For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

50 கோடி மக்களின் உயிரை பறித்த வரலாற்றின் கொடூரமான தொற்றுநோய் ஏன் இதுவரை முடிவுக்கே வரவில்லை தெரியுமா?

நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வண்ணம் 50 முதல் 100 மில்லியன் மக்கள் 1918-1919 காய்ச்சல் தொற்றுநோயால் மரணித்தனர். இந்த தொற்றுநோய் ஸ்பானிஷ் ப்ளூ என்று அழைக்கப்பட்டது.

|

நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வண்ணம் 50 முதல் 100 மில்லியன் மக்கள் 1918-1919 காய்ச்சல் தொற்றுநோயால் மரணித்தனர். இந்த தொற்றுநோய் ஸ்பானிஷ் ப்ளூ என்று அழைக்கப்பட்டது. இது ப்ளாக் டெத்-க்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான உலகளாவிய தொற்றுநோயாகும், மேலும் இளம் மற்றும் ஆரோக்கியமானவர்களைத் தாக்கும்அரிதான வைரஸாக இது இருந்தது, அமெரிக்காவில், 1918 காய்ச்சல் தொற்றுநோய் சராசரி ஆயுட்காலத்தில் 12 ஆண்டுகளைக் குறைத்தது.

Why the 1918 Flu Pandemic Never Really Ended?

1918 காய்ச்சலைப் பற்றி இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தொற்று நோய் வல்லுநர்கள் கூறுகையில், அது எப்போதும் முடிவுக்கே வரவில்லை. 1918 மற்றும் 1919 ஆம் ஆண்டுகளில் உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பாதித்த பின்னர், ஸ்பானிஷ் காய்ச்சலை ஏற்படுத்திய H1N1 திரிபு பிற்காலத்தில் குறைந்து வழக்கமான பருவகால காய்ச்சலாக மாறியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொற்றுநோய்களின் தாய்

தொற்றுநோய்களின் தாய்

ஒவ்வொரு முறையும், 1918 காய்ச்சலின் பிறழ்வுகள் பறவை காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சலுடன் இணைந்து சக்திவாய்ந்த புதிய தொற்றுநோய்களை உருவாக்கினர், இது 1957, 1968 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தது. இந்த காய்ச்சல் அனைத்தும் 1918 வைரஸால் உருவாக்கப்பட்டன, மேலும் மில்லியன் கணக்கான கூடுதல் உயிர்களைக் கொன்றது, 1918 காய்ச்சலை "அனைத்து தொற்றுநோய்களின் தாய்" என்ற மோசமான தலைப்பைப் பெற்றது. முதல் உலகப்போரைக் காட்டிலும் இது அதிகளவிலான உயிர்களைப் பறித்தது.

வைரஸ் மூன்று அலைகளாக தாக்கியது

வைரஸ் மூன்று அலைகளாக தாக்கியது

1918 ஆம் ஆண்டு தொற்றுநோய் 12 மாத காலப்பகுதியில் மூன்று தனித்துவமான அலைகளில் தாக்கியது. இது முதன்முதலில் 1918 வசந்த காலத்தில் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும்பாலும் முதலாம் உலகப் போரின் அகழிகளில் தோன்றியது, பின்னர் 1918 இலையுதிர்காலத்தில் அதன் கொடிய வடிவத்தில் மீண்டும் தோன்றியது, செப்டம்பர் முதல் நவம்பர் வரை உலகளவில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. 1919 ஆம் ஆண்டின் குளிர்காலத்தின் பிற்பகுதியிலும் வசந்த காலத்திலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் இறுதி அலை வீசியது. மூன்றாவது அலைக்குப் பிறகும் வேறு வடிவத்தில் இந்த வைரஸ் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வைரஸ் பருவக்காய்ச்சலாக மாறியது

வைரஸ் பருவக்காய்ச்சலாக மாறியது

முழு உலகமும் வைரஸுக்கு ஆளாகியிருந்ததால், அதற்கு எதிராக இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டதால், 1918 திரிபு "ஆன்டிஜெனிக் சறுக்கல்" என்று அழைக்கப்படும் ஒரு செயல்பாட்டில் பிறழ்ந்து உருவாகத் தொடங்கியது. 1918 காய்ச்சலின் சற்றே மாற்றப்பட்ட பதிப்புகள் 1919-1920 மற்றும் 1920-1921 குளிர்காலங்களில் மீண்டும் தோன்றின, ஆனால் அவை மிகக் குறைவான ஆபத்தை ஏற்படுத்தியது மற்றும் பருவகால காய்ச்சலிலிருந்து கிட்டத்தட்ட பிரித்தறிய முடியாததாக இருந்தது.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் கொரோனா தொற்று ஆபத்தான நிலைக்கு போயிருச்சுனு அர்த்தமாம்... உஷார்...!

வைரஸின் மாற்றம்

வைரஸின் மாற்றம்

1918-ல் ஏற்பட்ட காய்ச்சல் 1920 களின் முற்பகுதியில் அதன் உண்மையான வடிவத்தை இழந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் நம்பமுடியாதது என்னவென்றால், மரபணு பகுப்பாய்வுகளின்படி, 1918 ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே காய்ச்சல் கடந்த நூற்றாண்டில் நாம் கொண்டிருந்த ஒவ்வொரு பருவகால மற்றும் தொற்றுநோய்களின் நேரடி மூதாதையராகத் தோன்றுகிறது. 1918 வைரஸின் மரபணு தடயங்களை இன்றும் புழக்கத்தில் இருக்கும் பருவகால வைரஸ்களில் நீங்கள் காணலாம். கடந்த 102 ஆண்டுகளில் இன்ஃப்ளூயன்ஸா A உடன் ஒவ்வொரு மனித தொற்றுநோயும் 1918 காய்ச்சலில் இருந்து பெறப்பட்டது.

தொற்றுநோய்களின் காலம்

தொற்றுநோய்களின் காலம்

1918 ஏற்பட்ட இந்த காய்ச்சல்தான் 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய தொற்றுநோயாக இருந்து வருகிறது. இருப்பினும் இது மட்டும்தான் பேரழிவை ஏற்படுத்திய தொற்றுநோயா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இரண்டாம் உலகப்போருக்கு பின் ஏற்பட்ட பருவக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்ட நிலையில், காய்ச்சல் வைரஸ் சில எதிர்பாராத மற்றும் ஆபத்தான மாற்றங்களுக்கு உள்ளாகும் என்று நிரூபித்தது.

புதிய வைரஸ் எப்படி உருவாகிறது?

புதிய வைரஸ் எப்படி உருவாகிறது?

ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு விலங்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒரு பறவையிலிருந்து ஒரு வைரஸும், மனிதனிடமிருந்து இன்னொரு வைரஸும் இருக்கலாம், அந்த மரபணுக்கள் ஒன்றிணைந்து இதற்கு முன்பு இல்லாத ஒரு புதிய வைரஸை உருவாக்கலாம். 1957 ஆம் ஆண்டில் H1N1 வைரஸான 1918 காய்ச்சல், மற்றொரு பறவைக் காய்ச்சலுடன் மரபணுக்களை மாற்றிக்கொண்டபோது, H2N2 தொற்றுநோயைக் கொடுத்தது, இது உலகளவில் ஒரு மில்லியன் உயிர்களைக் கொன்றது. 1968 ஆம் ஆண்டில் "ஹாங்காங் காய்ச்சல்" என்று அழைக்கப்படும் H3N2 வைரஸ் உருவாக்கப்பட்டது, இது மற்றொரு மில்லியன் மக்களைக் கொன்றது.

MOST READ: தலைசுற்ற வைக்கும் பண்டைய உலகின் மோசமான பாலியல் வரலாற்று சம்பவங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!

பன்றிக்காய்ச்சல்

பன்றிக்காய்ச்சல்

2009 ஆம் ஆண்டில், பன்றிக்காய்ச்சல் மனித இன்ஃப்ளூயன்ஸா மற்றும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா ஆகிய இரண்டையும் மாற்றி ஒரு புதிய வகை H1N1 காய்ச்சலை உருவாக்கியது, இது 1918ல் ஏற்பட்ட வைரஸை ஒத்ததாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 2009 காய்ச்சல் தொற்றுநோயால் சுமார் 300,000 பேர் இறந்தனர். 1918 மற்றும் 1919 தொற்றுநோய்களில் 50 முதல் 100 மில்லியன் மக்கள் இறந்தார்கள், அடுத்தடுத்த நூற்றாண்டில் பருவகால காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். அந்த மரணங்கள் 1918-ல் ஏற்பட்ட அழிக்க முடியாத வைரஸால் ஏற்பட்டது. அதன் தாக்கத்தை இன்றுவரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why the 1918 Flu Pandemic Never Really Ended?

Read to know why the 1918 flu pandemic never really ended.
Story first published: Thursday, May 20, 2021, 14:49 [IST]
Desktop Bottom Promotion