For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளிக்கும், பிள்ளையார் - லட்சுமிக்கும் உள்ள சுவாரஸ்ய தொடர்பு என்ன தெரியுமா?

தீபாவளி என்பது இராமர் இராவணனை அழித்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாளைத்தான் தீபாவளி என்று கொண்டாடுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இராமர் திரும்பிய நாளன்று அவரை வழிபடாமல் லட்சுமியையும், பிள்ளையாரையும்

|

இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி நெருங்கிவிட்டது. தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டது. தீபாவளி என்பது அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியை கொண்டுவரும் விழாவாக கருதப்படுகிறது. இந்த நாளில் கடவுளை வழிபடுவது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. பொதுவாக இந்த நாளில் லட்சுமியையும், பிள்ளையாரையும் வழிபட வேண்டும்.

Why Laxmi and Ganesh Worshipped On Diwali, Not Lord Rama

தீபாவளி என்பது இராமர் இராவணனை அழித்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாளைத்தான் தீபாவளி என்று கொண்டாடுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இராமர் திரும்பிய நாளன்று அவரை வழிபடாமல் லட்சுமியையும், பிள்ளையாரையும் ஏன் வழிபடுகிறோம் என்பது பலருக்கும் எழுகிற கேள்வியாகும். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீபாவளி

தீபாவளி

தீபாவளி என்பது வெளிச்சத்தின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அமாவசை அன்று கொண்டாடப்படும் இந்த விழா வாழ்க்கையில் இருக்கும் இருளை விரட்டுவதாக இருக்கிறது. தீபாவளி என்பது தீபாவளி பூஜை இல்லாமல் முழுமை அடையாது. ஒவ்வொரு இந்து திருவிழாவும் ஒரு தனித்துவமான பூஜையை கொண்டுள்ளது. அந்த வகையில் தீபாவளி லட்சுமி மற்றும் பிள்ளையார் பூஜையை கொண்டுள்ளது. இந்த பூஜை நமக்கு மகிழ்ச்சியையும், செல்வத்தையும், அமைதியையும் வழங்கும்.

இராமரின் வருகை

இராமரின் வருகை

இராமர் இராவணனை அழித்து விட்டு இராமர் அயோத்தி திரும்பிய நாளை தீபாவளியாக கொண்டாடினார்கள். இந்து புராணங்களின் படி இராமர் அயோத்தி திரும்பிய பிறகு அவர் செய்த முதல் காரியம் லட்சுமி மற்றும் பிள்ளையாரை வழிபட்டதுதான். அந்த தருணத்தில் இருந்து தீபாவளியின் போது லட்சுமி மற்றும் பிள்ளையாரை வழிபடுவது பாரம்பரியமாக மாறியது. தீபாவளி இரவில் லக்ஷ்மி மற்றும் பிள்ளையாரை "தீபாவளி பூஜை" என்று வணங்குவது ஒரு மத வழக்கமாக உருவானது.

MOST READ: பௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா?

காரணம்

காரணம்

நீங்கள் உற்று நோக்கினால், தீபாவளியன்று லட்சுமி மற்றும் பிள்ளையாரை வழிபடுவதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். விஷ்ணுவின் அவதாரம்தான் இராமர் ஆவார், விஷ்ணுதான் பிரபஞ்சத்தின் பாதுகாவலர் ஆவார். அவர் வணங்கிய லட்சுமி மற்றும் பிள்ளையார் இந்த பூமியில் நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியிலும் நாம் எப்போதும் கடவுளை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

இராமரின் வழிபாடு

இராமரின் வழிபாடு

அயோத்தியின் மன்னராக இருந்தஇராமர், மக்களின் நல்வாழ்வு, மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக லட்சுமி மற்றும் பிள்ளையாரை வணங்கினார். அவர்களின் ஆசீர்வாதத்தின் காரணமாக அவருடைய ராஜ்யத்தில் எல்லா சந்தோஷங்களும் இருக்கும் என்று அவர் நம்பினார். தன்னுடைய மக்கள் ஆரோக்கியமானவர்களாகவும், ஞானமுள்ளவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருப்பார்கள், மேலும் சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் முன்னேறுவார்கள் என்று கடவுள் இராமரே நம்பினார்.

இராமருக்கு மரியாதை

இராமருக்கு மரியாதை

சர்வ வல்லமையுள்ள கடவுளின் ஆசீர்வாதத்தை விநாயகர் மற்றும் லட்சுமி தேவியை வழிபடுவதன் மூலம் பெறலாம். இராமர் "ராம ராஜ்யம்" அல்லது நீதியான ஆட்சியைக் குறிப்பதால், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவரைப் பின்பற்றும் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பது சரியானதாகும். லட்சுமி மற்றும் பிள்ளையாரை வழிபடுவதன் மூலம் நாம் அவர்களை வழிபடுவதில்லை மன்னர்களின் மன்னருக்கான இராமரையும் வழிபடுவதாக அர்த்தம்.

MOST READ: இராவணன் ஏன் இராமர் பிறப்பதற்கு முன்னரே இராமருடைய தாயை கடத்திச் சென்றான் தெரியுமா?

லட்சுமி - கணேச பூஜையின் பலன்கள்

லட்சுமி - கணேச பூஜையின் பலன்கள்

லக்ஷ்மி மற்றும் கணேஷை வழிபடுவதன் மூலம், அறிவு, புத்திசாலித்தனம், ஞானம், சுகாதாரம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை நம் வாழ்க்கையில் அழைக்கிறோம். லக்ஷ்மி தேவி அனைத்து செல்வம், பணம் மற்றும் செழுமை ஆகியவற்றின் கடவுள் ஆவார். பிள்ளையார் ஞானம், புத்திசாலித்தனம் மற்றும் வெற்றி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் கடவுளாக கருதப்படுகிறார். இந்த பூஜை ஒருவருக்கு அதைப் பயன்படுத்துவதற்கான புத்திசாலித்தனமும் ஞானமும் இருக்கும்போது மட்டுமே செல்வம் பயனுள்ளதாகவும் ஆசீர்வாதமாகவும் மாறும் என்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றன. பணம் என்பது இந்த உலகில் பொருள் விஷயங்களை அடைவதற்கான வழிமுறையாகும் என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Laxmi and Ganesh Worshipped On Diwali, Not Lord Rama

Read to know why Laxmi and Ganesh worshipped on Diwali, not Lord Rama.
Desktop Bottom Promotion