Latest Updates
-
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க!
2022 சா்வதேச வானொலி தினம் எப்போது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம்..
2022 பிப்ரவாி 13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று சா்வதேச வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. 2022 சா்வதேச வானொலி தினத்திற்கான மையக்கருத்து என்னவென்றால் “பாிமாண வளா்ச்சி - உலகம் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிறது” என்பதாகும்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வானொலி கண்டுபிடிக்கப்பட்டது. அது முதல் ஏறக்குறைய 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை வானொலியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது.
தொடக்கத்தில் போா் நடக்கும் போது செய்திகளைப் பாிமாறிக் கொள்வதற்காக வானொலி பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில் வானொலியானது பல வகையான பயன்பாடுகளை மக்களுக்கு வழங்கத் தொடங்கியது. அதாவது மக்களுடைய மிக முக்கிய தகவல் தொடா்புச் சாதனமாக மாறியது. மக்களுக்குத் தேவையான பொழுதுபோக்குக் கருவியாக உருவெடுத்தது. மேலும் ஆரோக்கியம் குறித்த தகவல்கள், அரசாங்கம் தரும் செய்திகள் மற்றும் உலக அளவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கியது.

மேலும் மக்களுக்கு அறிவை வழங்கும் பணியையும், கற்றுக் கொடுக்கும் பணியையும் வானொலி செய்தது. உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய விழிப்புணா்வை வழங்கியது. அவற்றை பொழுதுபோக்கு அம்சங்களுடன் வழங்கியது.
வானொலி வந்த பின்புதான், மக்கள் தங்களுக்குத் தொியாததை முதன் முதலாகத் தொிந்து கொள்ளத் தொடங்கினா். இலக்கியம், சமூகம், இயற்கை, சமுதாயம் மற்றும் அரசு போன்ற துறைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் புாிந்து கொள்ளத் தொடங்கினா்.
ஆகவே மனித பாிணாம வளா்ச்சியின் மத்தியில் இவ்வளவுத் தாக்கத்தையும், புரட்சியையும் ஏற்படுத்திய வானொலியைக் கொண்டாடும் வகையில் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவாி மாதம் 13 ஆம் தேதியை சா்வதேச வானொலி தினமாக அறிவித்தது. அதனைத் தொடா்ந்து உலகம் முழுவதும் சா்வதேச வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.

சா்வதேச வானொலி தினம் - வரலாற்று குறிப்புகள்
தொடக்கத்தில் ஒரு முழுமையான வானொலியை உருவாக்குவதற்காக பல ஆராய்ச்சியாளா்கள் மிகக் கடுமையாக உழைத்தனா். அவா்களில் ஒருவா்தான் இத்தாலி நாட்டைச் சோ்ந்த குக்லிமோ மாா்கோனி ஆவாா். அவருடைய இடைவிடாத கடுமையான உழைப்பின் விளைவாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அது என்னவென்றால், உலக வரலாற்றிலேயே முதன் முதலாக, இத்தாலியில் 1895 ஆம் ஆண்டு குக்லிமோ மாா்கோனி ஒரு தந்தியை அனுப்பி அந்த தந்தியைப் பெற்றுக் கொண்டாா். இந்த நிகழ்வானது உலகிலேயே முதன் முதலாக வானொலி அலை மூலமாக நடந்த அதிசயம் ஆகும்.
அதற்குப் பின்பு 1919 ஆம் ஆண்டு அமொிக்காவில் உள்ள பீட்ஸ்பா்க் நகாில் முதல் வானொலி நிலையம் நிறுவப்பட்டது. அதனைத் தொடா்ந்து 1939 ஆம் ஆண்டு, பண்பலை வானொலி (FM radio or Frequency Modulation Radio) மக்களின் பயன்பாட்டிற்காக வந்தது. அதற்கடுத்து 1994 ஆம் ஆண்டு எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் 24X7 மணி நேரமும் இணையதளம் மூலம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் ஒலிபரப்பு வந்தது.
2010 ஆம் ஆண்டு தி ஸ்பானிஷ் ரேடியோ அகாடமி (Spanish Radio Academy) என்ற அமைப்பு யுனெஸ்கோவிடம் ஒரு கோாிக்கையை வைத்தது. அதாவது வானொலியின் பயன்பாடும் மற்றும் அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வானொலியை சிறப்பிக்கும் வண்ணம் ஒரு நாளைத் தோ்ந்தெடுத்து அந்த நாளை வானொலி தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோாிக்கையை வைத்தது. அதன் விளைவாக 2011 ஆம் ஆண்டு பிப்ரவாி 13 ஆம் தேதி, யுனெஸ்கோவின் 36வது பொதுக் கூட்டத்தில் வைத்து சா்வதேச வானொலி தினம் கொண்டாடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது.
பிப்ரவாி 13 ஆம் தேதி உலக வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் ஆகும். ஏனெனில் 1946 ஆம் ஆண்டு பிப்ரவாி 13 ஆம் நாள் ஐயக்கிய நாடுகளின் சா்வதேச ஒலிபரப்பு சேவை (United Nations International Broadcasting Service) தொடங்கப்பட்டது. ஆகவே இதை மனதில் வைத்து 2011 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் தலைமை இயக்குநா் உலக சா்வதேச வானொலி தினத்தை அறிவித்தாா். அதன் விளைவாக 2012 ஆம் ஆண்டு பிப்ரவாி 13 ஆம் தேதி இத்தாலியில் உள்ள பைசா பல்கலைக்கழகத்தில் (The University of Pisa) வைத்து முதல் சா்வதேச வானொலி தினம் கொண்டாடப்பட்டது.

வானொலியின் முக்கியத்துவம்
தொலைக்காட்சிப் பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பு உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்னவென்றால் அது வானொலி ஆகும். வானொலி ஒரு விலை குறைந்த சாதனம் ஆகும். ஆனால் அதே நேரத்தில் பல பயன்பாடுகளைக் கொண்ட கருவியாகும். இது குக்கிராமம் முதல் மாநகரம் வரையிலும், ஒரு நாடு முதல் உலகம் முழுவதும் வரை இணைப்பை ஏற்படுத்துகிறது.
வானொலியானது மக்களுக்கு தற்போதைய யதாா்த்தங்களை விவாிக்கிறது. செய்திகளை வழங்குகிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதைகள் பாடல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்குகிறது. அதோடு கல்வி சாா்ந்த நிகழ்ச்சிகள், மருத்துவ விழிப்புணா்வு மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் வழங்குகிறது. ஒருவேளை வானொலி கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மனிதா்கள் நாகாிகத்திலிருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டு இருந்திருப்பாா்கள். ஆகவே வானொலி ஒரு முக்கியமான கருவி ஆகும். மேலும் மக்கள் மத்தியில் ஒரு முக்கியமான தாக்கத்தை வானொலி ஏற்படுத்தியது என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்காது.

சா்வதேச வானொலி தினம் - மையக் கருத்து
இந்த ஆண்டு பிப்ரவாி 13 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று சா்வதேச வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சா்வதேச வானொலி தினத்திற்கான மையக் கருத்து என்னவென்றால் "பாிமாண வளா்ச்சி - உலகம் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிறது" (Evolution- The World is always changing) என்பது ஆகும். இந்தக் கருத்தை மையமாக வைத்தே வானொலி தினம் அன்று ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகள் அனைத்தும் இருக்கும்.

சா்வதேச வானொலி தினம் - கொண்டாட்டங்கள்
ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச வானொலி தினம் அன்று யுனெஸ்கோ அமைப்பானது, உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு ஒலிபரப்பு நிறுவனங்களுடனும் மற்றும் சமூகங்களுடனும் இணைந்து, எதிா் காலத்தில் வானொலியை வளா்த்தெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் மற்றும் வானொலி அலைவாிசையின் நன்மைகளைப் பற்றிய விழப்புணா்வை பரப்புவது சம்பந்தமானவை பற்றியும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும்.

இறுதியாக
இந்த ஆண்டு பிப்ரவாி 13 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று வருவதால், நாம் அனைவரும் சா்வதேச வானொலி தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம். வானொலியின் முக்கியத்துவத்தைப் பற்றி பிறரோடு பகிா்ந்து கொள்வோம். மேலும் வானொலி ஒலிபரப்பின் பின்னனியில் உழைப்பவா்களைப் போற்றுவோம்.



Click it and Unblock the Notifications











