Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இந்த 5 ராசிக்காரங்க கல்நெஞ்சம் கொண்டவங்க... உறவை முறிக்க கொஞ்சமும் தயங்க மாட்டாங்களாம்...
ஜோதிடத்தின் படி, ஒருவரது இந்த குணங்களானது, அவரது வளர்ப்பு மற்றும் சூழல் மற்றும் ராசி காரணமாகவும் இருக்கலாம். இதில் ராசி காரணமாக இருக்கும் குணங்களானது, அவர்களின் பிறப்பில் இருந்தே உள்ளன.
அனைவராலும் உறவுகளை சிறப்பாக பேணிக்காக்க முடியாது. உறவுகளைப் பேணுவதற்கு பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய இரண்டும் மிகவும் அவசியம். இந்த இரண்டு குணங்களையும் கொண்டவர்கள் உறவுகளை சிறப்பாக பேணுவார்கள். முக்கியமாக இத்தகைய குணங்களைக் கொண்டவர்கள் சிறு விஷங்களையும் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் அவர்களது உறவுகள் பாதிக்கப்படாமல் சிறப்பாக இருக்கும். ஆனால் சிலருக்கு சகிப்புத்தன்மை மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அவர்கள் சிறு விஷயங்களில் கூட தங்களின் பொறுமையை இழந்து உறவை முறித்துக் கொள்ளவும் தயக்கம் கொள்ளமாட்டார்கள்.

ஜோதிடத்தின் படி, ஒருவரது இந்த குணங்களானது, அவரது வளர்ப்பு மற்றும் சூழல் மற்றும் ராசி காரணமாகவும் இருக்கலாம். இதில் சுற்றுச்சூழல் காரணமாக உருவாக்கப்பட்ட குணங்களை மாற்றுவது எளிது. ஆனால் ராசி காரணமாக இருக்கும் குணங்களானது, அவர்களின் பிறப்பில் இருந்தே உள்ளன. அவற்றைக் குறைக்க எவ்வளவு முயற்சித்தாலும், அந்த குணங்கள் நிச்சயம் சிறிது இருக்கும்.
கீழே அப்படிப்பட்ட குணங்களுடன், உறவுகளை பேணத் தெரியாத ராசிக்காரர்களைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ராசிக்காரர்கள் எப்பேற்பட்ட உறவையும் முறித்துக் கொள்ள தயாராக இருப்பார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள். இவர்களிடம் அன்பைப் பொழிந்தால், அவர்கள் எளிதில் இதயத்தைப் பறிகொடுத்துவிடுவார்கள். இதன் காரணமாக இவர்களுக்கு பல உறவுகள் இருக்கும். மேலும் இவர்கள் ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை சொல்லக்கூடியவர்கள். அவர்களின் வார்த்தைகளை யாரும் நம்பவில்லை என்றால், சற்றும் யோசிக்காமல் அந்த உறவை நொடியில் உடைத்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் தங்களின் தவறை உணர்ந்தாலும், அது மிகவும் தாமதமாகவே இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களால் ஒரே நேரத்தில் பல உறவுகளை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்களைப் பிடிப்பது என்பது எளிதல்ல. ஆனால் எவ்வளவு சீக்கிரம் இவர்கள் ஒரு காதலில் விழுகிறார்களோ, அதே வேகத்தில் இவர்கள் அந்த காதலை விட்டு விலகுவார்கள். அந்த அளவு உறவுகளை பெரிதாக நினைக்காதவர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் காதல் விஷயத்தில் உண்மையானவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரையும் ஏமாற்றவோ அல்லது வாக்களிக்கவோ விரும்பமாட்டார்கள். ஆனால் அவர்கள் ஒருமுறை எரிச்சலடைந்துவிட்டால் அல்லது அவர்கள் இதயம் காயப்பட்டுவிட்டால், அந்த உறவை ஒரு நொடியில் முறித்துவிடுவார்கள். அதன் பின் அவர்கள் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். அந்த அளவு கல்நெஞ்சம் கொண்டவர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமான எண்ணம் கொண்டவர்கள். காதலில் யாரையும் ஏமாற்றமாட்டார்கள். ஆனால் யாராவது அவரது சுதந்திரத்தைப் பறிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முயன்றால், அந்த உறவு ஒரே நிமிடத்தில் முறித்துக் கொள்ள தயாராக இருப்பார்கள். இவர்களுக்கு உறவை விட சுதந்திரம் மிகவும் முக்கியம்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் சற்று சுயநலவாதிகள். இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையிடம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். இவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என்றால், இந்த ராசிக்காரர்கள் அந்த உறவை முறித்துக் கொள்ளவும் தயங்கமாட்டார்கள்.



Click it and Unblock the Notifications