Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
உங்களுக்கு பிடிச்ச நம்பர் உங்களை பத்தி சொல்ற விஷயம் சரியான்னு பாருங்க...
ஒவ்வொருவரைப் போன்றே ஒவ்வொரு எண்ணும் வேறுபட்டது. எப்படி ஒருவரது குணாதிசயங்கள் நம் ஒவ்வொருவரின் ராசியை ஆளும் கிரகங்களைப் போன்றதோ, அதேப் போல் எண்களுக்கும் அதிபதிகள் உண்டு.
ஒவ்வொருவருக்கும் இசை, வண்ணங்கள், உணவுகள், நம்பர் போன்றவற்றில் வெவ்வேறான விருப்பம் இருக்கும். ஒருவருக்கு ஒன்றை மிகவும் பிடிக்கிறது என்றால் அதற்கான சரியான காரணத்தை யாராலும் கூற முடியாது. ஆனால் அவர்களது ஆழ்மனதில் அவற்றின் மீது ஈர்ப்பு அதிகமாக இருக்கும். சிலர் தங்களுக்கு பிடித்த நம்பரை அதிர்ஷ்ட எண்ணாக நம்புவார்கள். உங்களுக்கும் அந்த மாதிரியான நம்பர் ஏதேனும் உள்ளதா? உங்களுக்கு மிகவும் பிடித்த நம்பர் உங்களைப் பற்றிய குணாதிசயங்களை வெளிப்படுத்துமா என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா?

ஒவ்வொருவரைப் போன்றே ஒவ்வொரு எண்ணும் வேறுபட்டது. எப்படி ஒருவரது குணாதிசயங்கள் நம் ஒவ்வொருவரின் ராசியை ஆளும் கிரகங்களைப் போன்றதோ, அதேப் போல் எண்களுக்கும் அதிபதிகள் உண்டு. இப்போது உங்களுக்கு பிடித்த நம்பர் உங்களின் குணாதியங்களை சரியாக கூறுகிறதா அல்லது இல்லையா என்பதைக் காண்போம்.

எண் 1
நம்பர் 1 சூரியனால் ஆளப்படுகிறது. இந்த எண் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ஒரு தலைவரைக் குறிக்கிறது. இந்த எண்ணை மிகவும் பிடித்தவர்களின் எண்ணங்கள் தனித்துவமாக இருக்கும். மேலும் இந்த எண் வலிமை மற்றும் துணிச்சலைக் குறிக்கிறது. அதோடு அடிக்கடி திமிர்பிடித்தவர் போன்று நடந்து கொள்வார்கள். இருப்பினும், அழகானவர், புத்திசாலி மற்றும் கவர்ச்சியானவராகவும் இருப்பார்கள். ஊக்கமும், விடாமுயற்சியும் தான் இவர்களை முன்னேற வைக்கிறது.

எண் 2
2 ஆம் எண்ணைப் பிடித்தவர்கள் அதிக உணர்திறன், பச்சாதாபம் மற்றும் கற்பனைத் திறன் கொண்டவர்கள். இந்த எண்ணை ஆளும் கிரகம் சந்திரன். இந்த எண்ணைப் பிடித்தவர்கள் மக்களை ஒன்றிணைத்து அமைதியைக் கொண்டு வருவார்கள். மேலும் இவர்கள் தங்களிடம் உள்ள குறைபாடுகளையும், பலங்களையும் ஏற்றுக் கொள்வார்கள். இதுவே இவர்களின் ஆளுமையை மேம்படுத்துகிறது.

எண் 3
இந்த எண்ணைப் பிடித்தவர்கள் ஆற்றல் மிக்கவர், வெளிப்படையாக பேசுபவர் மற்றும் எதிர்காலத்தை சரியாக கணிக்கக்கூடியவர். மற்றவர்கள் விரைவில் பேசி பழகக்கூடியவர். இந்த எண்ணின் அதிபதி குரு. பொதுவாக மூன்றாம் எண் புனிதமானதாக நம்பப்படுகிறது. இது சமநிலை, அறிவு மற்றும் ஞானத்துடன் தொடர்புடையது.

எண் 4
4 ஆம் நம்பரைப் பிடித்தவர்கள் நிறைய தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். இவர்கள் உண்மையைத் தேடும் புத்திசாலி. வாழ்க்கையில் நம்பமுடியாத அளவிற்கு உறுதியாக இருப்பார்கள். விடாமுயற்சியினால் வாழ்க்கையில் வெற்றி பெற வலுவான வாய்ப்புள்ளது. இந்த எண்ணின் அதிபதி சூரியன்.

எண் 5
5 ஆம் எண்ணைப் பிடித்தவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். மிகவும் தைரியசாலியாக திகழ்வார்கள் .சிறந்த தலைத்துவ திறன்களைக் கொண்டிருப்பார்கள். மிகவும் அறிவாளி மற்றும் படைப்பு திறன்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர். இந்த எண்ணின் அதிபதி புதன்.

எண் 6
6 ஆம் எண்ணின் அதிபதி சுக்கிரன். இது காதல் மற்றும் அமைதிக்கான கிரகம். இந்த எண்ணைப் பிடித்தவர்கள் மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள் மற்றும் மற்றவர்களுக்கு தொடர்ந்து உதவ முயற்சிப்பார்கள். மற்றவர்களின் பிரச்சனைகளை எப்போதும் கேட்க தயாராக இருப்பார்கள். இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர் என்பதால், தங்களின் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், இவர்கள் ஆணவம் கொண்டவர்கள் என்று பலர் அடிக்கடி தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

எண் 7
7 ஆம் எண்ணைப் பிடித்தவர்கள் நம்பகத்தன்மையும், கீழ்ப்படிதலும் உள்ளவர். தேவைப்படும் நபர்களுக்கு கைகொடுக்க எப்போதும் இருப்பீர்கள். 7 ஆம் நம்பர் மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. ஏனெனில் 7 ஆம் எண்ணின் அதிபதி சந்திரன். இந்த எண்ணைப் பிடித்தவர்கள் நம்பமுடியாத அளவிற்கு ஈர்க்கக்கூடியவர் மற்றும் அழகான ஆளுமையைக் கொண்டிருப்பார்கள்.

எண் 8
8 ஆம் எண்ணைப் பிடித்தவர்கள் தங்களின் இலக்குகளை முடிவு செய்துவிட்டால், அதை அடையாமல் விடமாட்டார்கள். இவர்கள் மிகவும் நம்பகமானவர் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டவர். இந்த எண்ணின் அதிபதி சனி.

எண் 9
9 ஆம் எண்ணின் அதிபதி செவ்வாய். இந்த எண்ணைப் பிடித்தவர்களின் முக்கிய நோக்கம் உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இவர்கள் தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பார்கள் மற்றும் புதிய விஷயங்களை செய்ய விரும்புவார்கள். மேலும் இவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் வரை தொடர்ந்து முயற்சிப்பார்கள்.



Click it and Unblock the Notifications
