்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும்.

கும்பம்
2023 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு பண விஷயமானது ஏற்ற இறக்கமாக இருக்கும். இருப்பினும் கடைசியில் சனி நற்பலன்களைக் கொடுத்தே செல்வார். வருமானம் அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தினால், வங்கி இருப்பானது வலுவாக இருக்கும். ஷேர் மார்கெட்டில் நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மறக்க முடியாத பயணத்தை மேற்கொள்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
